என் மலர்
நீங்கள் தேடியது "mini lorry accident"
- டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த குன்னத்தூர் பகு தியை சேர்ந்தவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஆடி. கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருந்து நேற்று ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு மினி லாரியில் சென்றனர்.
குன்னத்தூரை சேர்ந்த சின்னராஜ் (வயது 55) மினி லாரியை ஓட்டிச் சென் றார்.
ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து, வேண்டுதலை நிறை வேற்றிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். ஏலகிரி மலை 3-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது மினி லாரி நிலைதடு மாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில் மினி லாரியில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 3 ஆம்புலன்ஸ் கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக் காக திருப்பத்தூர் அரசு மருத் துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வை யிட்டு விசாரணை மேற் கொண்டனர்.
மினி லாரியை ஓட்டி சென்ற டிரைவரும், உரிமையாளருமான சின்னராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் தலைமறைவான டிரைவர் சின்னராஜை இன்று காலை ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பழுதாகி நின்ற லாரி மீது மோதியது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு ஊராட்சி, பச்சக்குப்பம் ெரயில்வே மேம்பாலத்தில், இன்று அதிகாலை மினி லாரி ஒன்று பழுதாகி நின்றது. அப்போது பின்புறமாக வந்த மற்றொரு மினி லாரி, பழுதாகி நின்ற மினிலாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேலூர் சார்பனாமேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தமீம் (வயது 50) படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே கொண்டம் பகுதியில், மாடுகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் ஒரு மினி லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினி லாரி, சிறிது நேரத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
இதில், மினி லாரியின் முன்பகுதி நொறுங்கியது. அதில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MiniLorryAccident #TVMalai
சின்னசேலம்:
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது57). இவர் சின்னசேலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருந்து வந்தார். இவர் தினமும் காலையில் நடை பயிற்சிக்கு செல்வார்.
இன்று காலை வழக்கம் போல் சின்னசேலம் இந்திரா நகர் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுப்பிரமணியன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி பார்சல் லாரி ஒன்று வந்தது.
அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த மினிலாரி மீது மோதியது. அந்த மினிலாரி நிலை தடுமாறி சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த சுப்பிரமணியன் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் மினிலாரி அடியில் சுப்பிரமணியன் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான சுப்பிரமணியனுக்கு மனோன்மணி (51) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
பேரையூர்:
மதுரை, பைக்காராவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சரவணக்குமார் (வயது 38). இவர் கப்பலூர் சிப்கோவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.
தினமும் சரவணக்குமார் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் சரவணக்குமார் வேலைக்கு புறப்பட்டார்.
கப்பலூர் 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணக்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தோப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரன் (33) என்பவரை கைது செய்தனர்.






