மினி லாரி விபத்தில் டிரைவர் படுகாயம்

பழுதாகி நின்ற லாரி மீது மோதியது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மினி லாரி விபத்தில் டிரைவர் படுகாயம்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு ஊராட்சி, பச்சக்குப்பம் ெரயில்வே மேம்பாலத்தில், இன்று அதிகாலை மினி லாரி ஒன்று பழுதாகி நின்றது. அப்போது பின்புறமாக வந்த மற்றொரு மினி லாரி, பழுதாகி நின்ற மினிலாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வேலூர் சார்பனாமேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தமீம் (வயது 50) படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com