என் மலர்
செய்திகள்

பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக மாறியுள்ளது பிரதமர் அலுவலகம் - ராகுல் குற்றச்சாட்டு
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மாணவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, பிரதமர் அலுவலகம் பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக மாறியுள்ளது என குற்றம் சாட்டினார். #LSpolls #RahulGandhi #PMModi
இம்பால்:
பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இம்பாலில் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
உங்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை காங்கிரஸ் பாதுகாக்கும் என உறுதியளிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

பிரதமர் மோடி குறுக்கு வழியில் ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தி, பணமதிப்பிழப்பை கொண்டு வந்துள்ளார். அவர் விளம்பரத்திற்காகவே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். தற்போது பிரதமர் அலுவலகம், பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக மாறியுள்ளது.
பிரதமரின் பல்கலைக்கழக சான்றிதழை இதுவரை எங்களால் பெற முடியவில்லை. பிரதமர் உண்மையிலேயே பல்கலைக்கழகத்துக்கு போய் உள்ளாரா என யாருக்கும் தெரியாது. டெல்லியில் ஆர்டிஐ மூலம் பிரதமரின் பல்கலைக்கழகம் சான்றிதழ் பற்றி கேட்டுள்ளோம். ஆனால் அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவித்தார். #LSpolls #RahulGandhi #PMModi
Next Story