search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்‌ஷய்குமார்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் அக்ஷய்குமார் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார்.

    தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வரும் அக்ஷய் குமார் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.


    என்னதான் இந்திய படங்களில் நடித்தாலும் நடிகர் அக்ஷய் குமார் கனடா நாட்டு குடிமகன் தான் என பலர் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், இவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதற்கான சான்றை பகிர்ந்து தனது சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    நடிகர் அக்ஷய்குமார் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய பாஸ்போர்டுக்காக விண்ணப்பித்ததாகவும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அதை பெறுவதில் காலதாமதமானது என அவர் தெரிவித்திருந்தார். 





    • இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சி தலைவர்கள் மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


    இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். வெறுப்படைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    இதே போல நடிகைகள் ஊர்மிளா மடோன்கர், ரிச்சா சதா, ரேணுகா சஹானே, நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் உள்ளிட்ட பலரும் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதே போல 'மணிப்பூர் வன்முறை', 'போதும் போதும்' போன்ற ஹேஷ்டேக்குகள் பெருமளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.




    • நடிகர் அக்‌ஷய்குமார் 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப், மலையாள நடிகர் பிரித்விராஜ், சோனாக்சி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


    அக்ஷய் குமார்

    இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் மோதும் சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியில் அக்ஷய்குமாருக்கு அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், சண்டை காட்சியை படமாக்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    • நடிகர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.
    • இவர் தற்போது செல்பி திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.

    தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

    தற்போது இவரது நடிப்பில் தயாராகி உள்ள 'செல்பி' இந்தி படம் திரைக்கு வருகிறது. மலையாளத்தில் பிருதிவிராஜ் நடித்து வெற்றிபெற்ற 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் இந்தி ரீமேக் ஆக இது தயாராகி உள்ளது. செல்பி படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்தப்படத்தை அக்ஷய்குமார் வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


    அதாவது அவர் கையில் செல்போனை வைத்துக்கொண்டு 3 நிமிடங்களில் ரசிகர்களுடன் 184 செல்பி புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் ராக் 3 நிமிடங்களில் 105 செல்பி எடுத்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. அவரது சாதனையை அக்ஷய்குமார் முறியடித்துள்ளார். இந்த சாதனையை ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.

    • சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருந்த சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் ரீமேக்கில் பட பெயரை வைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருந்த சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தில் அக்‌ஷய்குமார் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு பெயர் வைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று

    ஊடகங்கள் ஆளுக்கு ஒரு பெயரை யூகத்தின் அடிப்படையில் வெளியிட்டு வருகின்றனர். இது பற்றி தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா கூறியதாவது, படத்திற்கு உரிய நாளில் தலைப்பு அறிவிக்கப்படும் அதற்குள் வதந்தியான பெயர்களை கூற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். 

    • அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சாம்ராட் பிருத்விராஜ்’.
    • மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இரண்டு மாநிலங்கள் வரி விலக்கு.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌ஷய் குமார். இவர் நடித்துள்ள வரலாற்று திரைப்படமான 'சாம்ராட் பிருத்விராஜ்' தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஜூன் 3-ந் தேதி வெளியானது. சந்திரபிரகாஷ் திவிவேதியால் இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ராஜபுத்திர மன்னரான பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கையைப் பற்றிய பிரஜ் மொழி காவியத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.

    இப்படத்தில் அக்‌ஷய் குமார் பிருத்விராஜ் சௌஹானாக நடித்துள்ளார், அதே சமயம் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மனுஷி சில்லர் இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், சோனு சூட் மற்றும் மானவ் விஜ், அசுதோஷ் ராணா மற்றும் சாக்ஷி தன்வார் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


    சாம்ராட் பிருத்விராஜ் படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் மனுஷி சில்லர்

    சாம்ராட் பிருத்விராஜ் படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் மனுஷி சில்லர்

    மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இரண்டு மாநிலங்கள் வரி விலக்கு அளித்தது. இந்நிலையில், இப்படத்தின் காட்சிகள் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி செலவில் உருவான 'சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ 55.05 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

    அதுமட்டுமல்லாமல் படத்திற்கான டிக்கெட்டுகள் சரியாக விற்பனை ஆகாததால் படம் வெளியான முதல் வாரத்திலேயே திரையரங்குகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அண்மையில் கங்கனா ரணாவத்தின் நடிப்பில் வெளியான 'தாகத்' திரைப்படம் வெளியான 8-வது நாளில் வெறும் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×