search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "akshaykumar"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் அக்ஷய்குமார் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார்.

    தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வரும் அக்ஷய் குமார் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.


    என்னதான் இந்திய படங்களில் நடித்தாலும் நடிகர் அக்ஷய் குமார் கனடா நாட்டு குடிமகன் தான் என பலர் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், இவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதற்கான சான்றை பகிர்ந்து தனது சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    நடிகர் அக்ஷய்குமார் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய பாஸ்போர்டுக்காக விண்ணப்பித்ததாகவும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அதை பெறுவதில் காலதாமதமானது என அவர் தெரிவித்திருந்தார். 





    • இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சி தலைவர்கள் மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


    இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். வெறுப்படைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    இதே போல நடிகைகள் ஊர்மிளா மடோன்கர், ரிச்சா சதா, ரேணுகா சஹானே, நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் உள்ளிட்ட பலரும் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதே போல 'மணிப்பூர் வன்முறை', 'போதும் போதும்' போன்ற ஹேஷ்டேக்குகள் பெருமளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.




    • நடிகர் அக்‌ஷய்குமார் 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப், மலையாள நடிகர் பிரித்விராஜ், சோனாக்சி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


    அக்ஷய் குமார்

    இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் மோதும் சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியில் அக்ஷய்குமாருக்கு அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், சண்டை காட்சியை படமாக்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார், 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.


    சூர்யா - அக்‌ஷய்குமார்

    2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் உள்ள மூன்று பாடல்களின் ரெக்கார்டிங் முடிவடைந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு தளத்தில் அக்‌ஷய் குமார் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

    அக்‌ஷய் குமார்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அக்‌ஷய் குமார் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 'சூரரைப் போற்று மாறன் மாதிரி இருக்கும்னு பாத்தா பிதாமகன் விக்ரம் மாதிரி இருக்கானே' என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.
    ×