என் மலர்
நீங்கள் தேடியது "priyadarshan"
- பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் தனது ஓய்வுத் திட்டத்தை பற்றி அறிவித்தார்.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர்.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர்.
திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதைதொடர்ந்து, பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் தனது ஓய்வுத் திட்டத்தை பற்றி அறிவித்தார்.
அதாவது, தான் 100 படங்களை எட்டியதும் திரையுலகிலிருந்து ஓய்வு எடுக்க விரும்புவதாக அவர் கூறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பிரியதர்ஷன் கூறுகையில்," எனது 100வது படம் முடிந்ததும் ஓய்வு பெற விரும்புகிறேன். நான் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருக்கிறேன். பிளான் எதுவுமில்லை. ஆனால் ஒரு விஷயம், எனது 100வது திரைப்படத்தில் மோகன்லால் இருப்பார். ஏனென்றால், நான் இன்று இவ்வாறு இருப்பதே அவரால்தான்'' என்றார்.
மோகன்லால் நடித்த பூச்சக்கொரு மூக்குத்தி (1984) படத்தின் மூலம் பிரியதர்ஷன் இயக்குனராக அறிமுகமானார்.
இதற்கு முன்பு, மோகன்லால் நடித்த திரனோட்டம் (1978) படத்தில் இயக்குனர் வி. அசோக் குமாரிடம் உதவியாளராக பிரியதர்ஷன் பணியாற்றினார்.
பிரியதர்ஷன் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அதே ஹீரோவுடன் (மோகன்லால் ) தனது கடைசி படத்தை இயக்கி ஓய்வு பெற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் வெளி படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட பணிகள் மும்பையில் படமாக்கப்பட இருக்கிறது.
இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹைவான் திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்து தயாரிக்கின்றனர்.
- பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
- இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹைவான் என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் தொடர்பான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், ஹைவான் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹைவான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் தங்களது சமூக வலைத்தள பதிவுகளில் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளனர்.
பிரியதர்ஷன் இயக்கும் ஹைவான் திரைப்படம் மட்டுமின்றி தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா அதிகம் எதிர்பார்க்கப்படும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதியின் ஜனநாயகன், யஷ் நடிக்கும் டாக்சிக் மற்றும் கேடி ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார்.
ஹைவான் திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்து தயாரிக்கின்றனர்.
- முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.
- விஜய் 69-வது திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு படம் தொடர்பான பணிகளை முடித்துக் கொண்டு முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.
அந்த வகையில், விஜய் நடிக்கும் 69-வது திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தைத் தொடர்ந்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் 69 படத்தைத் தொடர்ந்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் சார்பில் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இந்த திரைப்படம் மூலம் அந்நிறுவனம் பாலிவுட்டில் களமிறங்குகின்றன.
கே.வி.என். மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






