தனது 100வது படத்தில் மோகன்லால் நடிப்பது உறுதி- இயக்குனர் பிரியதர்ஷன்

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் தனது ஓய்வுத் திட்டத்தை பற்றி அறிவித்தார்.17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர்.
தனது 100வது படத்தில் மோகன்லால் நடிப்பது உறுதி- இயக்குனர் பிரியதர்ஷன்
Published on

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர்.

திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதைதொடர்ந்து, பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் தனது ஓய்வுத் திட்டத்தை பற்றி அறிவித்தார்.

அதாவது, தான் 100 படங்களை எட்டியதும் திரையுலகிலிருந்து ஓய்வு எடுக்க விரும்புவதாக அவர் கூறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பிரியதர்ஷன் கூறுகையில்," எனது 100வது படம் முடிந்ததும் ஓய்வு பெற விரும்புகிறேன். நான் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருக்கிறேன். பிளான் எதுவுமில்லை. ஆனால் ஒரு விஷயம், எனது 100வது திரைப்படத்தில் மோகன்லால் இருப்பார். ஏனென்றால், நான் இன்று இவ்வாறு இருப்பதே அவரால்தான்'' என்றார்.

மோகன்லால் நடித்த பூச்சக்கொரு மூக்குத்தி (1984) படத்தின் மூலம் பிரியதர்ஷன் இயக்குனராக அறிமுகமானார்.

இதற்கு முன்பு, மோகன்லால் நடித்த திரனோட்டம் (1978) படத்தில் இயக்குனர் வி. அசோக் குமாரிடம் உதவியாளராக பிரியதர்ஷன் பணியாற்றினார்.

பிரியதர்ஷன் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அதே ஹீரோவுடன் (மோகன்லால் ) தனது கடைசி படத்தை இயக்கி ஓய்வு பெற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com