பிரியதர்ஷனின் சில சமயங்களில் நாளை ரிலீஸ்

பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சில சமயங்களில்' படம் நாளை முதல் நெட்ஃபிளிக்ஸில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #SilaSamayangalil
பிரியதர்ஷனின் சில சமயங்களில் நாளை ரிலீஸ்
Published on

பிரியதர்ஷன் இயக்கத்தில் கடைசியாக வெளியான `நிமிர்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அவரது அடுத்த படைப்பாக `சில சமயங்களில்' படம் நாளை ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் படமாக நாளை முதல் நெட்ஃபிளிக்ஸில் ரிலீசாக இருக்கிறது. இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் டிஜிட்டல் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்க, பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் சில சமயங்களில், இந்த பெரிய நிறுவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், நாசர், அஞ்சலி ராவ், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் வருண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். 

சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குனர் விஜயின் திங்க் பிக் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து டாக்டர் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். #SilaSamayangalil

X

Maalai Malar
www.maalaimalar.com