விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் பிரியதர்ஷன்

முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.விஜய் 69-வது திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் பிரியதர்ஷன்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு படம் தொடர்பான பணிகளை முடித்துக் கொண்டு முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

அந்த வகையில், விஜய் நடிக்கும் 69-வது திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தைத் தொடர்ந்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் 69 படத்தைத் தொடர்ந்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் சார்பில் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இந்த திரைப்படம் மூலம் அந்நிறுவனம் பாலிவுட்டில் களமிறங்குகின்றன.

கே.வி.என். மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com