search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "support"

    • முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.
    • அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சி கள் கூட்டணிகளை உறுதிப் படுத்துவதிலும் தொகுதி பங்கீட்டிலும் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க தமிழக அரசியல் கட்சிகள் அதிக அக்கறை காட்டி வருகிறது.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பா.ஜனதா கூட்டணியில் இந்த தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி பா.ஜனதா கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளரை நிறுத்தும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தினகரனே போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது.

    சிவகங்கை தொகுதியை பொருத்தவரை முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்து 22 ஆயிரம் வாக்குகள் பெற்றது. தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதாலும், முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.

    அதன் காரணமாக இப் போதிலிருந்தே தொகுதி முழுவதும் அ.ம.மு.க.வினர் குக்கர் சின்னத்தை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். சிவகங்கை தொகுதியை பொருத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்ட ணியில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் பா.ஜனதா சார்பில் களம் இறக்கப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட் டுள்ள நிலையில் அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார்.
    • இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்.

    கோவை:

    கொங்குநாடு முன்னேற்ற கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக பெஸ்ட் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமரானால் ஊழல் இன்றி விவசாயிகள், ஏழை-எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்.

    உலகில் ஒரு வலுவான நாடாக இந்தியா மாறியுள்ளது. பேச்சுத்திறனும், உலகம் போற்றும் தலைவராகவும் மோடி உள்ளார். இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கிறது.

    இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். பாராளுமன்ற தேர்தல்களில் தமிழகத்தில் மாறி, மாறி வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் மாநில வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை விமான நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும், மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன.
    • மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது

    மங்கலம்,செப்.24-

    திருப்பூர், கோவை மாவட்ட சிறு ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி கூறுகையில்,

    திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு ரூ.25கோடி மதிப்பிலான நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 12 மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாளை 25-ந்தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இந்த ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் திருப்பூர்,கோவை மாவட்ட ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கம் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்கிறது.

    தமிழக முதல்வர் ஓ.இ. மில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற்று, தமிழகம் முழுவதும் உள்ள சிறு ஓ.இ.மில் நூற்பாலைகளை பாதுகாத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • போராட்டம் 19 நாட்களாக தொடர்கிறது
    • சமுதாய தலைவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகளை சால்வை அணிவித்து வரவேற்றனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டி அங்கு உள்ள விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 19 நாட்களாக தொடர்கிறது.

    இந்த நிலையில் நீலகிரி போராட்டத்துக்கு அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதற்காக அவர்கள் கேத்தி பகுதியில் நடைபெற்ற போராட்ட களத்திற்கு நேரில் சென்றனர். அங்கு அவர்களுக்கு சமுதாய தலைவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ச்சுனன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, முன்னாள் அரசு வக்கீல் பாலநந்தக்குமார், கேத்தி பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், தேனாடு லட்சுமணன், கேத்தி ராஜூ, வர்த்தக அணி ஜெய்ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும்.
    • அந்த பகுதியில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப கல்லூரி அமைக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 8 வருடங்களாக அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

    இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த கல்லூரிக்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்து கல்லூரி கட்டிட பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடந்து.

    நன்னிலம் தொகுதியில் உள்ள குடவாசல் கல்லூரிக்கு வேறு ஒரு தொகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த இடத்திற்கு குடவாசலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

    மேலும் கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று குடவாசல் பேருந்து நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தரையில் அமர்ந்து தொடர்ந்து 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நன்னிலம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் மாணவ- மாணவிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

    அப்போது நிருபர்க ளிடம் காமராஜ் எம்.எல்.ஏ கூறியதாவது, குடவாசலிலே கல்லூரி அமைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்நிலையிலும் இந்த மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக இருப்பேன்.

    சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசிய பொழுது, அந்தப் பகுதியில் மக்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்லூரி அமைக்கப்படும் என உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.

    குடவாசலிலேயே கல்லூரி அமைய வேண்டும் என்று இப்பகுதி மக்களும், கல்லூரி மாணவர்களும் போராடிவரும் நிலையில் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்வின் போது அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், ராஜேந்திரன், நகர செயலாளர் சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் தென்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • சிறுவன் மோகித்தை போலவே இரண்டாவது குழந்தையான விதர்சனாவிற்கும் சர்க்கரை நோய் உள்ளது.
    • டைப்-1 இன்சுலின் மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி பெயர் வித்ய ஜோதி . இவர்களுக்கு மோகித் என்ற 7 வயது மகனும் , விதர்சனா என்ற 4 வயது மகளும் உள்ளார்கள். மோகித் பிறந்த 4 வருடங்களில் இரவு நேரங்களில் அதிக அளவில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தவுடன் பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்படவே மோகித்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் டைப் 1 என சொல்லக்கூடிய சர்க்கரை நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , வாழ்நாள் முழுவதும் தினமும் 4 முறை இன்சுலின் ஊசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

    சிறுவன் மோகித்தை போலவே இரண்டாவது குழந்தையான விதர்சனாவிற்கும் இதே சர்க்கரை நோய் உள்ளது. இவர்கள் இருவருக்கும் தினமும் 4 முறை ஊசி செலுத்த வேண்டும். இவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை நோய் வகைக்கு அரசு மருத்துவமனையில் முறையான மருந்துகள் கிடைக்காததால் தனியார் மருத்துவமனையில் இருந்து மருந்துகளை வாங்கி வருகின்றனர்.

    ஒரு குழந்தைக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் என்ற வீதம் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து மாதம் ஊசிக்கு மட்டும் 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்கின்றனர் பெற்றோர்கள்.

    பனியன் கம்பெனியில் கிடைக்கும் வருவாயில் பாதிக்கும் மேல் குழந்தைகளின் மருந்து செலவிற்கே சென்று விடுகிறது. மீதமுள்ள பணத்தை கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்க முடியாத சூழலில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தோம். ஆனால் டைப் 1 இன்சுலின் மருந்து அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. டைப்-2 இன்சுலின் மருந்து மட்டுமே தரப்படுகிறது. எனவே குழந்தை பாதிக்கப்பட்டிருக்கும் சர்க்கரை நோய் வகைக்கு ஏற்ற மருந்துகளை எந்த தடையும் இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளிலும் டைப்-1 இன்சுலின் மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் இணக்கமாக இருப்பதுடன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் நடந்து முடிந்த நகராட்சி நகர்மன்றத் தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று நகர்மன்ற உறுப்பினரான தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் சதாசிவக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு தனது ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தை இணைக்கும் இணைப்பு விழா கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தை அதன் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான சதாசிவக்குமார் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அம்பே த்கரின் படிப்பகத்திற்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்திற்கு முன்னதாக திருமாவளவனின் வயதை குறிக்கும் வகையில் 60 அடி உயர கொடிக்கம்பத்தினை நட்டு திருமாவளவனை வைத்து கொடியேற்ற முடிவு செய்து கொடிக்கம்பத்தினை நிறுவ முயற்சி செய்தபோது கொடிக்கம்பம் நடுவதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி நகராட்சி ஆணையர் தலைமையில் வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் இணக்கமாக இருப்பதுடன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

    மணிப்பூரில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற நாகா மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இம்பால்:

    நாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழும் பிரச்சினைகளுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று நாகா மக்கள் முன்னணி கூறி வருகிறது.

    மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் 21 இடங்களை பெற்ற பா.ஜனதா, 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை, ஏ.ஐ.டி.சி கட்சிகள் ஆதரவு அளித்து வந்தது. முதல்வராக பா.ஜனதாவை சேர்ந்த என்.பிரேன்சிங் முதல்வாராக பதவி வகித்து வருகிறார்.

    நாகா மக்கள் முன்னணி, மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு ஆதரவு பிரசாரம் மேற்கொண்டதாக 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவையும் சபாநாயகரிடம் அளித்தது. அதேசமயம், 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைவர்களும் ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில் நாகலாந்து மாநிலம் கோஹிமாவில் நடைபெற்ற நாகா மக்கள் முன்னணி கூட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தங்கள் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் நாகா மக்கள் முன்னணி மாநில தலைவரான அவாங்போநெவ்மாய் கூறியுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிக்கும் என வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார். #LSPolls #DMK #Congress #MKStalin #Velmurugan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று இரவு அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார். #LSPolls #DMK #Congress #MKStalin #Velmurugan
    மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவை ஆதரித்து பிரசாரம் செய்வதாக எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்தார். SumalathaAmbareesh #MandyaConstituency #SNKrishna
    பெங்களூரு :

    நடிகர் அம்பரீஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவர் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, மந்திரியாக இருந்தவர். மத்திய மந்திரியாகவும் பணியாற்றியவர். அவரது மனைவி நடிகை சுமலதா, மண்டியா தொகுதியில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டார்.

    ஆனால் கூட்டணியில் மாண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால் சுமலதாவுக்கு டிக்கெட் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இதையடுத்து மாண்டியா தொகுதியில் சுமலதா சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

    சுமலதாவுக்கு காங்கிரஸ் அதிருப்தி ஓட்டுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு பா.ஜனதாவில் சேர்ந்து போட்டியிட அழைப்பு வந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள இல்லத்தில் நடிகை சுமலதா நேரில் சந்தித்து பேசினார். சுமார் அரைமணி நேரம் அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பேசிய சுமலதா, “நான் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். மாண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரது பலம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும் தேர்தல் களத்தில் குதித்துள்ளேன். அம்பரீசின் ரசிகர்கள் தான் எனக்கு ஆதரவு. நீங்கள் மாண்டியா தொகுதியில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும்” என்றார்.

    அதற்கு பதிலளித்து பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, “நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக என்னால் இயன்ற பங்கை அளிக்க முயற்சி செய்கிறேன். மாண்டியாவுக்கு வந்து உங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். எனது ஆதரவாளர்களும் உங்களுக்கு ஆதரவு திரட்டுவார்கள். மாண்டியா மாவட்டம், ஜனதா தளம்(எஸ்) மயமாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் அங்கு களம் காண்கிறீர்கள். வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். அம்பரீஷ் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மனது வைத்தால், தேர்தல் முடிவை மாற்ற முடியும்” என்றார். SumalathaAmbareesh #MandyaConstituency #SNKrishna
    கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் தனது ஆதரவை தெரிவித்தார். #KarnatakaCongress #IndependentMLA
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடந்த மாதம் திரும்பப் பெற்றனர். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் தனது ஆதரவு கடிதத்தை அளித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரும் உடனிருந்தார். #KarnatakaCongress #IndependentMLA
    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. #IMF #Pakistan #ChristineLagarde
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் அந்நாடு உள்ளது.

    அந்நாட்டின் அன்னியச்செலாவணியின் கையிருப்பு வெறும் 8.12 பில்லியன் டாலர் (சுமார் ரூ.57 ஆயிரத்து 650 கோடி) மட்டுமே உள்ளது.

    இது ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அன்னியச்செலாவணி கையிருப்பை விட குறைவான தொகை ஆகும்.

    அது மட்டுமின்றி இந்த தொகை, 7 வார கால இறக்குமதிக்குத்தான் பாகிஸ்தானுக்கு போதுமானதாக உள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் மறுத்து விட்டன.

    இந்த நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு சீனா 2.5 பில்லியன் டாலரும் (சுமார் ரூ.17ஆயிரத்து 750 கோடி) சவுதி அரேபியா 6 பில்லியன் டாலரும் (சுமார் ரூ.42 ஆயிரத்து 600 கோடி) நிதி உதவியாக வழங்க முன்வந்தன. எனினும் பாகிஸ்தான் பொருளாதர நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சூழல் இன்னமும் வரவில்லை.

    இந்த நிலையில், துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றுள்ளார். அவர் இந்த மாநாட்டுக்கு மத்தியில் ஐ.எம்.எப்.பின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டேவை சந்தித்து பேசினார். இது குறித்து இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களை மோற்கொள்வதில் இருவருக்கும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது” என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், “இந்த சீர்திருத்தங்கள் நாட்டை நிலையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். பாதிப்படைந்துள்ள துறைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்” என்றார்.

    அதே போல் இந்த சந்திப்பு தொடர்பாக ஐ.எம்.எப். நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானை பொருளாதார பின்னடைவில் இருந்து மீட்க அந்நாட்டிற்கு உதவ ஐ.எம்.எப். தயாராக உள்ளது. இதற்காக தீர்க்கமான மற்றும் வலுவான கொள்கைகளை வகுத்து கூடுதல் வளர்ச்சிக்கான அடித்தளங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #IMF #Pakistan #ChristineLagarde
    ×