search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "labour"

    • மார்சலும், விகுபாயும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    களக்காடு:

    வள்ளியூர் அருகே உள்ள மேலசண்முகபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வின் மகன் மார்சல் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் விகுபாய் (25) என்பவரும் ஏர்வாடி அருகே உள்ள ஆவரந்தலையில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றனர்.

    அப்போது இவர்களுக்கும், பொத்தையடியை பகுதியை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மார்சலும், விகுபாயும் மோட்டார் சைக்கிளில் ராஜபுதூர்-வள்ளியூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அங்குள்ள சாஸ்தா கோவில் ஆர்ச் அருகே சென்ற போது, பொத்தை யடியை சேர்ந்த முத்துக்கு மார் மகன் வைகுண்டராஜா, பெருமாள் மகன் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து மார்சலையும், விகுபாயையும் வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.

    இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இது தொடர்பாக வைகுண்ட ராஜா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

    • ரெயில்வே குடியிருப்பு பகுதியில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது.
    • உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே குடியிருப்பு பகுதியில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது. உடனடியாக இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்திய போது அங்கு ஆண் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    5 நாட்களுக்கு முன்பு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் இறந்தவர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 54) என்பதும், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தவர் இந்த பாழடைந்த கட்டிடத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும், உடல்நல குறைவால் இறந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுவர்களை மிரட்டி உள்ளார்.
    • தந்தை உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    உடுமலை :

    மடத்துக்குளம் தாலுக்கா கடத்தூரைச் சேர்ந்த அப்பு குட்டி என்கின்ற ஈஸ்வரன்( வயது 35).இவர் குமரலிங்கத்தில் குடியிருந்து கொண்டு கூலிவேலை செய்து வருகிறார்.ஈஸ்வரன் நேற்று முன் தினம் வழக்கம்போல் அமராவதி பகுதிக்கு கூலிவேலைக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது கல்லாபுரத்தைச் சேர்ந்த 13 மற்றும் 8 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் (அண்ணண்,தம்பி) அவர்களது வயலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.அந்த வழியாக வந்த ஈஸ்வரன் இரண்டு சிறுவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து உள்ளார்.மேலும் அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அமராவதி முதலைப் பண்ணைக்கு அருகே உள்ள சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

    பின்னர் அவர்கள் இருவரையும் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அடித்ததுடன் பாலியல் தொந்தரவுக்கும் உட்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுவர்களை மிரட்டி உள்ளார். தங்களுக்கு நேர்ந்த கொடுமையை இரண்டு சிறுவர்களும் நேற்று முன்தினம் இரவு பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களது தந்தை உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஈஸ்வரனை கைது செய்தனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.சிறுவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கல்லாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
    • 2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது.

    சேலம்:

    சேலம் இரும்பாலையில் இந்திய அரசின் ெதாழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்களை வழங்கும் முதன்மையான அமைப்பாகும்.

    கடந்த 20-ந் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

    மார்ச் மாதத்தில் சேர்க்கப்பட்ட 13.40 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 7.58 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ளனர்.

    புதிதாக இணைந்த உறுப்பினர்களில், 2.35 லட்சம் உறுப்பினர்கள் 18-21 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 1.94 லட்சம் உறுப்பினர்கள் 22-25 வயதுடையவர்கள் ஆவர். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் 18-25 வயதுடையவர்கள் 56.60 சதவீதம் ஆவர்.

    2.57 லட்சம் பெண்கள் பதிவு

    பாலின வாரியான ஊதியத் தரவுகள்படி, 2023 மார்ச் மாதத்தில் 2.57 லட்சம் பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

    தமிழ்நாடு 2-வது இடம்

    மொத்த உறுப்பினர்களில் இந்த மாநிலங்கள் 58.68 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இதில் மகாராஷ்டிரா 20.63 சதவீதம் உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு மாநிலம் 10.83 சதவீதம் உறுப்பினர்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளது.

    2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது. முந்தைய நிதியாண்டான 2021-2022 உடன் ஒப்பிடும்போது 13.22 சதவீதம் உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • ராஜா டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • காயம் அடைந்த ராஜாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிவகளை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர் தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து சோரீஸ்புரம் பேச்சியம்மன் கோவில் அருகில் நடந்து வரும் போது அவரை வழிமறித்த தூத்துக்குடி தெற்கு சங்கரபேரியை சேர்ந்த லாரி டிரைவர் வெற்றிவேல் முருகன்( 35) மற்றும் உத்தண்டு ராஜ் (21) ஆகியோர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

    அதற்கு அவர் மறுக்கவே 2 பேரும் அரிவாளால் ராஜாவை வெட்டினார்கள். இதில் காயம் அடைந்த ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெற்றிவேல் முருகன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் பெயர் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • நாராயணன் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டி ருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் செய்துங்க நல்லூரை சேர்ந்த தொழிலாளி நாராயணன் (வயது 55) என்பதும், மதுபாட்டி ல்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த தும் தெரிய வந்தது. அப்போது போலீசாரை பணி செய்யவிடாமல் மிரட்டி உள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 2,800-ஐ பறிமுதல் செய்தனர்.

    • இசக்கிமுத்து சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • மிஷினில் பழுது ஏற்பட்டு இசக்கிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது.

    களக்காடு:

    திசையன்விளையை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 40). இவர் பரப்பாடி அருகே உள்ள இலங்குளத்தில் வசித்து வந்தார். கட்டிட தொழிலாளியான இவர் நேற்று விநாயகர்புரம் காலனியில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது பலகையை அறுக்கும் மிஷினில் பழுது ஏற்பட்டு இசக்கிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பரப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இசக்கிபாண்டி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
    • பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க கம்மல்கள் திருட்டு போயிருந்தது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டி (வயது 37). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று பகலில் இசக்கி பாண்டி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க கம்மல்கள் திருட்டு போயிருந்தது. இசக்கி பாண்டி வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கம்மல்களை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து இசக்கி பாண்டி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    • பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
    • 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

    திருப்பூர் :

    தேனி மாவட்டம், போடி நாயக்கனூரைச் சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (வயது 40). இவா், திருப்பூா், கருவம்பா ளையம் பகுதியில் குடும்ப த்துடன் தங்கியிருந்து பின்ன லாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

    இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பிருத்திவிராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த தாகத் தெரிகிறது. இதுகுறித்து திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்திருந்தனா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த பிருத்திராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். 

    தென்காசி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் விவசாயி, தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
    தென்காசி :

    ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த குறிஞ்சான்பட்டி வேதகோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணிய பாண்டியன்(53). விவசாயி.

    சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி சசிகலா(48), சற்று தாமதமாக சாப்பாடு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த சுப்பிரமணிய பாண்டியன் சாப்பிடாமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

    இதற்கிடையே சசிகலா, வீட்டுக்கு செல்லாமல் மாலை வரை தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு அதன்பின்னர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சுப்பிரமணிய பாண்டியன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.  

    உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள வெள்ளானகோட்டையை சேர்ந்தவர் முருகன்(34). இவர் வைக்கோல் லோடு ஏற்றும் வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த சில நாட்களாக வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு பணம் கொடுக்க வில்லை என்று கூறி அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆத்தூர் அருகே கொலை செய்யப்பட்ட உப்பள தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள தலைவன்வடலி வடக்குத் தெருவை சோ்ந்த ராமசாமி மகனான உப்பள கங்காணி சண்முகராஜ் (வயது 45), ஆவரையூா் அருகே பைக்கில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றபோது, 3 பேரால் வழிமறித்து வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.

    இந்நிலையில் இன்று சண்முகராஜ் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

    உடன் தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரி ஷங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன்,  ஒன்றிய சேர்மன் ஜனகர்,  பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார்,  கவுன்சிலர் கேசவன், ஆத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகானந்தம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    சிவகிரி அருகே கஞ்சா விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    சிவகிரி:

    சிவகிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் தென்மலை, அருகன்குளம் வண்ணான்பாறைபுதூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிவகிரி தாலுகா தென்மலை பஞ்சாயத்து அருகன்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த தொழிலாளி முருகன் (வயது 64) என்பவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார்.

    அவரைப் பிடித்து சோதனையிட்டதில் அவரிடமிருந்து ரூபாய் 2000 மதிப்பிலான 50 கிராம் வீதம் 10 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் கைது செய்து சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×