search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dilapidated building"

    • ரெயில்வே குடியிருப்பு பகுதியில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது.
    • உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே குடியிருப்பு பகுதியில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது. உடனடியாக இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்திய போது அங்கு ஆண் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    5 நாட்களுக்கு முன்பு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் இறந்தவர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 54) என்பதும், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தவர் இந்த பாழடைந்த கட்டிடத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும், உடல்நல குறைவால் இறந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரத்தில் சுகாதார கேடு விளைவிக்கும் பாழடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.
    • சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலையில் இக்கட்டிடம் காணப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளது. என் நகரம் என் பெருமை என்ற திட்டத்தின் கீழ், நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.இதில், நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் உள்ள வடக்குத் தெருவில் தனி நபருக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று மிகவும் பாழடைந்த நிலையில் இருந்து வந்தது.போதிய பராமரிப்பின்றி காணப்பட்ட இந்த கட்டடப் பகுதி, புதர்கள் மண்டியும் , மேலும்விஷ பாம்புகளின் நடமாட்டமும் அதிகம் காணப்பட்டது . மேலும் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலையில் இக்கட்டிடம் காணப்பட்டது.

    இதையடுத்து, இந்தக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கவுன்சிலர் வக்கீல் ராதிகா செந்தில்,மற்றும் நகர சபை தலைவர் தமிழ்ச்செல்வி சர்க்கரை கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில், நகராட்சி ஆணையாளர் சுரேந்தர் ஷா, நகர சபை உறுப்பினர் ராதிகாநகர் நல அலுவலர் டாக்டர் பாலசுப்ரமணியன்திமுக நகர செயலாளரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான சக்கரை ஆகியோர் முன்னிலையில் பாழடைந்த கட்டிடத்தை பொக்லின் எந்திரத்தின் மூலம்இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்..

    நிகழ்வின் போது முன்னாள் நகர சபை உறுப்பினர் வக்கீல் செந்தில், துப்புரவு ஆய்வாளர் ரமணன் துப்புரவு மேற்பார்வையாளர்கள் முத்துவேல், விழுப்புரம் மேல் தெரு மாரியம்மன் கோயில் அறங்காவலர் மோகன் ,திமுக பிரதிநிதி முகமது அலி,மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி கீதாரத்தினம்,விழுப்புரம் வடக்கு தெரு குடியிருப்பு வாசிகள் பால்ராஜ்,ஆனந்த்,சீனு மற்றும் மெக்கானிக்கல் சரவணன் உடன் இருந்தனர்.

    ×