மேலப்பாளையம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற தொழிலாளி கைது

குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நாராயணன் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
மேலப்பாளையம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற தொழிலாளி கைது
Published on

நெல்லை:

மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டி ருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் செய்துங்க நல்லூரை சேர்ந்த தொழிலாளி நாராயணன் (வயது 55) என்பதும், மதுபாட்டி ல்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த தும் தெரிய வந்தது. அப்போது போலீசாரை பணி செய்யவிடாமல் மிரட்டி உள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 2,800-ஐ பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com