search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultative meeting"

    • கடந்த 40 வருடங்களாக தொடரும் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பழனியாண்டவர் கோவில் தோட்டத்திலிருந்து கூட்டப்பள்ளி வரை மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
    • சட்டையம் புதூர், சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியின் பழனி ஆண்டவர் கோவில் தோட்டம், சீதாராம் பாளையம், சக்திவேல் நகர், தொண்டிக்கரடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் சாக்கடைகளில் தேங்கி நிற்கிறது.

    மழைநீர் வடிகால்

    கடந்த 40 வருடங்களாக தொடரும் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பழனியாண்டவர் கோவில் தோட்டத்திலிருந்து கூட்டப்பள்ளி வரை மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது.

    இந்த நிலையில் அந்த தண்ணீர் சூரியம்பாளையம் ஏரியில் கலக்காமலும், 17-வது மற்றும் 18-வது வார்டு பகுதிகளான சூரியம்பாளையம், சட்டையம்புதூர் பகுதிகளில் நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல் கொண்டு செல்லப்படுகிறதா? என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு இருந்தது.

    மனு

    இதனால் அந்த கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுவிடம் சட்டையம் புதூர், சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    இதேபோல் தங்களது பகுதியில் தண்ணீர் தேங்காமலும் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமலும் மழை நீர் வடிகால் அமைத்துத் தர கோரி 1, 7, 8, 9 மற்றும் 10-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுவை நகர் மன்ற அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

    ஆலோசனை கூட்டம்

    இதையடுத்து பல ஆண்டுகளாக தீராமல் இருந்துவரும் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் பொதுமக்கள் சார்பிலும் அதிகாரிகள் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எந்த வழியாக தண்ணீரைக் கொண்டு செல்வது, மழைநீர் ஏரியில் தேங்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து விரைவில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தெரிவித்தார்.

    இதை ஏற்ற பொதுமக்கள் நகர் மன்ற தலைவரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    முன்னதாக பணிகள் நடக்கும் இடத்தை நகராட்சி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், ரவிக்குமார், ராஜவேல் தினேஷ்குமார், அண்ணாமலை, சிநேகாஹரிகரன், அடுப்பு ரமேஷ் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்தனர்.

    • சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
    • கூட்டத்தில் மண்டல் பொதுச்செயலாளர் முருகன் என்ற பரமசிவன்,பா.ஜ.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தென்திருப்பேரை:

    திருச்செந்தூருக்கு என் மண், என் மக்கள் பாதயாத்திரையாக வருகிற 14-ந் தேதி வருகை தரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் ஆத்தூரில் மண்டல் தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில் மண்டல் பொதுச்செயலாளர் முருகன் என்ற பரமசிவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், நசரேன், மாவட்ட விவசாய அணி பொருளாளர் மகாதேவன், மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ்குமார், செயலாளர் மகேஷ்வரி, பொருளாளர் சிவநேசன், ஓ.பி.சி. அணி தலைவர் பட்டுராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சசின்டன், மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு துணைத் தலைவர் முத்துலெட்சுமி, இளைஞரணி தலைவர் ராஜதுரை, சிந்தனையாளர் பிரிவு செயலாளர் பால்வண்ணன், அரசு தொடர்புதுறை மண்டல் தலைவர் பிச்சமுத்து, பிரசார பிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கிளைத்தலைவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் டாக்டர். உமா பங்கேற்று, அந்தந்த துறை பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது.

    ஆலோசனை

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் டாக்டர். உமா பங்கேற்று, அந்தந்த துறை பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். இதையடுத்து புதிய தாலுகா கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். இந்த பணிகளை வருகிற 31-ந் தேதிக்குள் முடித்து, செப். 1-ந் தேதி அலுவலகம் திறப்பு விழா நடத்தும் வகையில் பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் டாக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:- நாமக்கல் மாவட்ட அளவில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் வழங் கும்முகாமில் இதுவரை 2.42 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு துறை பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது போல் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் ஆய்வு நடைபெற்று வரு கிறது. புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் ஆக. 31ல் நிறைவடையும் வகையில் பணிகள் துரிதப் படுத்த அறிவுறுத்தப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார். புதிய தாலுகா அலுவலக கட்டிடம் அருகே பயணியர் மாளிகை யாரும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அதை தலைமை தபால் அலுவலகமாக மாற்ற அனுமதி வழங்க வேண்டி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் காமராஜ், சித்ரா, மல்லிகா உள்ளிட்ட பலர் கோரிக்கை கொடுத்தனர்.

    ஆய்வின் போது தாசில்தார் தங்கம், ஆர்.ஐ.க்கள் முருகேசன், கார்த்திகா, வி.ஏ.ஓ. முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார்.

    ராமநாதபுரம்

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப் படவேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கலெக்டர் விஷ்ணு சந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் சுதந்திர தின விழாவில் தியாகிகளை கவுரவித்தல், பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவி களுக்கான கலை நிகழ்ச்சி கள் குறித்து திட்டமிடுதல், பொதுமக்கள் பங்கேற்ப தற்கான முன்னேற்பாடு களை செய்தல் ஆகிய தொடர்பாக அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோ சனை நடத்தினார். அலுவலர்கள் திட்டமிட்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவு றுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார்.
    • விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட பொருளாளர் ராமர், செயற்குழு உறுப்பினர்கள் அயூப் கான், குருவையா ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், சங்கர் அய்யா, துணைச்செயலாளர்கள் மங்கல செல்வி, தங்கமாரி, ஒன்றிய செயலாளர்கள் கடையநல்லூர் லிங்குசாமி, சங்கரன்கோவில் வடக்கு மாரியப்பன், தெற்கு மாரிமுத்து, வடக்கு ராதாகிருஷ்ணன், தெற்கு பாலமுருகன், வீமன், செங்கோட்டை குமார், வாசுதேவநல்லூர் சுப்புராஜ், நகர செயலாளர் கடையநல்லூர் முகமது ரபிக், மாவட்ட தொண்டரணி செயலாளர் கணேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடுவது, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு, பேனா, பென்சில் மற்றும் நோட் புத்தகங்கள் வழங்குதல், கட்சியின் தொடக்க நாளான வருகிற செப்டம்பர் 14-ந் தேதி கிளை கழகம் தோறும் கொடி ஏற்றுதல், பொருளாளர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது வருகையை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மதுரையில் நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
    • புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்கள் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏவிடம் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கே என் விஜயகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கலந்துகொண்டு மதுரையில் நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு சுவர் விளம்பரம் எழுதுவது, வாகன வசதி ஏற்பாடு, மற்றும் திரளானோர் பங்கேற்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தின் போது திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை மணலூர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏவிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பகுதி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    • புதுவை மாநில ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் லெனின் வீதியில் நடந்தது.
    • செயலாளர் எஸ்.டி.சேகர் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் லெனின் வீதியில் நடந்தது.

    மாசிலா குப்புசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்.சக்தி சேகர் சிறப்புரையாற்றினார். அ.ம.மு.க.தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சாரம் பாலத்தில் நாளை (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ள கொடநாடு கொள்ளை கொலை வழக்கை துரிதப்படுத்த கோரி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்,
    • காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி னார். மாவட்டத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், மாவ ட்ட பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்ஜி வரவேற்றார். வட்ட பொருளாளர் முத்துசாமி நிதிநிலை அறிக்கை வாசி த்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் மகாலி ங்கம், மாவட்டத் துணைத் தலைவர் கொளஞ்சிவேலு ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய பணிகளை தோற்றுவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், தமிழக அரசு துறையில் பணிபுரியும் வெளி ஒப்பந்ததாரர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழக அரசின் சமூக நல துறையின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும், மத்திய அரசால் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வட்ட துணை த்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்ட இணை செயலாளர் மஞ்சுளா, மாவட்டத் துணைத் தலைவர்கள் வீரபுத்திரன், செந்தில்முருகன், மாவட்ட இணை செயலாளர்கள் சாமிதுரை, விஜயராணி, சாலை பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-வது குழுமக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-வது குழுமக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொது மக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்துதல், சென்னை தீவுத் திடலை மேம்படுத்துதல், விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த நிதியளித்தல் போன்றவை குறித்து பேசப்பட்டது.

    சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

    2023-2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறி விக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழு மத்தின் நிர்வாக நடவடிக்கை கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தொழில், முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தக துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம், (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், சி.எம்.டி.ஏ முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, , நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா.கணேசன், குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் வருகை குறித்து நாளை தி.மு.க. ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது.
    • முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டக் கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம். எம்.எல்.ஏ. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (23-ந் தேதி) பிற்பகல் 3 மணியளவில் ராமநாதபுரம், பட்டிணம் காத்தான் கிங்ஸ் பேலஸ் மகாலில் மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் பெரியசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகி கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் ராமநாதபுரத்தில் கலந்து கொள்ளும் மண்டல அளவிலான பாகமுகவர்கள் கூட்டம், மீனவர்கள் சந்திப்பு மாநாடு, கட்சி ஆக்கப்ப ணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ. தெரி வித்துள்ளார்.

    ஆகஸ்ட் 10-ந்தேதி ராமநாதபுரம், ஆகஸ்ட் 11-ந்தேதி ராமேசுவரத்தில் மீனவர்களுடன் சந்திப்பு மாநாடு என இரண்டு நாட்கள் தங்க உள்ளார். ராமநாதபுரம் வருகை தரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

    • கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாடான 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில்' பெருவாரியான இளைஞர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில், வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாடான 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில்' பெருவாரியான இளைஞர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு தகுதியான இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கினார்.

    கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் ராமசந்திரன், வேல்முருகன், செல்லப்பன், வாசுதேவன், ஜெயகுமார், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், பேரூர் செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், கார்த்திக், ரவி, முத்து குட்டி சேவக பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன், சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகையா நன்றி கூறினார்.

    • எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
    • டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரளதிட்டமிட்டுள்ளனர்.

    இதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23-ந்தேதி பாட்னாவில் நடை பெற்றது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் முயற்சியால் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் மீது ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் சில கருத்துக்களை தெரிவித்தனர். குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த கூட்டத்தில் இது பற்றி பேசலாம் என முடிவு செய்தனர். அதன்படி அடுத்த கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தின் தலை நகரான சிம்லாவில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

    ஆனால் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. ஜெய்ப்பூர் அல்லது ராய்ப்பூரில் கூட்டத்தை நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆேலாசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்கள்.

    உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல் கூட்டத்தில் பங்கேற்காத சோனியாகாந்தி, இக்கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

    இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இது தவிர தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய பர்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன. இதற்காக இந்த கட்சிகளின் தலைவர்கள் உள்பட 24 கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார்.

    நமது ஜனநாயக கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிந்ததாலும், அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள ஒருமனதான முடிவு எட்டப் பட்டதாலும் முதல் கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

    இந்த விவாதத்தை தொடர்வதும், நாம் உரு வாக்கிய ஒற்றுமையை கட்டி எழுப்புவதும், மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

    நமது நாடு சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

    அதன் தொடர்ச்சியாக ஜூலை 17-ந்தேதி பெங்களூரில் நடக்கும் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். கூட்டம் 18-ந்தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கும். உங்கள் அனைவரையும் பெங்களூர் கூட்டததில் சந்திக்கிறேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய மீண்டும் ஆலோசிக்கிறார்கள். இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இன்று சோனியாகாந்தி அளிக்கும் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன், சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்காமல் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

    பெங்களூரில் இன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் நாளை (18-ந்தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்துகிறது.

    நாளை மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    நாளை மாலை நடை பெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்த கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. கட்சிகளுக்கும் அழைப்பு வந்துள்ளது.

    அதன்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

    இதனை ஏற்று பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

    மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் அணி ஆகியவையும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர் பாக கூட்டணி கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    மாநிலங்களில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அர வணைத்து போதிய இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற இக்கூட்டத்தில் வியூகம் வகுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    ×