search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க புதிய வியூகம்: பா.ஜனதா-எதிர்க்கட்சிகள் நாளை போட்டி கூட்டம்
    X

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க புதிய வியூகம்: பா.ஜனதா-எதிர்க்கட்சிகள் நாளை போட்டி கூட்டம்

    • எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
    • டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரளதிட்டமிட்டுள்ளனர்.

    இதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23-ந்தேதி பாட்னாவில் நடை பெற்றது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் முயற்சியால் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் மீது ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் சில கருத்துக்களை தெரிவித்தனர். குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த கூட்டத்தில் இது பற்றி பேசலாம் என முடிவு செய்தனர். அதன்படி அடுத்த கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தின் தலை நகரான சிம்லாவில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

    ஆனால் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. ஜெய்ப்பூர் அல்லது ராய்ப்பூரில் கூட்டத்தை நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆேலாசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்கள்.

    உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல் கூட்டத்தில் பங்கேற்காத சோனியாகாந்தி, இக்கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

    இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இது தவிர தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய பர்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன. இதற்காக இந்த கட்சிகளின் தலைவர்கள் உள்பட 24 கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார்.

    நமது ஜனநாயக கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிந்ததாலும், அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள ஒருமனதான முடிவு எட்டப் பட்டதாலும் முதல் கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

    இந்த விவாதத்தை தொடர்வதும், நாம் உரு வாக்கிய ஒற்றுமையை கட்டி எழுப்புவதும், மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

    நமது நாடு சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

    அதன் தொடர்ச்சியாக ஜூலை 17-ந்தேதி பெங்களூரில் நடக்கும் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். கூட்டம் 18-ந்தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கும். உங்கள் அனைவரையும் பெங்களூர் கூட்டததில் சந்திக்கிறேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய மீண்டும் ஆலோசிக்கிறார்கள். இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இன்று சோனியாகாந்தி அளிக்கும் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன், சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்காமல் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

    பெங்களூரில் இன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் நாளை (18-ந்தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்துகிறது.

    நாளை மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    நாளை மாலை நடை பெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்த கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. கட்சிகளுக்கும் அழைப்பு வந்துள்ளது.

    அதன்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

    இதனை ஏற்று பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

    மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் அணி ஆகியவையும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர் பாக கூட்டணி கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    மாநிலங்களில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அர வணைத்து போதிய இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற இக்கூட்டத்தில் வியூகம் வகுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    Next Story
    ×