search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய தாலுகா அலுவலக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
    X

    புதிய தாலுகா அலுவலக கட்டிட பணிகளை கலெக்டர் உமா பார்வையிட்ட காட்சி.

    புதிய தாலுகா அலுவலக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

    • குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் டாக்டர். உமா பங்கேற்று, அந்தந்த துறை பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது.

    ஆலோசனை

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் டாக்டர். உமா பங்கேற்று, அந்தந்த துறை பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். இதையடுத்து புதிய தாலுகா கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். இந்த பணிகளை வருகிற 31-ந் தேதிக்குள் முடித்து, செப். 1-ந் தேதி அலுவலகம் திறப்பு விழா நடத்தும் வகையில் பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் டாக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:- நாமக்கல் மாவட்ட அளவில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் வழங் கும்முகாமில் இதுவரை 2.42 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு துறை பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது போல் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் ஆய்வு நடைபெற்று வரு கிறது. புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் ஆக. 31ல் நிறைவடையும் வகையில் பணிகள் துரிதப் படுத்த அறிவுறுத்தப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார். புதிய தாலுகா அலுவலக கட்டிடம் அருகே பயணியர் மாளிகை யாரும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அதை தலைமை தபால் அலுவலகமாக மாற்ற அனுமதி வழங்க வேண்டி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் காமராஜ், சித்ரா, மல்லிகா உள்ளிட்ட பலர் கோரிக்கை கொடுத்தனர்.

    ஆய்வின் போது தாசில்தார் தங்கம், ஆர்.ஐ.க்கள் முருகேசன், கார்த்திகா, வி.ஏ.ஓ. முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×