search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fisherman"

    • தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது.
    • இன்று அதிகாலை சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது

    தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தமிழக உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் 23-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வெயில் தாங்காமல் சென்னை வாசிகள் சில்லென இருப்பதற்கு சுற்றுலா தளத்திற்கு சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது தற்பொழுது சென்னையே குழுகுழுவென்று மாறிக் கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே அப்பப்ப மழை பெய்த வண்ணம் தான் உள்ளது. மற்ற தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருவதால்  சென்னையில் வானம் மந்தமாகவும் மேக மூட்டதுடனே காணப்படுகிறது. இவ்வளவு நாள் சுட்டெரித்த வெயிலிற்கு அடுத்து  மழை பெய்வதால் சென்னை மக்களுக்கு சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    இன்று அதிகாலை சென்னையில் பெருமபாலான இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

    • கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மாயமானார்.

    தவறி விழுந்து மீனவர் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரத்தினசாமி (36) ஆவார்.

    கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கெபிஸ்டன், காஜாமைதீன் உட்பட 10 சங்குகுளி தொழிலாளர்கள் தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு அருகில் கடலுக்குள் மூழ்கி சங்கு எடுத்துக் கொண்டிருந்தனர்.
    • அப்போது கடலுக்குள் மூழ்கி சங்கு எடுத்துக் கொண்டிருந்த கெபிஸ்டன் வல்லத்தில் ஏறி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயர் காலனியை சேர்ந்த கெபிஸ்டன் (வயது20), லடிஸ் ( 37), சேசுராஜா (37) , காஜாமைதீன் (47) மற்றும் முத்துக்குமார் (29) உட்பட 10 சங்கு குளி தொழிலாளர்கள் திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 7 கடல் மைல் தொலைவில் தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு அருகில் கடலுக்குள் மூழ்கி சங்கு எடுத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடலுக்குள் மூழ்கி சங்கு எடுத்துக் கொண்டிருந்த கெபிஸ்டன் வல்லத்தில் ஏறி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.

    உடனடியாக அவரை கரைக்கு அழைத்து வந்து தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கெபிஸ்டன் இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக தருவைக்குளம் கடல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுப்செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
    • பரிசு தொகையை தனது குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.

    பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்தவர் ஹாஜி பலோச். இவர், இப்ராஹிம் ஹைதேரி மீன்பிடி கிராமத்தில் வசித்து வருகிறார். மீன்பிடி தொழில் செய்து வரும் ஹாஜி தான் பிடிக்கும் மீன்களை ஏலத்தில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்நிலையில், ஹாஜியும் அவரது குழுவும் கடந்த திங்கட்கிழமை அன்று அரபிக்கடலில் இருந்து தங்க மீன் அல்லது "சோவா" என்று அழைக்கப்படும் அரிய வகை மீனைப் பிடித்தனர்.

    கராச்சி துறைமுகத்தில் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை ஏலம் விடுத்தபோது சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இந்த அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.

    சோவா மீன் விலை உயர்ந்ததாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் அதன் வயிற்றில் உள்ள உறுப்புகள் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. மீனில் இருந்து ஒரு நூல் போன்ற பொருள் அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

    பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ வரை எடையுள்ள மற்றும் 1.5 மீட்டர் வரை வளரக்கூடிய மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது.

    பரிசு பெற்ற 7 கோடி ரூபாய் பணத்தை தனது ஏழு பேர் கொண்ட குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.

    • நாட்டுப் படகு மீனவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்களின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுபடகு மீனவர்கள் மீன்வளத்துறையின் பல்வேறு அறிவிப்புகளை கண்டித்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 3-ந் தேதி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நாட்டுப்படகு மீனவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதில் மின் வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் கூறும் பொழுது நாட்டு படகுகளுக்கு பச்சை நிற வண்ணம் அடிக்க வேண்டும், நாட்டு படகுகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும், படகுகளுக்கு மீன் பிடி உரிமம் அனுமதி பெறவேண்டும் என அரசின் அறிவிப்புகளை தெரிவித்தார்.

    இதனை செய்பவர்க ளுக்கு மட்டும் மானிய விலையில் டீசல் வழங்கப்படும் என தெரித்தார். அவரின் இந்த அறிவிப்பினை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாட்டு படகு மீனவர்களும் ஒருநாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் சங்க தலைவர் கயாஸ் தலைமையில், மாவட்ட கலெக்டர், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்துள்னர்.

    நாட்டுப் படகு மீனவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்களின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.என்று கூறுகின்றனர். 

    • இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 41).

    இவரது தம்பி செல்வமணி.(40), மகன் தஷ்விந்த் (20). இவர்கள் 3 பேரும் தமிழ்மணிக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்பொழுது திடீரென இடி மின்னல் படகை தாக்கியது. இதில் படகை இயக்கிய தஷ்விந்த் நிலை தடுமாறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.

    இதுகுறித்து மற்ற இருவரும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • டிபோர்சன் நேற்று 2 சிறுவர்களுடன் வழக்கம் போல கோரம்பள்ளம் ஓடையில் நண்டு மற்றும் மீன்பிடிக்க சென்றார்.
    • 15 அடி உயர சவுக்கு கம்பை கொண்டு தண்ணீரில் மேலும் கீழும் அழுத்தி தனது கட்டு மரத்தை நகர்த்தி செல்லும் போது அந்த வழியாக சென்ற மின்சார கம்பியில் கம்பு பட்டு மின்சாரம் பாய்ந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகம்லேபர் காலனியை சேர்ந்தவர் டிபோர்சன் (31). இவர் லேபர் காலனிக்கு வடபுறம் உள்ள கோரம்பள்ளம் உப்பாற்று ஓடையில் நண்டு மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்று 2 சிறுவர்களுடன் வழக்கம் போல கோரம்பள்ளம் ஓடையில் நண்டு மற்றும் மீன்பிடிக்க சென்றார். புதிய துறைமுகம் அதிவேக சாலையில் உள்ள பாலம் அருகே செல்லும்போது, டிபோர்சன் 15 அடி உயர சவுக்கு கம்பை கொண்டு தண்ணீரில் மேலும் கீழும் அழுத்தி தனது கட்டு மரத்தை நகர்த்தி செல்லும் போது அந்த வழியாக சென்ற மின்சார கம்பியில் கம்பு பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் பைபர் படகில் அவர் மயங்கி விழுந்தார்.

    அப்போது படகில் இருந்த சிறுவர்கள் கூச்சல் போடவும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து டிபோர்சனை மீட்டு புதிய துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருவைகுளம் கிராமத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக சென்றனர்.
    • மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் சென்றபோது கைது.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.

    தருவைகுளம் கிராமத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.

    • விசைப்படகு தொழிலாளர்களோ வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்கச் சென்றால் தான் எங்களது குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்காது என்று கூறுகின்றனர்.
    • இதனை வலியுறுத்தி நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையா ளர்கள் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மீதமுள்ள 6 நாட்களில் 3 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

    வாரத்தில் 6 நாட்கள்மீன் பிடிக்க சென்றால் கடலில் மீன் கிடைப்பதில்லை. அவ்வாறு சென்றால் செலவுகள் அதிகமாக வரு கின்றன. 3 நாட்கள் பிடித்தால் மீன்கள் அதிக மாக கிடைக்கும். எனவே வாரத்தில் 3 நாட்கள் செல்ல வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

    மீனவர்கள் போராட்டம்

    ஆனால் விசைப்படகு தொழிலாளர்களோ வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்கச் சென்றால் தான் எங்களது குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்காது. எனவே 6 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என கூறி வருகின்றனர். இதனை வலி யுறுத்தி நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரம் பேர், 2-வது நாளாக மீன்பிடிக்க செல்ல வில்லை. இதனால் தூத் துக்குடி மீன்படி துறைமுகத்தில் இன்று 262 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

    பேச்சுவார்த்தை

    நேற்று இது தொடர்பாக மீன்பிடி தொழிலாளர், உரிமையாளர் ஆகியோரிடம் மீன்வள உதவி இயக்குநர் மோகன்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உரிமையாளர்கள் வாரத்தில் 3 நாட்களில் இருந்து 4 நாட்கள் மீன்பிடிக்க செல்லலாம் என கூறினார். ஆனால் மீன்பிடி தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தன.

    இதைத்தொடர்ந்து உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடம் தனித்தனியாக இன்று 2-ம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    • தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 265 விசைப்படகுகள் மூலம் செல்லக்கூடிய மீனவர்கள் கடந்த 4 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
    • இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்ப பெற்றது.

    தூத்துக்குடி:

    தமிழக கடலோரப்பகுதி கள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் காற்று மாறுபாடு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 265 விசைப்படகுகள் மூலம் செல்லக்கூடிய மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள மீனவர்கள் கடந்த 4 நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். மேலும் வானிலை மையம் எச்சரிக்கையை மீனவர்களுக்கு தெரியப் படுத்தும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்ப பெற்றது. இதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்குப் பின் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 189 விசைப்படகுகளில் மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடிக்க கடலுக்குள் புறப்பட்டு சென்றனர்.

    • வலையை இழுத்த மீனவர் கடலில் தவறி விழுந்து இறந்தார்.
    • தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு மீனவ கிரா மத்தை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (வயது 47). இவர் நேற்று சக மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். கடலில் வலையை விரித்தி ருந்த நிலையில் மீன்கள் சிக்கியதும் அதனை பட குக்கு இழுத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஜான் பிரிட்டோ நிலை தடுமாறு கடலுக்குள் விழுந்தார். இதைப்பார்த்த படகில் இருந்த மற்ற மீன வர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கினார்.

    நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிருக்கு ஆபத் தான நிலையில் அவரை மீட்டவர்கள் கரை திரும்பி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அற் குற்குள் ஜான் பிரிட்டோ பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.
    • இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் நம்பியார் நகர் பழைய காலணித் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது30). இவர் மீன் பிடிதொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பர் சிவக்குமார்(34), அவரது மனைவிலதா, அவரது மகன் லோகேந்தி ரன், சகோதரர் முத்து மாணிக்கம், முத்து மாணிக் கத்தின் மகள் சோபியா மற்றும் உறவினர்கள் அபிஷா, கோபிகா ஆகிய 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.

    பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு, நாகப்பட்டினம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திரு.பட்டினம் பைபாஸ் சாலை, நாகப்பட்டி னம்-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்றபோது, 2 மோட்டார் சைக்களில் வந்த 4 பேர், நீங்கள் எல்லாம் யார், காரை ஏன் தள்ளிகொண்டு போகிறீர்கள் என அதிகார தோரணையில் விசாரித்த னர்.

    அப்போது, இரு தரப்பி னருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 4 பேரும், வினோத்தை தாக்கினர். அப்போது தடுக்க வந்த சிவக்குமார் அவரது மனைவி லதா, முத்து மாணிக்கத்தையும் சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த 4 பேரும் கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரித்தபோது, திரு.பட்டினம் போலகம் புதுகாலணியைச்சேர்ந்த ரித்திக், அவரது தந்தை சுரேஷ், ரித்திக்கின் நண்பர் கள் பிரவீன், வரதராஜன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, காயம் அடைந்த 4 பேரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்பு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகின்றனர்.

    ×