search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் மாயம்"

    • கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மாயமானார்.

    தவறி விழுந்து மீனவர் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரத்தினசாமி (36) ஆவார்.

    கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 2-வது நாளாக மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிலுவை தஸ் நேவிஸ் (வயது 55). மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை சிலுவை தஸ் நேவிஸ் உள்பட 7 பேர் அதே பகுதியை சேர்ந்த வெலிங்டன் (45) என்பவரது நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கரையில் இருந்து சுமார் 5 நாட்டிக்கல் தொலைவில் படகில் இருந்தபடி மீனவர்கள் கடலில் மீனுக்கு வீசிய வலையை இழுத்தபோது எதிர்பாராத விதமாக சிலுவை தஸ் நேவிஸ் தவறி கடலுக்குள் விழுந்தார்.

    அவரை உடனடியாக சக மீனவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி விட்டார். அவரை சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று தீவிரமாக தேடிய நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் அவரை தேடும் பணியில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், கூத்தங்குழி, உவரி, இடிந்தகரை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    • கடலோர பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று மீனவரை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சிலுவை தஸ் நேவிஸ் (வயது 50). மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    இன்று காலை அதே பகுதியை சேர்ந்த வெலிங்டன் (45) என்பவரது நாட்டுப்படகில் சிலுவை தஸ் நேவிஸ் உள்பட 7 பேர் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

    கரையில் இருந்து சுமார் அரை நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனுக்கு வீசிய வலையை இழுத்த போது எதிர்பாராத விதமாக சிலுவை தஸ் தவறி கடலுக்குள் விழுந்தார். அவரை உடன் சென்றவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி விட்டார்.

    இதுகுறித்து உடனடியாக கூடங்குளம் கடலோர பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று மீனவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வள்ளம் வந்து கொண்டிருக்கும்போது கடலில் திடீரென ராட்சத அலை எழும்பியது
    • வள்ளம் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள புல்லரி பாறையில் மோதி கவிழ்ந்தது

    கன்னியாகுமரி :

    குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 52). இவர் சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.

    இவரது வள்ளத்தில் அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்த ஆன்சல் (63) மற்றும் குளச்சலை சேர்ந்த ஜோசப் பாத் (65), ஏரோணிமூஸ் (65), கோடிமுனையை சேர்ந்த சிலுவை பிச்சை (53), சைமன்காலனியை சேர்ந்த ஆண்ட்ரோஸ் (72) ஆகியோர் வழக்கம்போல் நேற்றிரவு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    மீன் பிடித்துவிட்டு இன்று காலை இவர்களது வள்ளம் கரை திரும்பியது. குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வள்ளம் வந்து கொண்டிருக்கும்போது கடலில் திடீரென ராட்சத அலை எழும்பியது.

    இதில் வள்ளம் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள புல்லரி பாறையில் மோதி கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் மீனவர்கள் உயிரை காப் பாற்றிக் கொள்ள கடலில் தத்தளித்தனர். அப்போது அங்கு மீன் பிடிக்க சென்ற மற்றொரு வள்ளம் மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்தனர்.

    பின்னர் மீனவர்கள் மற்றொரு வள்ளத்தில் சென்று கவிந்த வள்ளத்தை மீட்டனர். இதில் வள்ளம் சேதமடைந்தது. வள்ளத்திலி ருந்த மீன்கள் கடலில் விழுந் தது. ஆனால் அழிக்கால் மீனவர் ஆன்சல் கரை சேரவில்லை. அவர் கடலில் மாயமாகி உள்ளதாக உடன் சென்ற மீனவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த குளச்சல் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். தொடர்ந்து முத்துக்கு ளிக்கும் மீனவர்கள் மாய மான மீனவர் ஆன்சலை தேடி வந்தனர். இந்த நிலையில் கொட்டில்பாடு கடல் பகுதியில் பெரிய விளையைச் சேர்ந்த மீனவர் வீசிய வலையில் ஆன்சல் உடல் சிக்கியது. மரைன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான ஆன்சலுக்கு பெல்லாம்மா (55) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    • நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் செல்ல குஞ்சு. இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரது மகன் ரகு (வயது 30), சேவாபாரதியை சேர்ந்த சக்திவேல் (45), மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மடவமேடு வடக்கு தெருவை சேர்ந்த விக்கி (18) ஆகிய 3 பேர் நேற்று நள்ளிரவு மீன் பிடிக்க புறப்பட்டனர்.

    நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதில் கடலில் படகு கவிழ்ந்தது.

    இதில் ரகு உள்பட 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.

    சிறிது நேரத்தில் ரகு மூழ்கி மாயமானார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த மற்றொரு பைபர் படகில் சக்திவேல், விக்கி ஆகியோரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ரகுவை கீச்சாங்குப்பம் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரகு கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

    • கரையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் பைபர் படகு சென்று கொண்டிருந்தபோது வேகமாக காற்று வீசியது.
    • திருவொற்றியூர் போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் இளையராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (38). விடியற்காலை 2 மணிக்கு வேலு என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் இளையராஜாவுடன் பட்டு சுரேஷ் சின்னப்பிள்ளை மொத்தம் நான்கு பேர் கடலில் மீன் பிடிக்க புறப்பட்டனர்.

    கரையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் பைபர் படகு சென்று கொண்டிருந்தபோது வேகமாக காற்று வீசியது. இதில் பைபர் படகு நிலை தடுமாறியது. அப்போது எதிர்பாராத விதமாக இளையராஜா கடலுக்குள் தவறி விழுந்தார். உடனே சக மீனவர்கள் அவரை கடலில் இறங்கி தேடிப் பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை. இதை அடுத்து மூன்று பேரும் கரைக்கு திரும்பினர். தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் இளையராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொட்டாயமேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43) மீனவர். இவர் இன்று காலை அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோருடன் பைபர் படகில் கொட்டாயமேட்டில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்டார். கரையில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால் படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதில் பெருமாள் கடலில் மூழ்கி மாயமானார்.

    நடராஜன், சூரிய மூர்த்தி ஆகியோர் கடலில் தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கூக்குரலிட்டனர். அப்போது அங்கு மற்றொரு படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக நடராஜன், சூரியமூர்த்தியை மீட்டு தாங்கள் வந்த படகில் ஏற்றினர். மேலும் பைபர் படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதையடுத்து காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி கடலோர காவல் குழும போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வருகின்றனர். இன்று மதியம் வரை பெருமாளை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே பெருமாள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    மாண்டஸ் புயல், கடல் சீற்றம் உள்ளிட்டவைகளால் 10 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி மாயமான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • படகிலிருந்து தவறி விழுந்த காரைக்கால் திரு.பட்டினம் மீனவர் மாயமானார்.
    • மணிகண்டன் மட்டும் கடலில் நீந்தி கரை திரும்பி னார். ஆனால் சிவா மாயமானார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கடலில் மீன் பிடித்தபோது, கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து தவறி விழுந்த, காரை க்கால் திரு.பட்டினம் மீனவர் மாயமானார். மீனவரை இந்திய கடலோர காவல்படை மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர். 

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் பட்டின ச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது30). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் சிவா (28) என்பவ ருடன், நேற்று அதி காலை பட்டினச்சேரி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, கடல் சீற்றம் காரணமாக, பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. தொடர்ந்து, மீனவர்கள் 2 பேரும் கடலில் மூழ்கினர். இதில் மணிகண்டன் மட்டும் கடலில் நீந்தி கரை திரும்பி னார். ஆனால் சிவா மாயமானார். அதைத்தொடர்ந்து, சக மீனவர்கள் படகில் சென்று தேடியும் சிவா கிடைக்க வில்லை. இதனால் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய கடலோர காவல்படை மற்றும் சக மீனவர்கள் மாய மான சிவாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் வந்தபோது மணல்திட்டில் படகு சிக்கி கவிழ்ந்தது.
    • கடலோர காவல் படை போலீசாரும் மீனவர்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    தேங்காய்பட்டணம் துறைமுக முகப்பு பகுதியில் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து விபத்துக்கள் நடக்கும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூத்துறையைச் சேர்ந்த சைமன் என்ற மீனவர் படகு கவிழ்ந்து பலியானார். இதையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி போராட்டம் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இந்த பிரச்சனை தொடர்பாக விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள். துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணலை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

    இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கினார்கள். இந்த நிலையில் நேற்று மீண்டும் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் மாயமாகியுள்ளார். இணையம் புத்தன் துறையைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 67). இவர் நேற்று காலை இன்ஜின் இல்லாத சிறிய பைபர் படகு ஒன்றில் தேங்காய்பட்டணம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். மதியம் கரை திரும்பிக் கொண்டிருந்தபோது தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் வந்தபோது மணல்திட்டில் படகு சிக்கி கவிழ்ந்தது.

    இதில் அமல்ராஜ் கடலுக்குள் விழுந்து தத்தளித்தார். அப்போது அந்த வழியாக படகில் வந்த மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ராட்சத அலை அமல்ராஜை மூழ்கடித்தது. இதைத் தொடர்ந்து மீனவர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அமல்ராஜ் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படை போலீசாரும் மீனவர்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதை தொடர்ந்து தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடந்து வருகிறது. ஆனால் அமல்ராஜ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் அவரது கதி என்னவென்று தெரிய வில்லை. மீனவர் மாயமாகி உள்ளதால் அவரது குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

    • கேரளா மாநிலம் அழிக்கல் என்ற இடத்தில் கடலில் மீன்பிடிக்க போவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்
    • 15 நாட்களில் திரும்பி வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை 27-ம் அன்பியத்தை சேர்ந்தவர் ஜஸ்டின். இவர் கடந்த மே மாதம் 7-ம் தேதி கேரளா மாநிலம் அழிக்கல் என்ற இடத்தில் கடலில் மீன்பிடிக்க போவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். 15 நாட்களில் திரும்பி வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக அவரது உறவினர்கள் பல இடங்களில் விசாரித்தும் ஜஸ்டின் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மாயமான தனது கணவரை மீட்டு தருமாறு ஜஸ்டின் மனைவி ஷோபா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் ராஜ் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகரன் விசாரித்து வருகிறார்.

    ×