கடலில் மூழ்கி நாகை மீனவர் மாயம்- தேடும் பணி தீவிரம்

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலில் மூழ்கி நாகை மீனவர் மாயம்- தேடும் பணி தீவிரம்
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் செல்ல குஞ்சு. இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரது மகன் ரகு (வயது 30), சேவாபாரதியை சேர்ந்த சக்திவேல் (45), மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மடவமேடு வடக்கு தெருவை சேர்ந்த விக்கி (18) ஆகிய 3 பேர் நேற்று நள்ளிரவு மீன் பிடிக்க புறப்பட்டனர்.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதில் கடலில் படகு கவிழ்ந்தது.

இதில் ரகு உள்பட 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.

சிறிது நேரத்தில் ரகு மூழ்கி மாயமானார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த மற்றொரு பைபர் படகில் சக்திவேல், விக்கி ஆகியோரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ரகுவை கீச்சாங்குப்பம் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரகு கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com