என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கடையில் மீனவர் மாயம்
- கேரளா மாநிலம் அழிக்கல் என்ற இடத்தில் கடலில் மீன்பிடிக்க போவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்
- 15 நாட்களில் திரும்பி வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை 27-ம் அன்பியத்தை சேர்ந்தவர் ஜஸ்டின். இவர் கடந்த மே மாதம் 7-ம் தேதி கேரளா மாநிலம் அழிக்கல் என்ற இடத்தில் கடலில் மீன்பிடிக்க போவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். 15 நாட்களில் திரும்பி வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் பல இடங்களில் விசாரித்தும் ஜஸ்டின் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மாயமான தனது கணவரை மீட்டு தருமாறு ஜஸ்டின் மனைவி ஷோபா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் ராஜ் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகரன் விசாரித்து வருகிறார்.
Next Story






