கூடங்குளம் அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்

கடலோர பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று மீனவரை தேடி வருகின்றனர்.
கூடங்குளம் அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சிலுவை தஸ் நேவிஸ் (வயது 50). மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இன்று காலை அதே பகுதியை சேர்ந்த வெலிங்டன் (45) என்பவரது நாட்டுப்படகில் சிலுவை தஸ் நேவிஸ் உள்பட 7 பேர் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

கரையில் இருந்து சுமார் அரை நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனுக்கு வீசிய வலையை இழுத்த போது எதிர்பாராத விதமாக சிலுவை தஸ் தவறி கடலுக்குள் விழுந்தார். அவரை உடன் சென்றவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி விட்டார்.

இதுகுறித்து உடனடியாக கூடங்குளம் கடலோர பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று மீனவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com