search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்"

    • ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்றவர் மாயம்.
    • சமையல் பணிக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்தார்.

    அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    குளச்சல் கிராமத்தை சேர்ந்த யாசர் அலி என்பவர் கொச்சி அருகே அரபிக் கடலில் படகில் இருந்து தவறி விழுந்து மாயமானார்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்ற யாசர் அலி கடலில் தவறி விழுந்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், குளச்சல் "அ" கிராமம், காமராஜ் சாலையைச் சேர்ந்த முஹைதீன் யாசர் அலி (வயது 32) த/பெ.இப்ராஹீம் என்பவர் கடந்த 08.01.2024 அன்று கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி துறைமுக கடலோர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அரபிக் கடலில் 163 கி.மீ. வடமேற்கு திசையில் ஆழ்கடலில் படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் சமையல் பணிக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.

    அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள திரு.முஹைதீன் யாசர் அலி அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மாயமானார்.

    தவறி விழுந்து மீனவர் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரத்தினசாமி (36) ஆவார்.

    கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திரண்டு இருந்த மீனவர்க ளுக்கும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கேக் ஊட்டி மகிழ்ந்தார்.
    • மாவட்ட அனைத்து அணிகளைச் சேர்ந்த நிர்வா கிகள் மற்றும் மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வாவத்து றையில் அமைந்துஉள்ள புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் அகில உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை லிகோரியஸ் தலைமை தாங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் குமரி கிழக்கு மாவட்ட கழகசெயலா ளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு மீனவர்களுடன் கேக் வெட்டி உலக மீனவர் தின விழாவை கொண்டாடி னார். பின்னர் அங்கு திரண்டு இருந்த மீனவர்க ளுக்கும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கேக் ஊட்டி மகிழ்ந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மற்றும் ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் கவுன்சி லர்கள், மாவட்ட அனைத்து அணிகளைச் சேர்ந்த நிர்வா கிகள் மற்றும் மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டிய நடவடிக்கை
    • 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில், நவ.20-

    குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.

    மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து மனுக்களை கொடுத்தனர். மனு கொடுக்க வந்தவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

    கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், மீனவர்களை பழங்குடிகளாக அங்கீகரிக்க வேண்டம் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு உடனே தொடங்க வேண்டும்.

    தேங்காய்பட்டணம் துறைமுக வேலையை தணிக்கை குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தி தரமான வேலையை விரைவாக நடத்தி மேலும் உயிர்ப்பலி நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

    அரசு அறிவித்தபடி மீன்பிடிக் கலன்களின் மீன்பிடி உரிமத்தின் கால அளவை பழையபடி 3 ஆண்டுகள் என்று மாற்ற வேண்டும். தமிழக துறைமுகங்களின் கட்டமைப்பை விரிவுபடுத்தி, வசதிகளை பெருக்கி, தமிழ்நாட்டு மீனவர்கள், மாநிலத்தில் உள்ள எந்த துறைமுகத்தையும் பயன்படுத்தச் செய்ய வேண்டுவது உள்பட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    • நட்பு பாராட்டும் குணம் கொண்டு வாழும் பண்பாட்டு இனமாக மீனவ சமுதாயம் இருந்து வருகிறது.
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் மீனவர்கள் உள்ளார்கள்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், அமைப்பு செய லாளருமான தளவாய்சு ந்தரம் எம்.எல்.ஏ. வெளியி ட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதா வது:-கள்ளம், கபடமின்றி அனைவரிடத்திலும் ஒரு தாய் மக்கள் போன்று பழகி, இருப்பதை கொடுத்து இன்முகத்தோடு நட்பு பாராட்டும் குணம் கொண்டு வாழும் பண்பாட்டு இனமாக மீனவ சமுதாயம் இருந்து வருகிறது.

    பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பா ர்கள். மீனவ சமுதாயம் பொருள் இல்லாத வர்க ளுக்கு தன்னால் இயன்ற பொருளுதவிகளையும், பசித்தவர்களுக்கு உண்ண உணவினையும் எதையும் எதிர்பாராமல் கொடுத்து உதவும் ஈகை நிரம்பிய குணம் கொண்ட சமுதாயம் மீனவ சமுதாயம்.

    உலகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் ஆண்டு தோறும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட நவம்பர் மாதம் 21-ந்தேதி அன்று மீனவர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் ஏறக்குறைய 7515 கிலோ மீட்டர் நீள முள்ள கடற்கரையில், சுமார் 1076 கிலோ மீட்டர் கடற்கரையை கொண்டு ள்ளது தமிழ்நாடு.

    மீனவர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நிலை நாட்டவும், மீனவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும், எதிர்பார்ப்புகள் நிறைவேறவும், அவர்களின் உள்ளம் மகிழவும் உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் மீனவர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று, சிறந்து விளங்கி வாழ்வில் உயர்வடைய இறைவனை வேண்டி அனைவருக்கும் உலக மீனவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து க்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • பொருள்கள் வாங்கிவிட்டு பஸ்சிற்காக ராஜாக்க மங்கலம் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலம் :

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் துறை சவேரியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ஜோன் ஆப் ஆர்க் (வயது 60). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை ராஜாக்கமங்கலத்திற்கு பொருள்கள் வாங்கு வதற்கு இவர் சென்றார். பொருள்கள் வாங்கிவிட்டு பஸ்சிற்காக ராஜாக்க மங்கலம் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சீமோன் என்ற கமலேஷ் (40) அங்கு வந்துள்ளார். அவர், ஜோன் ஆப் ஆர்க்கிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரத்தில் கம்பியால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஜோன் ஆர்க் ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 41).

    இவரது தம்பி செல்வமணி.(40), மகன் தஷ்விந்த் (20). இவர்கள் 3 பேரும் தமிழ்மணிக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்பொழுது திடீரென இடி மின்னல் படகை தாக்கியது. இதில் படகை இயக்கிய தஷ்விந்த் நிலை தடுமாறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.

    இதுகுறித்து மற்ற இருவரும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • அமைச்சர் மனோ தங்கராஜ்-ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினர்
    • மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    மார்த்தாண்டம்:

    கிள்ளியூர் அருகே உள்ள தூத்தூர் ஊராட்சிக் குட்பட்ட கே.ஆர்.புரம், சின்னத்து றையை சேர்ந்த மீனவர் லெரின்ஷோ (வயது 26), ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் ஆழ்கட லில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த மாதம் 9-ந் தேதி தவறி கடலில் விழுந்து இறந்தார். அவரது குடும்பத்தின் வறுமை சூழலை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தமிழ்நாடு கோரிக்கை வைத்தார்.

    இதனை ஏற்று, மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சென்று லெரின்ஷோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ. 2 லட்சத்தை வழங்கினர். பத்மனாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மீன்வள துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், ஆய்வாளர் லிபின் மேரி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவிலில் 27-ந்தேதி நடக்கிறது
    • மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை நேரில் வழங்கலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாகர்கோவி லில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை நேரில் வழங்கலாம்.

    பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    3 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஆன்றோ, ஆரோக்கியம், பயஸ் ஆகி யோர் மாயமாகி விட்டனர்.

    குளச்சல் :

    குளச்சலை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 25-ந்தேதி 16 மீனவர் கள் மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஆன்றோ, ஆரோக்கியம், பயஸ் ஆகி யோர் மாயமாகி விட்டனர்.

    அவர்களை மீனவர்களும் கடற்படையினரும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மீனவர் பயஸ் பிணமாக மீட்கப்பட்டார். 10 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர் ஆன்றோ உடல் மீட்கப்பட்டது.

    ஆரோக்கியம் கதி என்ன? என்று தெரியாத நிலை நீடித்தது. இந்நிலையில் நேற்று மாலை ராமேசுவரம் அருகே உள்ள நடுத்துறை பகுதியில் ஒரு உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ஆரோக்கியத்தின் உறவினர்கள் ராமேசுவரம் சென்றனர்.

    இதற்கிடையில் கரை ஒதுங்கிய உடலை ராமேசு வரம் கடலோர காவல் படையினர் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அந்த உடல் ஆரோக்கியம்தான் என்பது உறுதியானது. அவரது கையில் ஏற்கனவே பிளேட் பொருத்தி இருந்ததன் மூலம் உடல் அடையாளம் காணப்பட்டதாக தெரிகிறது.

    • திருத்தல மயான வளாகத்தில் ஆன்றோ உடல் அடக்கம் செய்யப்பட்டது.
    • புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் திருப்பலி

    குளச்சல் :

    மணப்பாடு கடலில் மீட்கப்பட்ட குளச்சல் மீனவர் ஆன்றோ உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று பிற்பகல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. வீட்டுமுன் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின் ஆகியோர் ஆன்றோ உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சிவகுமார், கல்குளம் தாசில்தார் கண் ணன், குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி, கிராம அலுவலர் ராஜேஷ், நகர பாரதிய ஜனதா தலைவர் கண்ணன், நகர்மன்ற துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் மற்றும் கவுன்சிலர்கள், பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருத்தல மயான வளாகத்தில் ஆன்றோ உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    • கடலில் தத்தளித்த 16 பேரில் 13 பேர் மீட்கப்பட்டனர்
    • பிரேத பரிசோதனைக்கு பின்பே உடல் யாருடையது என தெரியவரும்.

    குளச்சல் :

    குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆ ரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த 28-ந்் தேதி நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் கடலில் எதிர்பாராதவிதமாக மூழ்கியது.

    இந்த சம்பவத்தில் கடலில் தத்தளித்த 16 பேரில் 13 பேர் மீட்கப்பட்டனர். மீனவர்கள் பயஸ், ஆராக்கியம் மற்றும் ஆன்றோ கடலில் மூழ்கினர். இவர்களில் பயசின் உடல் கடந்த 30-ந் தேதி மீட்கப்பட்டது. தொடர்ந்து ஆன்றோ, ஆரோக்கியத்தை மீனவர்கள் தேடி வந்தனர்.மேலும் கப்பல் மூலம் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.இதற்காக விசாகப்பட்டணத்திலிருந்து கப்பற்படை கப்பல் நேற்று மணப்பாடு கடல் பகுதிக்கு சென்றது.

    பின்னர் வீரர்கள் தேடும் பணியில் ஈடு்பட்டனர். அப்போது மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. அது யார் என அடையாளம் காணமுடியவில்லை.

    மீட்கப்பட்ட உடல் விசைப்படகு மூல மாக குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திற்கு இன்று(திங்கள்கிழமை)காலை கொண்டு வரப்பட்டது. பின்னர் குளச்சல் மரைன் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மீட்கப்பட்ட உடலை காண குளச்சல் துறைமுகத்தில் உறவினர்கள் திரண்டிருந்தனர்.பிரேத பரிசோதனைக்கு பின்பே உடல் யாருடையது என தெரியவரும்.

    ஒருவேளை பிரேத பரிசோதனையில் அடையாளம் காண முடியாவிட்டால்.டி.என்.ஏ.சோதனை மூலம் அடையாளம் காணலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    ×