search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் இன்று அதிகாலை மழை!
    X

    சென்னையில் இன்று அதிகாலை மழை!

    • தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது.
    • இன்று அதிகாலை சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது

    தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தமிழக உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் 23-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வெயில் தாங்காமல் சென்னை வாசிகள் சில்லென இருப்பதற்கு சுற்றுலா தளத்திற்கு சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது தற்பொழுது சென்னையே குழுகுழுவென்று மாறிக் கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே அப்பப்ப மழை பெய்த வண்ணம் தான் உள்ளது. மற்ற தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் சென்னையில் வானம் மந்தமாகவும் மேக மூட்டதுடனே காணப்படுகிறது. இவ்வளவு நாள் சுட்டெரித்த வெயிலிற்கு அடுத்து மழை பெய்வதால் சென்னை மக்களுக்கு சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    இன்று அதிகாலை சென்னையில் பெருமபாலான இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

    Next Story
    ×