search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Sivagangai News Tamil Nadu is becoming the 2nd largest economic state - Minister

    சிவகங்கை

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடர்பாக, சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்ட பத்தில் மாவட்ட அளவி லான பெருந்திரள் கூட்டம் நடந்தது. அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று, சிவகங்கை மாவட்டத்தில் நிறுவனங்களின் புரிந்து ணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்து, தொழில் முனைவோர்களுக்கு தொழிற்கடனுதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் பொருட்டு, ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டு களில், 85 சதவீதம் வாக்கு றுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

    முதல்-அமைச்சரின் லட்சிய கனவான வருகிற 2030-ம் ஆண்டுக்குள் தமிழ் நாட்டினை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதார ரீதியில் உயர்த்தும் விதமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 வருகிற ஜனவரி 7, 8 ஆகிய தேதி களில் சென்னையில் நடை பெற உள்ளது. அம்மாநாடு தொடர்பாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் வழிகாட்டு தலின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீ டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, லட்சிய கனவினை நோக்கி, இம்மாநாடு பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்படு கின்றன.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கு இலக்காக ரூ.300 கோடி நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.305.00 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 3162 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இவை அடிப்படையாகவும் அமையும். அதன்படி இந்நிகழ்ச்சியின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 31 நிறுவனங்களின் ரூ.305 கோடி மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந் தங்களை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், தொழில் முனை வோர்கள் 6 நபர்களுக்கு ரூ.4.65 கோடி மதிப்பீட்டி லான தொழிற்கடனு தவிகளும் வழங்கப்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜீத்,, மாங்குடி எம்.எல்.ஏ., மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பால சந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் சாந்தா சகாயராணி, உதவி பொறியாளர் (மாவட்ட தொழில் மையம்) காளிதாஸ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், தொழில் முதலீட்டாளர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பிரான்மலையில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
    • விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை தனியார் மண்டபத்தில் வட்டார அளவி லான விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கிருங்காக் கோட்டை உள்பட சுற்று வட்டார கிராமங்களில் சிங்கம்புணரி சேவுகப்பெரு மாள் கோவிலை சேர்ந்த 5 ஆயிரம் கோவில் மாடுகள் நிலை கொண்டுள்ளது.

    இந்த மாடுகள் இப்பகுதி யில் விவசாயம் செய்யவிடாமல் விவசாயத்தை அழித்து விடுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நில மாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடி யாக விவசாயிகள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுக்கவும்.

    இந்த பகுதியில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தி விவசாயம் செழிக்க உதவ வேண்டும். பிரான்மலை வட்டார 20 கிராமங்களை சுற்றி விவசாய பயிர்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை சிங்கம்புணரி சேவுகமூர்த்தி கோவில் நிர் வாகம் பிடித்து பராமரிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    அரசு மற்றும் நிர்வாகம் இந்த கோவில் மாடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் தேவஸ்தான நிர் வாகமும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவறும் பட்சத்தில் 20 கிராம விவசாயிகளும் ஒன்று கூடி சாலை மறியல் செய்யப்படும் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மானாமதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    • இந்த தகவலை நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை

    மானாமதுரை நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் ரெங்கநாயகி, துப்புரவு ஆய் வாளர் பாண்டிச் செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட வேண்டிய தீர்மா னங்கள் வாசிக்கப் பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் தெய் வேந்திரன் மானாமதுரையில் பிரதான சாலைகளில் உள்ள மரங்கள் சமீபத்தில் வெட்டப்பட்டுள்ளது.

    இவை ஏன் வெட்டப் பட் டது? இதற்கு யார் காரணம் என்றார். இதற்கு பதிலளித்த தலைவர், இதற்கும், நகராட்சிக்கும் சம்பந்தமில்லை. நெடுஞ்சாலை துறை நிர்வா கம்தான் மரங்களை வெட்டியது என்றார்.

    தி.மு.க. உறுப்பினர் இந்து மதி திருமுருகன் பேசியதாவது:-

    கூடுதலாக தெருவிளக்குகள் கேட்டு இதுவரை தரப்படவில்லை தீர்மானம் மட்டுமே நிறைவேற்றபடு கிறது. கொசுமருந்து அடிக்கவில்லை. இதற்கு பதிலளித்த தலைவர், கொசுமருந்து அடிக்க வரும்போது இனி வரும் நாட்களில் கண்டிப்பாக உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்படும்.

    தி.மு.க. உறுப்பினர் சதிஷ் பேசுகையில், நகராட் சியில் 27 வார்டுகள் உள்ளது.எந்த திட்டம் தொடங்கினாலும் முதல் வார்டு அல்லது கடைசி வார்டில் தொடங்கபடுகிறது. நடுவில் உள்ள எனது வார்டையும் கவனிக்க வேண்டும். எனது வார்டில் அப்பன் பெருமாள் கோவில் அருகே பள்ளிகள் உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதனை ஆய்வு செய்தும் இன்னும் மூடப்படவில்லை என பேசினார்.

    அதைத்தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள், மானாமதுரை நகரில் விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடை களை கட்டுப்படுத்த வேண் டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை நகரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கவும், ஏலம் விடவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

    இனிவரும் காலங்களில் கழிவுநீர் கால்வாய் புதிதாக அமைக்க பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

    • சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சிக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் 374 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய கட்டிடம் அமைய உள்ளது. இந்த புதிய அலுவலக கட்டிடத்தில் செயல் அலுவலர், தலைவர் அறை, மன்ற கூட்ட அறை, அலுவலர்கள் அறை, கணினி அறை, வசூல் அறை, பதிவு அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, ஜெனரேட்டர், டைனிங் டேபிள், சுகாதார வசதி, இருசக்கர வாகன நிறுத்து மிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    சிங்கம்புணரி பேரூராட்சிக்கு ரூபாய் 57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. ரூ.15 கோடி மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.37 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ரூ.5 கோடி 50 லட்சம் மதிப்பிலான பணிகள் மதிப்பீட்டில் உள்ளது. மேலும் சிங்கம்புணரியை நகராட்சியாக மாற்றுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் குமார், செயல் அலுவலர் சண்முகம், வட்டாட்சியர் சாந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, மாவட்ட ஊராட்சி சேர்மன் பொன் மணி. பாஸ்கரன், சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    • மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளர்.

    சிவகங்கை

    சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டு அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் சேர 12-ம் வகுப்பு கல்வி தேர்ச்சி பெற்ற அனைவரும் www.tncuicm.com என்ற இணையதளம் வாயிலாக 30.11.2023-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் ரூ .20 ஆயிரத்து 750 ஆகும்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி காலம் ஒரு ஆண்டு ஆகும்.மேற்படி பயிற்சிக்கு ஏற்கனவே ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம்.

    மேற்கண்ட முறையில் பட்டப்படிப்பு முடித்த வர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கான பயிற்சிக் கட்டணத்தை 30.11.2023-ம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் இவர்கள் சிவ கங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நிரப்பப்பட உள்ள காலிப்பணியி டங்களுக்கு www.drbsvg.net என்ற இணையதளத்தில் வருகிற டிசம்பர் 1-ந்தேதிக் குள் விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளர்.

    • சிவகங்கையில் நாளை, நாளை மறுநாள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தும் பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தின் அறிவுரையின்படி வருகிற ஜனவரி 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்க ளுக்கான சிறப்பு முகாம்கள் நாளை 25-ந் தேதி (சனிக்கிழமை), 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்படி இந்த சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் (Voters Helpline செயலி / https://voters.eci.gov.in மற்றும் https://elections.tn.கோட்டாட்சியர் சிவகங்கை, தேவ கோட்டை அலுவலகத்தில் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக் கலாம்.

    எனவே, இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    • சாலையில் சுற்றித் திரியும் இந்த மாடுகள் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக் குள்ளாகின்றனர்.

    மானாமதுரை

    மானாமதுரையில் உள்ள தேவர் சிலை, காந்தி சிலை, சிவகங்கை சாலை, காவல் நிலையம் எதிர்புறம், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.மேலும் இந்த மாடுகள் சாலைகளை மறித்து அமர்ந்து கொள்கின்றன. நகர் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலும் புகுந்து நெற் பயிர்களை சேதப்படுத்துகின்றன. மாடுகளின் உரிமை யாளர்கள் வீடுகளில் இந்த மாடுகளை கட்டி வைத்து பராமரிக்காமல் அவிழ்த்து விடுகின்றனர். சாலையில் சுற்றித் திரியும் இந்த மாடுகள் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்ப வர்கள் விபத்துக் குள்ளாகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் மானாமதுரை நகராட்சி ஆணையர் ரெங்கநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    மானாமதுரை நகரில் சுற்றித் திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். அறிவிப்பை மீறி மாடுகள் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரிந்தால் நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கப்படும் மாடுகள் பொது ஏலத்தில் விடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி நகராட்சி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

    மானாமதுரை நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களி ளும், கடைவீதி மற்றும் முக்கிய சாலைகளில் அதிக அளவில் கால்நடைகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் உள்ளது. மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நகர்மன்ற கூட்டத்தில் முடிவு செய்ய பட்டு உள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் மாடுகளை வைத்து பராமரிக்க வேண்டும். தெரு மற்றும் சாலையில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என்றார்.

    • மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பனிக்கனேந்தலில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான நிலங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை மீண்டும் அரசு எடுத்து கொள்ள வேண்டும் என்று மனு கொடுக் கப்பட்டது. இந்த மனுவை ஏற்று கொண்ட வட்டாட்சி யர் ராஜா 3 மாதத்திற்குள் தனியார் வசம் ஒப்படைக் கப்பட்ட அரசு நிலங்களை மீண்டும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 3 மாதத்திற்கு முன்பு கூறி இருந்தார்.

    அதேபோல் இந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. இதை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    போராட்டம் நடத்தியவர்களிடம் வட்டாட்சியர் ராஜா தலைமையில் இன்ஸ் பெக்டர் முத்துகணேஷ். மானாமதுரை நகராட்சி ஆணையர் ரங்கசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 3 மாதங்களுக்குள் அனைத்து கோரிக்கைகளும் தீர்வு காணப்படும் என அவர்கள் எழுத்து பூர்வமாக கூறியதையடுத்து இந்த போராட்டம் கைவிடப் பட்டது.

    முன்னதாக போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாந்தி, மாவட்ட துணை செயலாளர் சண்முகப் பிரியா மற்றும் வருவாயத் துறை அதிகாரிகள் உமா மீனாட்சி, கார்த்திகா, சீதாலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேஷனல் சமுதாய கல்லூரியில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் ஆசிரியர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதுக்காட்டாம்பூரில் அமைந்துள்ள நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியில் பயிற்சி சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. வட்டாட்சியர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

    கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் இக்கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஏழை-எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்றுவிக்கப்படும் பணி உதவியாளர், மாதிரி தையல் பயிற்சி போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும், பயிற்சி காலம் முடிந்து எவ்வாறு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

    ஒவ்வொரு பயிற்சிக்குரிய சீருடைகளை 60 மாணவர்களுக்கு வட்டாட்சி யர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரி ஆசிரியர்கள் சிவநேசன், மோனிஷா, பூவிழி, கனிமொழி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

    • தேவகோட்டை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் நடந்தது.
    • டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய தலைவர் உறுதியளித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் அதன் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன். ஆணையாளர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மேலாளர் புவனேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன.

    கூட்டத்தில் தலைவர் பிர்லா கணேசன் பேசியதாவது:-

    தேவகோட்டை ஒன்றியத்தில் வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு கணக்கெடுப்பில் குறைபாடுகள் உள்ளது அவற்றை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். பயிர் காப்பீடு, இழப்பீடு அனைத்து கிராமங்களுக்கும் சரியான முறையில் கிடைத்திட வேண்டும்.

    தேவகோட்டை ஒன்றி யத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அனைத்து கிரா மங்களின் உள்ள நீர் தேக்க தொட்டிகள் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும் டெங்கு தடுப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஒன்றிய கூட்டங்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தபால் அனுப்பியும் அதிகாரிகள் கூட்டத்திற்கு வராமல் உள்ளனர். இதனால் அந்தந்த துறை சார்ந்த குறைகளை எடுத்துக் கூற முடியாமல் உள்ளது. இதனால் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் துறை சார்ந்த குறைகளை எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. மாவட்ட கலெக்டர் கிராம ஊராட்சிகளில் முதல் அனைத்து கூட்டங்களுக்கும் அனைத்து துறை அதிகாரிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தும் தற்பொழுது நடைபெற்ற கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    12 வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஜான்சிராணி : கொடுங்காவயல் கிராமத்தில் தற்பொழுது புதிதாக போடப்பட்ட பாலம் சேதமடைந்து உள்ளது. அதனை உடனே சரி செய்ய வேண்டும். மருதவயல் கிராமத்தில் சாலைகள் பாதி அளவு மட்டுமே போடப் பட்டுள்ளது.

    தலைவர்: சம்பந்தப்பட்ட பாலத்தினை ஆய்வு செய்து உடனே அதனை சரி செய்ய வேண்டும். மேலும் மருத வயல் சாலை குறித்து ஆணையாளர் பொறியாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சியாக பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு புதிதாக கறவை மாடு வாங்குவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி கிளையில் முதல் கட்டமாக சுமார் பத்து நபர்களை தேர்வு செய்து நபர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கும் கடன் முயற்சியை ஊராட்சி மன்ற தலைவர் மேற்கொண்டு வந்தார்.

    அதன் அடிப்படையில் இங்குள்ள சமுதாயக் கூடத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி அலுவலர் அஞ்சு, துணைத் தலைவர் சித்ரா, செயலர் வெள்ளைச்சாமி,வார்டு உறுப்பினர்கள்,பொன்னமராவதி வி. என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் சிறப்பு முன்னோடி முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் கலெக்டர் பங்கேற்று ஆய்வு நடத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் ''மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டத்தின் கீழ் சிறப்பு முன்னோடி முகாம் நடந்தது. இதில் கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதலமைச்சரின் புதிய திட்டமான "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டம் தமிழகத்தில் செயல்ப டுத்தப்படவுள்ளது. இதில் அரசின் 13 துறைகள் பங்கேற்க வுள்ளன. இத்துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்க ளின் பயன்களை பெறு வதற்கு ஏதுவாக இம்மு காமினை நடத்துவதற்கு முதல்-அமைச்சரால் உத்தர விடப்பட்டுள்ளது.

    அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 6 மாநக ராட்சிகள், 7 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 4 பிற நகர் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடை பெறுகிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று நடந்த முகாமில் மொத்தம் 944 மனுக்கள் பெறப் பட்டுள்ளது. இதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய பலன்கள் வழங்கப்படும்.

    இதுபோன்று, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மனுக்க ளை அளித்து, தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலு வலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×