search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "charter training"

    • சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    • மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளர்.

    சிவகங்கை

    சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டு அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் சேர 12-ம் வகுப்பு கல்வி தேர்ச்சி பெற்ற அனைவரும் www.tncuicm.com என்ற இணையதளம் வாயிலாக 30.11.2023-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் ரூ .20 ஆயிரத்து 750 ஆகும்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி காலம் ஒரு ஆண்டு ஆகும்.மேற்படி பயிற்சிக்கு ஏற்கனவே ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம்.

    மேற்கண்ட முறையில் பட்டப்படிப்பு முடித்த வர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கான பயிற்சிக் கட்டணத்தை 30.11.2023-ம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் இவர்கள் சிவ கங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நிரப்பப்பட உள்ள காலிப்பணியி டங்களுக்கு www.drbsvg.net என்ற இணையதளத்தில் வருகிற டிசம்பர் 1-ந்தேதிக் குள் விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளர்.

    • அக்டோபர் 6-ந் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது
    • மேலாண்மை பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியகூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

    இதுநாள் வரை கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிவகுப்புகளில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு அக்டோபர் 6-ந் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன்பயிற்சி நிலைய முதல்வரை அணுகலாம். அக்டோபர் மாதம் 6-ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும்நேரடி சேர்க்கையில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்தார்.

    • கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர பட்டய பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
    • அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    விருதுநகர்

    மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செயல்படும் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழி www.tncuicm.com மூலம் 13.9.2023 முதல் 22.9.2023 வரை பெறப்படுகிறது.

    விண்ணப்பிக்க வேண் டிய கடைசி நாள் 22.9.2023 பிற்பகல் 5 மணி வரை ஆகும். மாணவர் சேர்க்கைக் கான குறைந்த பட்ச கல்வித் தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2023 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண் டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (முழு நேரம்), பயிற்சி காலம் ஓராண்டு (இரண்டு பருவ முறைகள்) மற்றும் கட்டணம் ரூ.18,850 ஆகும். இதர தகவல்களை அறிந்து கொள்ள www.tncuicm.com அல்லது கூடுதல் விபரங்களுக்கு மேலாண்மை நிலைய முதல் வர் (பொறுப்பு) அலை பேசி எண்: 88071 59088 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
    • அதிகாரபூர்வ இணையதளமான www.tncuicm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெறுகிறது. இந்த 12 மாத பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். வரும் 22-ந்தேதி பிற்பகல் 5 மணி வரை அதிகாரபூர்வ இணையதளமான www.tncuicm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100-யை அரசுடமையாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் செலுத்திவிட்டு அதற்கான செலானை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    விண்ணப்பத்தில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்தும் செலுத்தலாம்.

    பதிவேற்றம் செய்யப்பட்ட செலான் நகல் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து அதில் சுய கையொப்பமிட்டு பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் அல்லது கொரியர் மூலம் மட்டுமே 22.09.2023 தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டுறவு பயிற்சி மாணவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான புத்தகங்களை வழங்கப்பட்டது.
    • 2022-23-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடக்கவிழா நடந்தது

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய கிளையில் 2022-23-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடக்கவிழா நடந்தது. விழாவில் கூட்டுறவு சங்கங்களின் நீலகிரி மண்டல இணைப்பதிவாளர்(முழு கூடுதல் பொறுப்பு) டி.பிரபு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பட்டய பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கூட்டுறவு பயிற்சி மாணவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான புத்தகங்களை வழங்கினார். இதில் கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப்பதிவாளரும், முதல்வருமான கிருஷ்ணன், துணைப்பதிவாளர் சரவணன், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான முத்து சிதம்பரம், குன்னூர் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் குமாரசுந்தரம், கோவை துணைப்பதிவாளர் கே.ஆர்.ராஜேந்திரன், விரிவுரையாளர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்
    • அதிகாரி தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்கள்- கூட்டுறவு வங்கிகளில் வேலை வாய்ப்புக்கு முக்கிய கல்வித்தகுதியான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (முழுநேரம்) வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பம் பெறுவதற்கு 29.07.2022 முதல் 18.08.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 22-ந்தேதி அன்று மாலை 5.30 மணிக்குள் இணைப்புகளுடன் மீள சமர்ப்பிக்கலாம்.

    மாணவ, மாணவிகள் கேர்க்கைக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி மேல்நிலைப்பள்ளி (+2) (10 + 2 முறையில்) தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் +2 தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் (10 + 2 + 3) விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியில் சேருவதற்கு 1-ந்தேதியன்று அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    1 வருட காலத்தில் 2 பருவ முறையில் நடைபெறவிருக்கும் இப்பயிற்சியின் முடிவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யக்கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய சான்றிதழ், கணினி பயிற்சி சான்றிதழ் மற்றும் நகை மதிப்பீடு சான்றிதழ் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    பயிற்சிக் கட்டணம்

    இப்பயிற்சியில் சேர பயிற்சிக்கட்டணம் ரூ.18,850 பூர்த்தி பட்ட விண்ணப்பங்களை திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், 204, திண்டிவனம் சாலை, கீழ்நாச்சிப்பட்டு அஞ்சல், திருவண்ணாமலை, தொலைபேசி எண். 04175 - 254793 என்ற முகவரிக்கு கூரியர்- பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என தெரி வித்துகொள்ளப்படுகிறது.

    • பட்டய பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்-முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருகிற 18-ந் தேதி வரை நேரில் பெற்றுக் கொள்ள கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் விலை ரூ.100 ஆகும். பிளஸ்-2 தேர்்ச்சி பெற்று 1.8.2022 அன்று 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22-ந் தேதிக்குள் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு கிடைக்குமாறு கூரியர் அல்லது பதிவு தபாலில் மட்டும் அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் நேரடி விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது. மேற்கண்ட தகவலை மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்-முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று இந்த கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பட்டய பயிற்சி பெறாத நிரந்தர பணியாளர்களுக்கு 22-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி தொடங்கி பயிற்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சேர பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் வழங்குவதற்கு வருகிற 12-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    • முழு நேரம்- அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • பட்டயப் பயிற்சி பெறாத நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் தற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார்விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022 - 23 ஆண்டிற்கு முழு நேரக் கல்வி மூலம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இதில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலா–ண்மை, நகை மதிப்பீடு ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்குரிய மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் குறைந்த பட்ச கல்வி தகுதியான பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 28-ந் தேதி வரை ரூ.100 செலுத்தி நேரில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் பணி–புரியும் இந்த பட்டயப் பயிற்சி பெறாத நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் தற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சிவசக்தி திருமண மண்டபம், எஸ்.ஆர். நாயுடு நகர், பி.ஆர்.சி.டிப்போ எதிரில், சாத்தூர் என்ற முகவரியில் தபால் மூலமாக வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு, 88071 59088 என்ற முதல்வரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
    • இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் 19 ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    டாக்டர் எம்.ஜி.ஆர் . கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது . இப்பயிற்சியானது அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பட்டயப் பயிற்சி பெறாத பணியாளர்களுக்கு பயிற்சி பெற ஒரு நல்ல வாய்ப்பாகும். கல்வித்தகுதியாக பழைய 10 - ம் வகுப்பு தேர்ச்சி ( பழைய எஸ்.எஸ்.எல்.சி ) புதிய 10 - ம் வகுப்பு தேர்ச்சி இப்பயிற்சிக்கான பெற்றிருக்க வேண்டும் . அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அனைவருக்கும் வழங்குவதில் தடைகள் வேண்டுவ தி ல்லையாதலால் ஓராண்டு தொடர் பணி இருக்க வேண்டுமென்ற நிபந்தனையின்றி கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிரந்தர பணியாளர்களும் இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

    விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரர் பணிநியமனம் செய்யப்பட்ட முறைகள் குறித்து அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக ( அல்லது ) கருணை அடிப்படையில் ( அல்லது ) அரசு பதிவாளர் உத்தரவுப்படி விவரம் குறிப்பிடப்பட வேண்டும் . பயிற்சி அலுவலக வார விடுமுறை நாட்களில் நடைபெறும் . தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில் கூட்டுறவு மேலாண்மை பட்டயம் கணினி மேலாண்மை , மற்றும் நகைமதிப்பிடும் அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் 19 ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது . டாக்டர் எம்.ஜி.ஆர் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் 100 ரூபாய் ரொக்கமாக செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 1 ந்தேதி ஆகும் . இப்பயிற்சியானது 8 ந்தேதி தொடங்கப்படவுள்ளது . மேலும் விபரங்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் . கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் .3 கடற்கரை சாலை , சரவணபவா கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகம் , கடலூர் -1 தொலைபேசி எண் 04142-222619 மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் செய்திக்குறிப்பில் கூறிப் பட்டிருந்தது. 

    • திருச்சி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின் 2022-23ம் ஆண்டுக்கான 22வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் கீழ்க்கண்ட அட்டவணையின் அடிப்படையில் பயிற்சியாளர்கள் சேர்க்கைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    • கூட்டுறவு சங்க பதிவாளரால் அனுமதிக்கப்பட்ட ஆணையில் கூட்டறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மட்டும் அஞ்சல்வழி பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருச்சி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின் 2022-23ம் ஆண்டுக்கான 22வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் கீழ்க்கண்ட அட்டவணையின் அடிப்படையில் பயிற்சியாளர்கள் சேர்க்கைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன் படி 19.07.2022 முதல் 28.07.2022 வரை (விடுமுறை நாட்கள் நீங்கலாக) விண்ணப்ப மனு விற்பனை செய்ய படுகிறது. 1-ந் தேதி (மாலை 5.30 மணி வரை) விண்ணப்ப மனு மீள சமர்ப்பிக்கலாம். 2-ந் தேதி மற்றும் 4-ந்தேதி விண்ணப்பங்கள் சரி பார்த்தல் நடை பெறுகிறது. 8-ந்தேதி பயிற்சி தொடங்குகிறது.

    இந்த அஞ்சல்வழி கூட்டுறவு பட்டயப்பயிற்சியில் கூட்டுறவு சங்க பதிவாளரால் அனுமதிக்கப்பட்ட ஆணையில் கூட்டறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மட்டும் அஞ்சல்வழி பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    2022-2023ஆம் ஆண்டு 22வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு பயிற்சிக்கட்டணம் ரூ.15,050- ஆகும்.மேலும் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், மாவட்டத்திலுள்ள பதிவாளர் மற்றும்செயற்பதிவாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் தகுதியுள்ளவர்களை மட்டும் அஞ்சல்வழி பயிற்சியில் சேர்க்க கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×