கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை

சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளர்.
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை
Published on

சிவகங்கை

சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டு அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் சேர 12-ம் வகுப்பு கல்வி தேர்ச்சி பெற்ற அனைவரும் www.tncuicm.com என்ற இணையதளம் வாயிலாக 30.11.2023-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் ரூ .20 ஆயிரத்து 750 ஆகும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி காலம் ஒரு ஆண்டு ஆகும்.மேற்படி பயிற்சிக்கு ஏற்கனவே ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம்.

மேற்கண்ட முறையில் பட்டப்படிப்பு முடித்த வர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கான பயிற்சிக் கட்டணத்தை 30.11.2023-ம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் இவர்கள் சிவ கங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நிரப்பப்பட உள்ள காலிப்பணியி டங்களுக்கு www.drbsvg.net என்ற இணையதளத்தில் வருகிற டிசம்பர் 1-ந்தேதிக் குள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளர்.

X

Maalai Malar
www.maalaimalar.com