search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Personnel"

    • ரூ.65 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ரூ.65,000 மதிப்பிட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி வாழ்த்தி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
    • ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    அதிராம்பட்டினம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மீனாட்சி மருத்துவமனையில் இருந்து வருகை தந்த டாக்டர்கள், செவிலியர்கள் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை என உடல் முழு பரிசோதனை செய்தனர்.

    இம்முகாமில் அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவர் தாகிராஅம்மாள் அப்துல்கரீம், நகர் மன்ற துணைத் தலைவர் ராமகுணசேகரன், ஆணையர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

    • நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, முதலுதவி செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • பணியாளர்கள் மூலம் உயிர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் வடகிழக்கு பருவமழை கால படகு மற்றும் பணியாளர்கள் மூலம் உயிர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது . திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்புப் பணிகள் குறித்து காவிரி ஆற்றில் இறங்கி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.நீரில் மூழ்கிய வர்களைகாப்பாற்றுவது முதலுதவி செய்வது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் பொதுமக்கள்கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • 12 ஆயிரத்து 492 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 312 பேரும் அடங்குவர்.
    • 225 அலுவலக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொது தேர்வு தொடங்கியது.

    அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 225 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

    இதில் மாணவர்கள் 12 ஆயிரத்து 492 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 312 பேரும் அடங்குவர்.

    தேர்வு பணியில் 112 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 112 துறை அலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 27 வழித்தட அலுவலர்கள், 139 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் 1961 அறை கண்காணிப்பாளர்கள், 194 சொல்வதை எழுது பவர்கள் மற்றும் 225 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • அவசர ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் பணியாளர்களுக்கு துணை ஆணையர் அருணாசலம், உதவி ஆணையர் யக்ஞநாரயணன் முன்னிலையில், மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன், மாரிமுத்து, தீயணைப்பு-மீட்பு பணிகள் துறை பணியாளர்களால், தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் தீயின் வகைகள், அவற்றை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? அவசர ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது. தீயின் தன்மைக்கேற்ப தீயணைப்பான்கள், கார்பன்-டை ஆக்ஸைடு, நுரை, பவுடர், ஈர சாக்குகள், தண்ணீர், மற்றும் மணல் கொண்டு தீயணைக்கும் பயிற்சி, நிலைய அலுவலரால் செய்து காண்பிக்கப்பட்டது.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பக்தர்களுக்கு ஏற்படும் மூச்சு திணறல், மயக்கம், போன்றவற்றிற்கு எவ்வாறு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்புவது? பற்றியும் செயல்முறை விளக்கம் பற்றியும் அப்பல்லோ மருத்துவமனை முதலுதவி மருத்துவ நிபுணர் டாபிக், கோவிலின் முதலுதவி மருத்துவ மைய மருத்துவர்கள் ஜனார்த்தனன் ராஜா, சாம்ராட் பாலாஜி மற்றும் மருத்துவ குழுவினரால் நடத்தி காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் அயல்பணி கண்காணிப்பாளர்கள், காவல் துறை பணியாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு.
    • அங்கன்வாடிக்கு தேவையான உபகரண பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் நம்பிக்கை தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளம் குழந்தைகளின் பராமரிப்பு கூட்டமைப்பு இணைந்து அங்கன்வாடி தின விழா , அங்கன்வாடி சீர்திருவிழா ஐந்து மையங்களில் நடந்தது.

    விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட வேளாளர்விஜயா வரவேற்றார்.

    திருத்துறைப்பூ ண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அங்கன்வாடி திட்ட த்தையும் பணிகளையும் நம்பிக்கை கொண்டு நிறுவணம் தொடர்ச்சியாக செய்து வரும் பணிகளையும் பாராட்டி பேசி திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கலை நிகழ்ச்சி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரச்சார வாகனம் அங்கிருந்து கலை நிகழ்ச்சிகளுடன் புறப்பட்டு கொக்காலடி, முள்ளூர், திருத்துறைப்பூண்டி டவுன் பள்ளிவாசல் ஆகிய அங்கன்வாடி மையங்க ளுக்கு சென்று அங்கன்வாடி பணியாளர்கள் உதவியா ளர்களை பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்து அங்க ன்வாடிக்கு தேவையான உபகரணங்கள் பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக மேளதாள இன்னிசையுடன் எடுத்துச் சென்று வழங்கினார்கள்.

    இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரோட்டரி டெல்டா சங்க தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் காளிதாஸ், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்க தலைவர் முகமது இக்பால், செயலாளர் தங்கமணி, பிசியோதெரபி டாக்டர் கருணாநிதி, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கி ல்லி வளவன், அங்கன்வாடி மைய பார்வை யா ளர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள், பெ ற்றோ ர்கள், பொதுமக்கள், குழந்தைகள் அனைவரும் கலந்து கொ ண்டனர்.

    • குப்பைகள் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.
    • தற்காலிக வடிகால் அமைத்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சியில் உள்ள அரசு கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

    தற்போது பெய்து வரும் பருவ மழையால் அரசு கட்டிடங்களில் மழைநீர் தேங்கி சேதமடைவதை தடுக்கும் வகையில் ஊராட்சி சார்பில் அரசு கட்டிடங்களில் சுத்தம் செய்யும் பணி நடை பெற்றது.

    ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள், நடுநிலைப்பள்ளி கட்டிடங்கள், ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் மேல்தளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க கட்டிடங்களின் மேல்தளத்தில் கிடந்த இலை, தழைகளையும், குப்பைகளையும் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.

    மேலும் சாலையிலும், தெருக்களிலும் ஆங்காங்கே தேங்கியிருந்த மழை நீரையும் தற்காலிக வடிகால் அமைத்து மழைநீரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஏற்பாடுகளை ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் செயலாளர்கள் செய்து இருந்தனர்.

    • முழு நேரம்- அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • பட்டயப் பயிற்சி பெறாத நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் தற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார்விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022 - 23 ஆண்டிற்கு முழு நேரக் கல்வி மூலம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இதில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலா–ண்மை, நகை மதிப்பீடு ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்குரிய மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் குறைந்த பட்ச கல்வி தகுதியான பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 28-ந் தேதி வரை ரூ.100 செலுத்தி நேரில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் பணி–புரியும் இந்த பட்டயப் பயிற்சி பெறாத நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் தற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சிவசக்தி திருமண மண்டபம், எஸ்.ஆர். நாயுடு நகர், பி.ஆர்.சி.டிப்போ எதிரில், சாத்தூர் என்ற முகவரியில் தபால் மூலமாக வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு, 88071 59088 என்ற முதல்வரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பருத்திச்சேரியில் உள்ள மின்மாற்றியானது அடித்தளம் பழுதடைந்து அருகில் உள்ள குளத்தில் சாயும் அபாய நிலையில் இருந்தது.
    • அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்னர் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி மணலி ஊராட்சி- பருத்திச்சேரியில் மின் மாற்றியானது அடித்தளம் பழுதடைந்து அருகில் உள்ள குளத்தில் சாயும் அபாய நிலையில் இருந்தது. இதனால் அந்த வழியை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர். பெரும் அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்னர் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பான செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி மின்சார வாரிய பணியாளர்கள் சாய்ந்த மின்மாற்றியை சீரமைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    ×