தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.65 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Published on

தஞ்சாவூர்:

ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ரூ.65,000 மதிப்பிட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி வாழ்த்தி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com