தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
Published on

அதிராம்பட்டினம்:

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மீனாட்சி மருத்துவமனையில் இருந்து வருகை தந்த டாக்டர்கள், செவிலியர்கள் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை என உடல் முழு பரிசோதனை செய்தனர்.

இம்முகாமில் அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவர் தாகிராஅம்மாள் அப்துல்கரீம், நகர் மன்ற துணைத் தலைவர் ராமகுணசேகரன், ஆணையர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com