என் மலர்
நீங்கள் தேடியது "Collector inspection"
- அரசு பள்ளியில் மாணவர்கள் வருகை குறித்து கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
- ஆஸ்பத்திரிகளில் அடிப்படை வசதி குறித்து கலெக்டர் திடீர் சோதனை நடத்தினார்.
தேனி:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட தர்மத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், மேலச்சொக்கநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடை மற்றும் சிலமலையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தர்மத்துபட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவி யர்களின் எண்ணிக்கை, வகுப்பறை, சமையலறை, குடிநீர், மின்வசதி, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள், சுகாதாரப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வகுப்பறைகளுக்கு நேரடியாக சென்று, மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும், தர்மத்துப்ப–ட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தை–களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், எடை அளவிடும் கருவி, விளையாட்டு பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியன குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சிலமலை ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- விக்கிரவாண்டி பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- புதிதாக கட்டப்படும் பொது கழிவறை கட்டடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி பேரூராட்சியில் கலெக்டர் மோகன் வருகை தந்து ரூ.4 கோடியே 10லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியையும், 15 வது மான்ய நிதிக்குழு திட்டத்தில் ரூ. 20லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வரும் புதுக்குளம் சீரமைப்பு பணி, கால்நடை மருத்துவ மனை வளாகம் மற்றும் ரூபாய் 7.75 லட்சம் மதிப்பில் கக்கன் நகரில் புதிதாக கட்டப்டும் பொது கழிவறை கட்டடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
வேளாண்மை இணை இயக்குனர் ரமணன்,உதவி செயற்பொறியாள ர்ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் , தாசில்தார் இளவரசன், செயல் அலுவலர் அண்ணாதுரை, இளநிலைஉதவியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
- பண்ணை குட்டை கரைகளை பலப்படுத்த அறிவுரை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் (திண்டிவனம்) அப்பகுதியில் கலெக்டர் முகேஷ் பார்வையிட்டார்.
அத்திமூர் பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் வாழை பூங்கா அமைப்பதற்கான தோட்டக்கலைத் துறைக்கு வழங்கப்பட இருக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அத்திமூர் கிராமத்தில் பண்ணை குட்டை ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த அறிவுரை வழங்கினார்
மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கழிவறை ஆய்வு செய்த கலெக்டர் கழிவறை தூய்மையாக வைத்துக் கொள்ளும் படியும் பள்ளி வளங்களை உள்ள குப்பைகளை அகற்றவும் அறிவுரை வழங்கினார்.
இதில் போளூர் தாசில்தார் சண்முகம், போளூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் கோரிக்கை.
- கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மண்பாண்ட தொழிலை நவீனப்படுத்துவது தொடர்பான பணிகள், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டல்புதூர் கிராம ஊராட்சி மற்றும் மேலாம்பூர் கிராம ஊராட்சிகளில் குளங்கள் தூர்வாரும் பணிகள், கடையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் , கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கடையம் கிராம ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரூத் ஆடையகம், மற்றும் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார். அப்போது அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் சென்றனர்.
- தீயணைப்பான் உபகரணங்கள் உள்ளதா என சோதனை
- அதிகாரிகள் உடன் சென்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனை செய்வது வழக்கமாகும். ஆரணி
டவுன் பகுதியில் இயங்கி வரும் 11 பட்டாசு கடைகளை ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இதில் முறையான ஆவணங்கள் உரிமம் புதுப்பிக்கபட்டுள்ளதா எனவும் விபத்து குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதா பக்கெட்டில் தண்ணீர் தீயணைப்பான் உபகரணங்கள் உள்ளதா என ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
இதில் வருவாய் ஆய்வாளர் வேலுமணி கிராம நிர்வாக அலுவலர் ஜெயசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- அறிக்கை சமர்பிக்க அதிகாரிக்கு உத்தரவு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டம் பச்சூர் ரெயில் நிலையத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தற்போது பயன்படுத்துகின்ற பாதையை அடைப்பதற்காக தென்மேற்கு ரெயில்வேவின் சார்பில் பொது மக்கள் மாற்றுப்பாதை செல்வதற்காக தடையின்மை சான்று கேட்டு கோரிக்கை மனுவினை அளிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் மாற்றுப்பாதை செல்வதற்காக மாற்றுப்பதை நீர்நிலை புறம்போக்கு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு நாளைக்கே (இன்று) அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் விக்ரம் கஹானோலியா, வட்டாட்சியர் க.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நவமால்மருதூர் ஊராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அரசின் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- கண்டமங்கலம்யூனியன் தலைவர்வாசன், மாவட்டகலெக்டருடன் ஆய்வில் கலந்து கொண்டு கண்டமங்கலம் ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளை பற்றிவிளக்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதூர் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தமிழக அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து நவமால்மருதூர் ஏரி கரையோர பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணி திட்டத்தில் நடைபெறும் இடத்திற்கு சென்றுபணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
கண்டமங்கலம் யூனியன் தலைவர்வாசன், மாவட்டகலெக்டருடன் ஆய்வில் கலந்து கொண்டு கண்டமங்கலம் ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளை பற்றிவிளக்கினார். அவருடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சிஅலுவலர் சண்முகம்,ஒன்றிய பொறி யாளர் அறிவொளி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி மாரிமுத்து, கிளைசெயலாளர் முனு சாமி, துணை தலைவர் ரேகாகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
- சாலை பணியின் தார் அளவு குறையும்
- 36 ஊராட்சிகளில் இருந்து 1097 கிலோ அனுப்பட்டது
வாலாஜா:
வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை 60 மைக்ரான் வரை அரவை எந்திரம் மூலம் அரைத்து நெகிழி துகள்களை சாலை பணிக்கு பயன்படுத்துகின்றனர்.
இந்த நெகிழி அரவை எந்திரம் மையத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டிய இன்று ஆய்வு ெசய்தார்.
வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 36 ஊராட்சிகளில் இருந்து ஒரு கிலோவிற்கு ரூ.8 வீதம் பெற்று அதனை தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் உள்ள பிளாஸ்டிக கழிவு மேலாண்மை மையத்திற்கு அனுப்ப படுகிறது.
நெகிழி கழிவு மேலாண்மை அலகில் ஊராட்சிகளில் இருந்து ரூ.10 வீதம் பெற்றுகொள்கின்றனர். பிளாஸ்டிக் கழிவுகள் சுத்தம் செய்த பின் எந்திரம் கொண்டு பிளாஸ்டிகளை அரவை செய்த பின் சாலை அமைக்கும் பணிக்காக சம்மந்தப்பட்ட ஒப்பந்தாரருக்கு ரூ.30 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வரை வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 36 ஊராட்சிகளில் இருந்து 1,356 கிலோ பிளாஸ்டிக் ரூ.10,848 பெறப்பட்டு அதனை தென்கடப்பந்தாங்கல் நெகிழி அலகிற்கு 1097 கிலோ அனுப்பட்டது.
அதனை ரூ.10,970 தொகை கொடுத்து பெறப்பட்டது. சாலை அமைக்கும் பணிக்காக சுமார் 440 கிலோ நெகிழி துகள்களை அரவை செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் சாலை பணிக்காக 240 கிலோ ரூ.7,200 விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு கிலோ மீட்டர் 3.75 மீட்டர் அகலம் கொண்ட தார் சாலைக்கு 438 கிலோ நெகிழி தேவைப்படும். இதனால் ஏற்கனவே பயன்படுத்தப்படும் தார் அளவு 6 சதவீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டது.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் ஆனந்தன், ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், ஊராட்சிமன்ற தலைவர் பிச்சமணி, ஊராட்சிமன்ற துணை தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொருட்கள் குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டு அறிந்தார்
- சேதம் அடைந்த பழைய அங்கன்வாடி கட்டிடம் சோதனை
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தென்வன்னியர் தெரு, கொண்டபாளையம் ஆகிய பகு திகளில் இயங்கி வரும் ரேஷன் கடைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரம், பொருட்கள் குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டு அறிந்தார்.
அதனைத் தொடர்ந்து வாடகைகட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடிமையத்தை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா எனவும், உணவு தரமாக வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார்.
சேதம் அடைந்து பயன்படாமல் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடத்தையும் ஆய்வு செய்தார். அப்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருகின்றது.
- பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த அதிகாரிகள் உடனடியாக கற்களை கொட்டி தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள எல்லீஸ் அணை கடந்த ஆண்டு உடைந்தது. தற்போது பெய்து வரும் மழை சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருகின்றது. கடந்த சில நாட்களாக வரக்கூடிய இந்த தண்ணீர் ஆற்றில் சமநிலையில் செல்லவில்லை. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மிகப்பெரிய பள்ளமாகவும் பாதையாகவும் உருவாகி தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏனாதிமங்கலம் விழுப்புரம் சாலை விரைவில் துண்டிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் 6 கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த ஆற்று நீர் கிராமங்களுக்கு சென்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் எல்லீஸ் சத்திரம் கரை ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கபட்ட நிலையில் உள்ள பகுதியை பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த அதிகாரிகள் உடனடியாக கற்களை கொட்டி தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது அவருடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், புகழேந்தி எம்.எல்.ஏ., திருவெண்ணைநல்லூர் யூனியன் தலைவர் ஓம் சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், எரலூர் பஞ்சாயத்து தலைவர் வெங்கடாஜலபதி மற்றும் பலர் சென்றனர்.
- சின்னமலையூரில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- தமிழக அரசின் அனுமதி பெற்று விரைவில் மலை கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றார்
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர், குட்டுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரிய மலையூர், சின்னமலையூர், பள்ளத்துக்காடு, வலசு உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன.
சின்னமலையூரில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு மலைவாழ் மக்களிடம் பேசிய அவர் விரைவில் மலையூர் கிராமத்தில் புதிய ரேசன் கடை அமைக்கப்படும், ஒவ்வொரு மாதம் மருத்துவ உதவிகள் செய்ய 2 செவிலியர்கள் அனுப்பபடுவார்கள் .
தமிழக அரசின் அனுமதி பெற்று விரைவில் மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும், தகுதியுள்ள மலை கிராம மக்களுக்கு தனி நபர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்த ஊருக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெங்கராஜன், தாசில்தார் சுகந்தி, மண்டல துணை வட்டாட்சியர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






