என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் திடீர் சோதனை"

    • குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு
    • ரசிகர்களிடம் டிக்கெட் விலை குறித்து விசாரித்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே உள்ள தியேட்டர்களில் சில நாட்களுக்கு முன்பு ரிலீசான நடிகர்விஜய் நடித்த வாரிசு படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படம் ஓடும் திரையரங்குகளில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனார்.

    கலெக்டரின் உத்தரவைத் தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமையில் வருவாய் துறையினர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்ட திரையரங்கங்களில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களிடம் டிக்கெட் விலை குறித்து விசாரித்தனர்.

    மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டதா என ஆய்வு செய்தனர் தொடர்ந்து தியேட்டர்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா, சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென தியேட்டர்களில் ஆய்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு பள்ளியில் மாணவர்கள் வருகை குறித்து கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • ஆஸ்பத்திரிகளில் அடிப்படை வசதி குறித்து கலெக்டர் திடீர் சோதனை நடத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட தர்மத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், மேலச்சொக்கநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடை மற்றும் சிலமலையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தர்மத்துபட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவி யர்களின் எண்ணிக்கை, வகுப்பறை, சமையலறை, குடிநீர், மின்வசதி, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள், சுகாதாரப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வகுப்பறைகளுக்கு நேரடியாக சென்று, மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும், தர்மத்துப்ப–ட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தை–களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், எடை அளவிடும் கருவி, விளையாட்டு பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியன குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் சிலமலை ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ×