என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » theni news
நீங்கள் தேடியது "Theni News"
கூடலூர் நகராட்சிக்கு லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின்மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர்.
கூடலூர் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்கத்துக்காக பொக்லைன் எந்திரம் கொண்டுதோண்டி வருகின்றனர். எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது குடிநீர் குழாய் உடைந்தது.
இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து சாலையில் வீணாக ஓடியது. இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் நகராட்சி பகுதியில் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.
குழாயை சீரமைக்காமல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி ரேசன் கடைகளில்கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட சமத–ர்மபுரத்தில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள்குறித்து கலெக்டர் முரளிதரன் சென்று பார்வையிட்டு திடீர்ஆய்வு மேற்கொண்டார்.
ரேசன் கடைகளில் விற்பனை முனைய எந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள், முதல் தவணை வரப்பெற்ற பொருட்களின் விபரம் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அடுத்த மாதத்திற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட வரப்பெற்ற முதல் தவணை அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் விபரம் குறித்து விற்பனையாளரிடம் கேட்டறிந்து, குடிமைப் பொருட்களை பாதுகாப்பாக வைத்திடவும், சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் குடிமைப் பொருட்களை ஒரே தவணையில், சரியான எடையில் விநியோகம் செய்திட விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.
மேலும், ரேசன் கடைகளின் அருகில் வசித்து வரும் குடும்ப அட்டைதாரர்களிடம் அரிசி மற்றும் குடிமைப்பொருட்களின் தரம் மற்றும் ரேசன்கடையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பொதுமக்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கேட்டறிந்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X