search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முன்னோடி முகாம்
    X

    திருப்பத்தூரில் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முன்னோடி முகாமினை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் குறித்து கேட்டறிந்தார்.

    திருப்பத்தூரில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் சிறப்பு முன்னோடி முகாம்

    • திருப்பத்தூரில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் சிறப்பு முன்னோடி முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் கலெக்டர் பங்கேற்று ஆய்வு நடத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் ''மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டத்தின் கீழ் சிறப்பு முன்னோடி முகாம் நடந்தது. இதில் கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதலமைச்சரின் புதிய திட்டமான "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டம் தமிழகத்தில் செயல்ப டுத்தப்படவுள்ளது. இதில் அரசின் 13 துறைகள் பங்கேற்க வுள்ளன. இத்துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்க ளின் பயன்களை பெறு வதற்கு ஏதுவாக இம்மு காமினை நடத்துவதற்கு முதல்-அமைச்சரால் உத்தர விடப்பட்டுள்ளது.

    அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 6 மாநக ராட்சிகள், 7 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 4 பிற நகர் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடை பெறுகிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று நடந்த முகாமில் மொத்தம் 944 மனுக்கள் பெறப் பட்டுள்ளது. இதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய பலன்கள் வழங்கப்படும்.

    இதுபோன்று, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மனுக்க ளை அளித்து, தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலு வலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×