search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milk Producers"

    • சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சியாக பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு புதிதாக கறவை மாடு வாங்குவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி கிளையில் முதல் கட்டமாக சுமார் பத்து நபர்களை தேர்வு செய்து நபர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கும் கடன் முயற்சியை ஊராட்சி மன்ற தலைவர் மேற்கொண்டு வந்தார்.

    அதன் அடிப்படையில் இங்குள்ள சமுதாயக் கூடத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி அலுவலர் அஞ்சு, துணைத் தலைவர் சித்ரா, செயலர் வெள்ளைச்சாமி,வார்டு உறுப்பினர்கள்,பொன்னமராவதி வி. என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கால்நடை துறையில் விண்ணப்பித்து பெறலாம்
    • ரூ.50 ஆயிரத்தில் பால் கறவை எந்திரம் வழங்கும் திட்டத்துக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.50 ஆயிரத்தில் பால் கறவை எந்திரம் வழங்கும் திட்டத்துக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுவையை சேர்ந்த 3 கறவை மாடுகளுக்கு மேல் வைத்துள்ளோர் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    புதுவை கால்நடைத்துறை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்காக துறை சார்பில் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர்.

    இதற்கான விண்ணப்பத்தை கால்நடைத் துறையில் பெறலாம் என துறை இயக்குனர் தெரி வித்துள்ளார்.


    • பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரியா கவுண்டர் தலைமையில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பால் கொள்முதல் விலையை அரசு ஒரு ரூபாய் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் தளவாய்பட்டி பால் பண்ணை அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரியா கவுண்டர் தலைமையில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் பால் கொள்முதல் விலையை அரசு ஒரு ரூபாய் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக பசும்பால் விலையை லிட்டருக்கு 45 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், எருமை பால் விலையை லிட்டருக்கு 54 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், 50 சதவீத மானிய விலையில் மாட்டு தீவனங்களை வழங்க வேண்டும்,

    கட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் 100-க்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.

    • பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் ஊக்கத்தொகை வழங்கினார்.
    • காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கி கவுரவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆர்56 ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பால் உற்பத்தி யாளர்களுக்கு 2022-2023ம் ஆண்டு நான்காம் ஆண்டு காலாண்டுக்கான ஆதர வாளர்களுக்கு ஊக்கத் தொகை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.90 வீதம் 579 பால் உற்பத்தியாளர்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்56-ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த பால் உற்பத்தியாளர்கள் ராம் கணேஷ் (49,392), சிவக்குமார் (21,103), வெங்கடசாமி(11,846) ஆகியோருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் குமார், ஆர்56-ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயல் அலுவலர், இணை பதிவாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முதல் 3 இடங்களை பிடித்த 3 நபர்கள் போக மீதமுள்ள 576 பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆர்-56 ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வரலாற்றிலேயே உற்பத்தியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முதன்முறையாக ஊக்கத்தொகை வழங்கியிருப்பது சங்கத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல உதவும் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டது.
    • தீவனங்களின் விலை, மருத்துவ செலவுகள், பணியாளர்கள் ஊதியம் உயர்ந்துள்ளது.

    தாராபுரம் :

    தமிழகத்தில் விவசாயத்து க்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஆவின் நிறுவனத்துக்கு வழங்குகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டது. இதுவரை அதே விலை தான் வழங்கப்படுகிறது. கறவை மாடுகளுக்கு தேவையான உலர் மற்றும் அடர் தீவனங்களின் விலை, மருத்துவ செலவுகள், பணியாளர்கள் ஊதியம் உயர்ந்துள்ளது.எனவே பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைக ளுக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 45 ரூபாய் வழங்குகிறது. எனவே அரசு பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 12 ரூபாய் வீதம் உயர்த்த வேண்டும்.

    கடந்த ஆண்டு வரை அமுல் மற்றும் வேறு மாநில மார்க்கெட்டிங் பெடரேசன்களில் இருந்து கலப்பு தீவனம், 50 கிலோ மூட்டையை 925 ரூபாய்க்கு கொள்முதல் செய்து மானியம் போக 725 ரூபாய்க்கு வினியோகிக்க ப்பட்டது.ஆவின் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் கலப்பு தீவன மூட்டை விலை 1,070 ரூபாயாகும். இதற்கு மானியம் போக 770 ரூபாய்க்கு வினியோகிக்கப்ப ட்டது. கடந்த ஆண்டு ஒன்றியங்களில் கலப்பு தீவன மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கலப்பு தீவன மானியமாக கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் வழங்கி 820 ரூபாய்க்கு விற்க வேண்டும்.

    ஆவின் ஒன்றியம், பிற மாநில கூட்டுறவு இணைய ங்களில் இருந்து பெற்று பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கலப்புத்தீவன விலையை விட ஆவின் இணையத்தின் கலப்பு தீவன விலை கிலோவுக்கு 2.90 ரூபாய் அதிகமாக உள்ளது. இந்த விலையை குறைக்க வேண்டும்.ஆவின் ஒன்றியங்களில் கடந்த காலங்களில் லாபத்தில் இருந்து பால் உற்பத்தியாள ர்களுக்கு ஊக்கத்தொ கையாக அந்தந்த ஆண்டு வழங்கிய பாலுக்கு லிட்டருக்கு 50 பைசா முதல் 1.50 ரூபாய் வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கியது. ஆனால் கடந்த 7 ஆண்டு களாக ஊக்கத்தொகை வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் 3 ரூபாய் குறைத்ததால் ஆவின் இணையம், மாவட்ட ஒன்றியங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நுகர்வோருக்கு குறைத்து வழங்கிய 3 ரூபாயை மானியமாக வழங்க வேண்டும்.அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள், அங்கன்வாடி குழந்தைக ளுக்கு ஆவின் பால் பவுடர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    பால் உற்பத்தியாளர்கள் இணையம், ஆவின் மாவட்ட ஒன்றியங்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை நேரடியாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல 1999 - 2000ம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி வாட்ச் டாக் கமிட்டி அமைத்து இரு அனுபவம் வாய்ந்த நபர்களை நியமனம் செய்தனர்.அதே போன்று மீண்டும் கமிட்டி அமைக்க அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வ ருக்கு மனு அனுப்பப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு மின்னணு பரிமாற்ற முறையில் வழங்கப்பட்டது.
    • ஊக்கத் தொகையாக ரூ.99828-ஐ சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரத்தில் செயல்படும் வடுகபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஈட்டிய நடப்பாண்டு லாபத்தொகை யிலிருந்து பால் உற்பத்தியாள ர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.99828-ஐ சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு மின்னணு பரிமாற்ற முறையில் வழங்கப்பட்டது.

    பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் (பால்வளம்) இரா.கணேஷ், ஆவின் பொது மேலாளர் ஆர்.சதீஸ் மற்றும் ஆவின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அந்த பகுதியில் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    பவானி அருகே ஆப்பகூடல் மெயின் ரோட்டில் ஜம்பை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தின் முன்பு இன்று (திங்கட்கிழமை) காலை பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரணடனர்.

    தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்கிட வேண்டும். கால்நடை மருத்துவர் வாரம் ஒருமுறை வர வேண்டும்.

    50 சதவீதம் கால்நடை தீவன மானியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். கால்நடைகளுக்கு 24 மணி நேரமும் வாரத்தில் அனைத்து நாட்களும் இலவச மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வழங்க வேண்டும்.

    கால்நடை களுக்கு தடை இல்லாமல் விலையில்லா இறப்பு காப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதேபோல் அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரும் வரை பல்வேறு கட்ட போரா ட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தனர்.

    இதையொட்டி அந்த பகுதியில் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

    • நவம்பர் 26-ம் நாள் தேசிய பால் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்ததினமான நவம்பர் 26-ம் நாள் தேசிய பால் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தேசிய பால் தினம் கொண்டாடப்பட்டது.

    இதில் வெண்மைப்புரட்சிக்கு வித்திட்ட டாக்டர்.வர்கீஸ் குரியன் பணி பற்றி நினைவு கூறப்பட்டு, சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தலா 3 நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டது. இதில் திருப்பூர் ஒன்றிய பொது மேலாளர், துணைப்பதிவாளர்(பால்வளம்), உதவிப்பொது மேலாளர், குழுத்தலைவர்கள், ஒன்றிய பணியாளர்கள், விரிவாக்க அலுவலர்கள், சங்கச் செயலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன்உதவிகளை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை தொகுதியில் உள்ள திருப்புவனம் பால்உற்பத்தியாளர் சங்கம் அதிக அளவில் பால்கொள்முதல் செய்யும் சங்கமாகும். இந்த சங்கத்திற்கு உட்பட்ட பால்உற்பத்தியாளர்களுக்கு திருப்புவனம் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திருப்புவனம்பேரூராட்சி தலைவரும், பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை ஒன்றிய குழு துணை தலைவர் மூர்த்தி, பால் உற்பத்தியாளர் சங்க மேலாளர் கிருஷ்ணன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • நெல்லை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் அரசு உத்தரவின்படி தினமும் நெல்லை ஆவினுக்கு அனுப்பப்படுகிறது.
    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2022 ஆண்டு மார்ச் முடிய 6 மாத காலத்திற்கு 65 கிளை கறவைக்கூடங்கள் மூலம் 12 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் அரசு உத்தரவின்படி தினமும் நெல்லை ஆவினுக்கு அனுப்பப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2022 ஆண்டு மார்ச் முடிய 6 மாத காலத்திற்கு 65 கிளை கறவைக்கூடங்கள் மூலம் 12 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    பால் உற்பத்தியாளர்கள் கறவை செய்த 11,44,775.500 லட்சம் லிட்டர் பாலுக்கு கூடுதல் கொள்முதல் விலையாக லிட்டருக்கு ரூ.4.50 வீதம் கறவை உறுப்பினர்களுக்கு சங்கத் தலைவர் கட்டளை அன்பு பரிசாக வழங்கினார்.

    அதன்படி மொத்தம் ரூ.51 லட்சத்து 51 ஆயிரத்து 489 ரூபாய் வழங்கப்பட்டது.

    முதல் பரிசாக பால்கட்டளையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு ரூ.75,224-ம், இரண்டாம் பரிசாக ரஸ்தாவை சேர்ந்த வேல் குமார் என்பவருக்கு ரூ.48,900, மூன்றாம் பரிசாக சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த சந்தனராஜ் என்பவருக்கு ரூ.46,192-ம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மாரியப்பன், சங்கச் செயலாளர் வெங்கடாசலம், சிப்பந்திகள், நிர்வாகிகள் மற்றும் கறவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×