பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன்உதவி

பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன்உதவிகளை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார். கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன்உதவி
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம். மானாமதுரை தொகுதியில் உள்ள திருப்புவனம் பால்உற்பத்தியாளர் சங்கம் அதிக அளவில் பால்கொள்முதல் செய்யும் சங்கமாகும். இந்த சங்கத்திற்கு உட்பட்ட பால்உற்பத்தியாளர்களுக்கு திருப்புவனம் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருப்புவனம்பேரூராட்சி தலைவரும், பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை ஒன்றிய குழு துணை தலைவர் மூர்த்தி, பால் உற்பத்தியாளர் சங்க மேலாளர் கிருஷ்ணன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com