search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரவுபதி முர்மு"

    • ஆரோவில் நிர்வாகத்தினர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
    • ஆரோவில் சர்வதேச நகரம் உருவான விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.

    புதுச்சேரி,

    புதுவைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வந்தார். 2-வது நாளான இன்று காலை கடற்கரை சாலையில் வாக்கிங் சென்றார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை ஜனாதிபதி சந்தித்தார். அவரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

    பின்னர் பிற்பகல் 11:25 மணியளவில் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்றார் ஜனாதிபதி. ஆசிரம நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து மகான் அரவிந்தர், அன்னையின் சமாதியில் மலர்களை வைத்து தியானம் செய்தார்.

    பின்னர் அரவிந்தர், அன்னை ஆகியோர் பயன்படுத்திய அறைகளை பார்வையிட்டார். பின்னர் அரவிந்தர் ஆசிரம நூலகத்துக்கு சென்று பார்வையிட்டார். அரவிந்தர், அன்னையின் வரலாறை ஆசிரம நிர்வாகிகள் எடுத்துக்கூறினார். சுமார் ஒரு மணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்தார்.

    தொடர்ந்து அங்கிருந்து சாலைமார்க்கமாக ஆரோவில் சென்றார். ஆரோவில் நிர்வாகத்தினர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் மாத்ரி மந்திர் சென்றார். மாத்ரி மந்திர் அமைவிடம் குறித்து அவர்கள் விளக்கினர். அங்கே ஜனாதிபதி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அங்கேயே ஜனாதிபதி மதிய உணவருந்தினார். இதன்பின் ஆரோவில் நகர் கண்காட்சி அரங்கத்தை பார்வையிட்டார்.

    ஆரோவில் சர்வதேச நகரம் உருவான விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதை ஜனாதிபதி பார்த்தார். தொடர்ந்து ஆரோவில் கருத்தரங்கு அறையில் அரவிந்தரின் 150-வது ஆண்டுவிழா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.

    இதன்பின் அங்கிருந்து லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

    • போலீஸ் அதிகாரிகள் காரில் சென்று ஜனாபதி செல்லும் வழிகளில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
    • நோயாளிகளுக்கான மருத்துவ அட்டை பதிவு முன்கூட்டி காலை 7 மணி முதல் தொடங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார். நாளை ஜிப்மரில் ரூ.17 கோடியில் அமைக்கப்பட்டுள்ள லைனியர் ஆக்சி லேட்டர் என்று உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணியளவில் மணக்குள விநாயகர் கோவிலில் தரிசனம் செய்கிறார்.

    அதைத்தொடர்ந்து கைவினை கிராமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்கிறார். இரவில் நீதிபதிகள் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். அதன்பின் ஆரோவில்லில் நடக்கும் அரவிந்தர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு வந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாகி இறங்கியுள்ளனர். 1500 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் போலீஸ் அதிகாரிகள் காரில் சென்று ஜனாபதி செல்லும் வழிகளில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    மேலும் புதுவை வான்பகுதியில் 2 நாட்கள் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ளார்.

    மேலும் சாலைகளில் உள்ள பேனர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் படி ஜனாதிபதி செல்லும் வழியெங்கும் உள்ள பேனர்கள், ஆக்கிரமிப்பு கடைகளை பொதுப்பணி, உள்ளாட்சித்துறையினர் அகற்றி வருகின்றனர்.

    புதுவை ஜிப்மருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கான மருத்துவ அட்டை பதிவு முன்கூட்டி காலை 7 மணி முதல் தொடங்கப்படுகிறது.

    • சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.
    • ஜனாதிபதி வருகையையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை பல்கலைக் கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதன்மை விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்த மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்குவதற்கான சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா சில நிர்வாக காரணங்களால் அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றிரவே சென்னை வந்துவிட்டார். கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த ஜனாதிபதிக்கு இன்று காலையில் முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது.

    அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு காலை 10.15 மணிக்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்றார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பல்கலைக்கழக இணை வேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர் பேராசிரியர் கவுரி ஆகியோர் வரவேற்றனர்.

    அதன் பிறகு அங்கிருந்த அறைக்கு சென்று பட்டமளிப்பு விழா அங்கி அணிந்து விழா அரங்குக்கு ஜனாதிபதி வருகை தந்தார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரும் வருகை புரிந்தனர்.

    அதன் பிறகு சரியாக 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழா தொடங்கியது. அனைவரையும் பல்கலைக் கழக துணை வேந்தர் கவுரி வரவேற்றார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவ விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கி பேசினார்.

    அதன் பிறகு மாணவ-மாணவிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டங்கள் வழங்கி உரையாற்றினார். அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவர்களுக்கும் தர வரிசையில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 100 பேருக்கு பட்டம், பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார். இன்றைய விழாவில் மொத்தம் 762 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 565 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 104416 பேர் பட்டம் பெறுகிறார்கள்.

    விழாவில் சென்னை பல்கலைக் கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி படிப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்றிருந்தனர். விழா முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு புறப்பட்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு செல்கிறார்.

    இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று அவர்கள் மத்தியில் கலந்துரையாடுகிறார்.

    அதன் பிறகு இரவு 7 மணிக்கு கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால் பெயர் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அந்த விழாவில் ஜனாதிபதி பங்கேற்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று அந்த அரங்குக்கு பெயர் சூட்டி கல்வெட்டை திறந்து வைக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு இரவு விருந்து அளிக்கிறார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    • உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.
    • முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகை தந்தார்.

    நீலிகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.

    மேலும், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட புகழ் 'பொம்மி' யானைக்கு கரும்பு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    • புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் விமான தளத்துக்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு மசினகுடிக்கு வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலமாக சிறப்பு பாதுகாப்பு படையினருடன் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.

    அப்போது அவர்களை பாராட்டுவதோடு, அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடுகிறார். அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளையும் பார்வையிடுகிறார். ஜனாதிபதி வரும் போது 12 வளர்ப்பு யானைகள் அனைத்தும் வரிசையாக நிற்கவைக்கப்பட உள்ளது.

    அப்போது அந்த யானைகளுக்கு ஜனாதிபதி, பழங்கள் மற்றும் உணவுகளை வழங்குகிறார். சிறிது நேரம் யானைகளை பார்வையிடும் அவர், தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பார்வையிடுகிறார்.

    ஒரு மணி நேரம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இருக்கிறார்.

    அதன்பின்னர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு காரில் மசினகுடிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் சென்று, அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 போலீஸ் சூப்பிரண்டுகள், 7 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முதுமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மசினகுடி, முதுமலை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமு க்குள்ளும் பலத்த பாதுகாப்புகள் போட ப்பட்டுள்ளது. இதுதவிர மசினகுடி-தெப்பக்காடு, தொரப்பள்ளி-தெப்பக்காடு சாலை, பந்திப்பூர்-தெப்பக்காடு சாலை உள்ளிட்ட சாலைகளிலும் நக்சல் தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    இதேபோல் முதுமலை வனப்பகுதிக்குள் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் உள்ளரா எனவும் போலீசார் கண்காணித்தனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மசினகுடி-தெப்பக்காடு சாலையில் இன்று மாலை மட்டும் சில மணி நேரங்கள் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால் மைசூர்-கூடலூர் சாலையில் வாகனங்கள் வழக்கம் போல இயங்கும். மேலும் ஜனாதிபதி வந்து செல்லும் வரை தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய 3 எல்லை சாலைகளும் மூடப்படுகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    • அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் நாளான நாளை மறுநாள் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
    • ஜனாதிபதி வருகையையொட்டி, சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன் முறையாக திரவுபதி முர்மு சென்னைக்கு நாளை மாலை வருகிறார்.

    இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு மாலை 6.50 மணிக்கு வந்து இறங்கும் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

    வரவேற்புக்கு பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

    மறுநாள் (6-ந்தேதி) காலை 10 மணிக்கு காரில் புறப்பட்டு சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த பட்டமளிப்பு விழா சில நிர்வாக காரணங்களுக்காக கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரங்கில் நடத்தப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார்.

    அங்கு முக்கிய பிரமுகர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    முக்கிய பிரமுகர்களின் சந்திப்புக்கு பிறகு தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரதிநிதிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதன் பிறகு மாலை 7 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு விருந்து அளிக்கிறார்.

    இந்த விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளுமாறு நேற்று முன்தினம் கவர்னரின் செயலாளர் நேரில் சென்று அழைப்பு கொடுத்து உள்ளார். இதனை ஏற்று விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இதே போல் மூத்த அமைச்சர்களும் விருந்தில் பங்கேற்க உள்ளனர். இது தவிர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார், தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    அன்றிரவும் கவர்னர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி 7-ந்தேதி காலையில் காரில் சென்னை பழைய விமான நிலையம் செல்கிறார்.

    அங்கு ஹெலிகாப்டர் மூலம் காலை 9.55 மணிக்கு புதுச்சேரி மாநிலம் செல்கிறார். புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜனாதிபதி அன்றிரவு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நீதிமன்ற விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    பின்னர் 8-ந்தேதி மாலை 5.05 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு வழியனுப்பு விழா நடக்கிறது. இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி, சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி வருகையையொட்டி டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் கவர்னர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி தீவிரமாக கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை 2 முறை நடத்தப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் நாளான நாளை மறுநாள் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இதேபோன்று கவர்னர் மாளிகை, சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன் பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை மதியம் முதுமலைக்கு செல்கிறார்.

    தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்லும் அவர் முகாமில் பாகன் தம்பதிகள் பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்டு தெரிவித்து உரையாடுகிறார்.

    மேலும் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உணவு வழங்குகிறார்.

    அங்குள்ள ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களையும் சந்தித்து பேசுகிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. 1000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

    நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் மைசூர் செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து மாலையில் சென்னை வருகிறார்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடக மாநிலம் மைசூரு வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிறார்.
    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை மையமாக வைத்து, தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

    இந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை தொடர்ந்து படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    கடந்த மாதம் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பொம்மன், பெள்ளி ஆகியோர் சந்தித்து, முதுமலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

    அதனை ஏற்று வருகிற 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடக மாநிலம் மைசூரு வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிறார்.

    அங்கு பாகன் தம்பதி மற்றும் யானை பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. நேற்று ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் பலர் மசினகுடியில் உள்ள தற்காலிக ஹெலிபேட், தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் போது பல்வேறு ஆலோசனைகளையும் அவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் அம்ரித், முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், துணை இயக்குனர்கள் வித்யா, அருண் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முதுமலை, மசினகுடி உள்ளிட்ட இடங்களில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி ஏற்கனவே யானைகள் முகாம் மூடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று முதல் முதுமலையில் செயல்பட்டு வரும் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளும் மூடப்பட்டன. மேலும் அங்கு அறை முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடியை சித்தராமையா சந்தித்து பேசவும் அனுமதி கேட்டுள்ளார்.
    • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியை சந்தித்து மந்திரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்பு மந்திரிகளை டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது அதன்படி, வருகிற 21-ந் தேதி மந்திரிகள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்கள். அங்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து மந்திரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த நிலையில், டெல்லிக்கு செல்லும் முதல்-மந்திரி சித்தராமையா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசுவதற்கு அனுமதி கேட்டு இருந்தார். அதன்படி, வருகிற 21-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசுவதற்கு ஜனாதிபதி அலுவலகம் அனுமதி வழங்கி இருக்கிறது. இதன்மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சித்தராமையா சந்தித்து பேசுவது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் பிரதமர் மோடியை சித்தராமையா சந்தித்து பேசவும் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பிரதமரை, முதல்-மந்திரி சித்தராமையா சந்தித்து பேசுவதற்கு இன்னும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • ஏப்ரல் 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றார்.
    • விழாவுக்கான அழைப்பிதழ் அச்சடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

    சென்னை :

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் கலைஞர் கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் என்று கூறினார்.

    அதன்படி, தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் 3 கட்டிடங்களை கொண்ட இந்த மருத்துவமனை, ஆயிரம் படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த மருத்துவமனையை ஜூன் 3-ந்தேதியன்று கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்முவை வைத்து திறப்பதற்கு அரசு திட்டமிட்டது. அதற்காக கடந்த ஏப்ரல் 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றார். ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

    அதைத்தொடர்ந்து ஜூன் 5-ந்தேதியன்று நடக்கும் மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

    எனவே இந்த விழாவுக்கான அழைப்பிதழ் அச்சடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. ஆனால் ஜூன் 5-ந்தேதி சென்னைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவில்லை என்ற தகவல் வெளியானது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வதால் மருத்துவமனை திறப்பு விழாவை வேறு தேதிக்கு ஒத்திவைக்கும்படி ஜனாதிபதி அலுவலக தரப்பில் கூறப்பட்டது.

    அதன் அடிப்படையில் விழா தள்ளிவைக்கப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் சென்னைக்கு ஜூன் 15-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வருவதாக ஜனாதிபதி அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை அவர் ஜூன் 15-ந்தேதி திறந்து வைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    • புதிய பாராளுமன்றத்தை பிரதமர் திறப்பது பழங்குடியினரையும், பெண்களையும் அவமதிப்பதாகும் என பேட்டி.
    • பழங்குடியினரை குறிவைத்து அரசியல் செய்யும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டம்

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ஜனாதிபதி திரவுபதி முர்முவை வைத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தலைவர் சிவாஜிராவ் மோகே இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைப்பது ஜனநாயகத்தை அவமதிப்பதாகும். முதல் முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அதுவும் பெண் ஜனாதிபதியை பெற்றிருக்கிறோம். புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி திறப்பது பழங்குடியினரையும், பெண்களையும் அவமதிப்பதாகும்.

    பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது ஜனாதிபதி என்பதால், அவர் பாராளுமன்றத்தின் முக்கிய அங்கம். எனவே, புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும். அவர் பழங்குடியினர் என்பதால் இப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை.

    பழங்குடியினர் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் இந்த முயற்சிக்கு எதிராக, நாளை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல. முடிவை மாற்றுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. பிரதமர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதியை அழைத்து திறந்து வைக்க வேண்டும்.

    பழங்குடியினரை குறிவைத்து அரசியல் செய்யும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம். பழங்குடியினரை அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    • திரவுபதி முர்மு 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ராஞ்சி :

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று ஜார்கண்ட் சென்றார். இதற்காக திேயாகர் விமான நிலையத்தில் சென்று இறங்கிய அவரை மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    பின்னர் அவர் அங்குள்ள பாபா பைத்யநாதர் கோவிலுக்கு சென்றார். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த புகழ்பெற்ற கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க முர்மு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் வாரியம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முர்முவின் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக தலைநகர் ராஞ்சியில் நேற்று மாலையில் ஐகோர்ட்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார்.

    ரூ.550 கோடியில் 165 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த ஐகோர்ட்டு வளாகம் நாட்டின் மிகப்பெரிய ஐகோர்ட்டு வளாகங்களில் ஒன்றாகும்.

    இதற்காக தியோகரில் இருந்து ராஞ்சி சென்றடைந்த திரவுபதி முர்முவை, அங்குள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில், மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அங்கிருந்து பிர்சா சவுக் சென்ற ஜனாதிபதி, அங்கு பழங்குடியின தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் தியாகி ஆல்பர்ட் எக்காவுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (வியாழக்கிழமை) குன்றி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக மத்திய பழங்குடி நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்கள் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். அத்துடன் ராஞ்சி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவிலும் மாலையில் பங்கேற்கிறார்.

    ஜனாதிபதியாக 2-வது முறையாக ஜார்கண்ட் சென்றுள்ள திரவுபதி முர்முவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகின்றன. அவர் கடந்த 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. அத்துடன், சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

    நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இந்நிலையில், திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை 19 எதிர்க்கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்பும் பாராளுமன்ற வளாகத்தில் கட்டிடங்களை பிரதமர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள் என்றும், இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    'மக்களவை சபாநாயகர் தான் பாராளுமன்றத்தின் பொறுப்பாளர், அவர்தான் பிரதமரை அழைத்துள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா வரலாற்று நிகழ்வு. ஒவ்வொரு நிகழ்வையும் அரசியலாக்குவது நல்லதல்ல. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கிறது' என்றும் ஜோஷி தெரிவித்தார்.

    ×