search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் சித்தராமையா வருகிற 21-ந்தேதி சந்திப்பு
    X

    ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் சித்தராமையா வருகிற 21-ந்தேதி சந்திப்பு

    • பிரதமர் மோடியை சித்தராமையா சந்தித்து பேசவும் அனுமதி கேட்டுள்ளார்.
    • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியை சந்தித்து மந்திரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்பு மந்திரிகளை டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது அதன்படி, வருகிற 21-ந் தேதி மந்திரிகள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்கள். அங்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து மந்திரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த நிலையில், டெல்லிக்கு செல்லும் முதல்-மந்திரி சித்தராமையா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசுவதற்கு அனுமதி கேட்டு இருந்தார். அதன்படி, வருகிற 21-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசுவதற்கு ஜனாதிபதி அலுவலகம் அனுமதி வழங்கி இருக்கிறது. இதன்மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சித்தராமையா சந்தித்து பேசுவது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் பிரதமர் மோடியை சித்தராமையா சந்தித்து பேசவும் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பிரதமரை, முதல்-மந்திரி சித்தராமையா சந்தித்து பேசுவதற்கு இன்னும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×