search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள்"

    • எதிர்க்கட்சி தலைவர்களை என்ன காரணத்துக்காக அமலாக்கதுறை சோதனை செய்து கைது செய்கிறது- சவுகதா ராய்
    • சம்பாய் சோரன் பதவிப் பிரமாணம் செய்ய ஏன் இவ்வளவு நேரம் ஆனது- பிரியங்கா சதுர்வேதி

    பாராளுமன்றத்தில் நேற்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து இன்று பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினர். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர்களை என்ன காரணத்துக்காக அமலாக்கதுறை சோதனை செய்து கைது செய்கிறது. இதுவரை அமலாக்கத்துறையால் எதையும் நிரூபிக்க முடியவில்லை.

    தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள தலைவர்களை வேட்டையாட முயற்சிக்கிறது. இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

    உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:-

    சம்பாய் சோரன் பதவிப் பிரமாணம் செய்ய ஏன் இவ்வளவு நேரம் ஆனது. கவர்னர் அலுவலகத்தை மத்திய அரசு எப்படி தவறாக பயன்படுத்தியது என்பதை இது காட்டுகிறது.

    போராடுபவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆம் ஆத்மி எம்.பி. சுஷில் குமார் ரிங்கு கூறியதாவது:-

    அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என்று அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினோம். ஆனால் இதுவரை அமலாக்கதுறை எதையும் தெளிவுப்படுத்தவில்லை. எனவே இதை கண்டித்து ஆம் ஆத்மி மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் இன்று பா.ஜ.க.-வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பின் பேரில் ஆலோசனை கூட்டம்.
    • ஆலோசனை கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-வை எதிர்கொள்ளும் நோக்கில் எதிர் கட்சிகள் சார்பில் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் மற்றொரு ஆலோசனை கூட்டம் இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைய ஆலோசனை கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

     

    இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரமோத் திவாரி, கே.சி. வேனுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, ஜெ.எம்.எம். கட்சியின் மஹூவா மஜி, ம.தி.மு.க. சார்பில் வைகோ, ஆர்.எஸ்.பி. கட்சியின் என்.கே. பிரேமசந்திரன், சி.பி.ஐ. சார்பில் பினோய் விஸ்வம், ஜெ.டி.யு. சார்பில் லாலன் சிங், எஸ்.பி. கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ் மற்றும் எஸ்.டி. ஹாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இத்துடன் ஆர்.எல்.டி. சார்பில் ஜெயந்த் சவுத்ரி, என்.சி.பி. கட்சியின் வந்தனா சாவன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் ராகவ் சத்தா, தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, டி.ஆர். பாலு, காங்கிரஸ் கட்சியின் சவுரவ் கோகோய், நசீர் ஹூசைன் மற்றும் ராஜானி பாட்டீல், சி.பி.ஐ.எம். சார்பில் எலமரம் கரீம், ஆர்.ஜே.டி. சார்பில் ஃபயாஸ் அகமது, கேரளா காங்கிரஸ் சார்பில் ஜோஸ் கே மணி, என்.சி. சார்பில் ஹஸ்னைன் மசூதி, ஐ.யு.எம்.எல். சார்பில் முகமது பஷீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஐந்து மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

    • மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அலர்ட் மெசேஜ்
    • ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

    எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்களின் டெலிபோன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்பது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலமாக ஒட்டு கேட்கப்பட்டதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு இந்திய அரசில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில்தான் "அரசின் ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்கள், ஆப்பிள் ஐடியுடன் இணைக்கப்பட்ட உங்கள் ஐபோனை ரிமோட் மூலம் ஹேக் செய்ய வாய்ப்புள்ளது. இது தவறான அலர்ட் ஆகக்கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருங்கள்" என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், பவன் கேரா, கே.சி. வேணுகோபால், சுரியா ஸ்ரீநாத், டி.எஸ். சிங்டியோ, பூபிந்தர் சிங் ஹூடா, திரணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா,

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா உள்ளிட்ட எம்.பி.க்கள் பலருக்கு அலர்ட் மெசேஜ் வந்திருந்தது.

    இதையடுத்து மத்திய பா.ஜனதா அரசு தங்களை உளவு பார்த்து ஒட்டு கேட்க முயற்சிப்பதாகவும், செல்போன் தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் "இந்த பிரச்சனையில் மத்திய அரசு அக்கறையோடு செயல்படுகிறது. விசாரணை நடத்த உள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ஆப்பிள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது" என்றார்.

    இந்த நிலையில் இந்தியாவின் கணினி எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT) விசாரணையை தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் விசாரணைக்கு ஒத்துழைக்கும் என தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதுபோன்று ஆப்பிள் எதிர்க்கட்சிகளுக்கு அலர்ட் மெசேஜ் கொடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.

    • இந்தியா பெயரை பாரத் என்று மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • இந்தியாவின் பெயரையே மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் மத்திய அரசு இந்தியா பெயரை பாரத் என்று மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

    எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளதால் தான் இந்தியாவின் பெயரையே மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்படி பாரத் என்று பெயரை மாற்றினாலும் அந்த பெயரிலேயே கூட்டணியின் பெயரை மாற்ற தயாராக உள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என்ற பெயரை பாரத் என்று குறிக்கும் வகையில் நல்லிணக்கம், நட்பு, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை கொண்டு வரும் கூட்டணி (பாரத்) என மாற்றம் செய்வதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா கூட்டணி செயல் திட்டம் என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.
    • உபா சட்டத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

    ஐதராபாத்:

    அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மாற்று அல்ல. நாட்டை சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. கிட்டத்தட்ட பா.ஜனதா கூட்டணி 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது.

    தேசத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத 3-வது அரசாங்கம் தற்போது தேவைப்படுகறது. அப்போது தான் இந்த நாட்டில் நல்லது நடக்கும்.

    இந்தியா கூட்டணி என்பது உயரடுக்கு மக்களின் கிளப் ஆக உள்ளது. உண்மையில் அவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

    உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. இந்தியா கூட்டணி செயல் திட்டம் என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.

    உபா சட்டத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சிறையில் வாடுகிறார்கள்.

    இந்தியா கூட்டணிக்கு நாங்கள் செல்லமாட்டோம். நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம்.

    தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. முதல்-மந்தரி சந்திரசேகரராவ் திறமையானவர். தொலை நோக்கு பார்வை கொண்டார். அவரது அரசியல் சாதுரியத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் ஓவைசி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் பா.ஜனதாவின் பி அணியாக செயல்படுகிறது என்று இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒருங்கிணைப்பு குழு, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு நடைபெற வாய்ப்பு
    • மாநிலத்தில் நேருக்குநேர் மோதும் சூழல் குறித்து ஆராய்தல்

    டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மும்பையில் வருகிற 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ''நான் மும்பைக்குச் செல்வேன். அங்கு நடப்பதை தங்களிடம் தெரிவிப்பேன்'' என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

    மும்பையில் நடைபெற இருக்கும் இருநாள் கூட்டம், கர்நாடகாவில் நடைபெற்றதுபோல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்நாள் அனைத்து தலைவர்களும் மும்பை செல்வார்கள். இரண்டாவது நாள் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து முடிவு எடுப்பார்கள்.

    இந்த கூட்டத்தில் மாநிலத்தில் நேருக்குநேர் மோதும் சூழ்நிலை குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தை உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நடத்துகின்றன. இந்த கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு, ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

    • எதிர்க்கட்சிகளெல்லாம் ஒன்று சேரும் என்று மோடியே எதிர்பார்த்து இருக்கமாட்டார்.
    • சனாதன தர்மம் வீழ்த்தப்படும் என்று நம்புவதாக கூறி இருக்கிறார்.

    இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மியும் காங்கிரசும் முட்டி கொள்கின்றன. சரத்பவாரும், அஜித்பவாரும் பிரிந்ததை மறந்து மீண்டும் பேசிக்கொள்கிறார்கள். எனவே கூட்டணிக்குள் யார் யாரெல்லாம் இருப்பார்கள்? என்ன நடக்குமோ? என்று பலர் அச்சத்தோடு இருக்கிறார்கள்.

    ஆனால் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மிகுந்த நம்பிக்கையோடு அடித்து சொல்கிறார் இந்தியா கூட்டணிதான் வெல்லும் என்று.

    இப்படி எதிர்க்கட்சிகளெல்லாம் ஒன்று சேரும் என்று மோடியே எதிர்பார்த்து இருக்கமாட்டார். எனவே இந்தியா கூட்டணியே வெல்லும். சனாதன தர்மம் வீழ்த்தப்படும் என்று நம்புவதாக கூறி இருக்கிறார்.

    • சரத் பவாரை அஜித் பவார் சந்தித்தது கூட்டணியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது
    • சரத் பவார் இல்லாமல் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க இருப்பதாக வதந்தி வெளியானது

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு அண்ணன் மகன் ஆவார்.

    இருவருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வரும் நிலையில், குடும்ப விசயமாக சந்தித்துள்ளனர். முன்னதாக ஒருமுறை சரத் பவார் மனைவி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அஜித் பவார் சரத் பவார் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சரத் பவாரை அஜித் பவார் ரகசிய சென்று சந்தித்தார். இது குடும்ப சந்திப்பு என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.

    ஆனால் சரத் பவார் உடன் கூட்டணி வைத்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் இந்த சந்திப்பை விரும்பவில்லை.

    சிவசேனா தனது கட்சி பத்திரிகையில் இதுகுறித்து விமர்சனம் செய்திருந்தது. தொடர் சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.

    சரத் பவார்- அஜித் பவார் சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

    ஏனென்றால் இந்த மாத இறுதியில் மகாராஷ்டிராவில் இரண்டு நாட்கள் I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சிகள் உள்ளன.

    இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமே, பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மேலும், பொதுத்தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடித்து கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என உத்தவ் தாக்கரே நினைக்கிறார். இவ்வாறு இருக்கும்போது பவார்கள் சந்திப்பு கூட்டணி கட்சிகளுக்கு சரியென்று படவில்லை.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், பவார்களின் சந்திப்பு கவலைக்குரிய விசயம் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நானா பட்டோல் கூறியதாவது:-

    இருவரின் சந்திப்பு எங்களை பொறுத்தவரை கவலைக்குரிய விசயம்தான். ரகசிய இடத்தில் நடைபெற்ற இருவருடைய சந்திப்பை நாங்கள் ஏற்கவில்லை. எனினும், இந்த விசயம் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் விவாதிப்பார்கள். எதிர்க்கட்சி கூட்டணி விவாதிக்கும். ஆகவே, இது குறித்து மேலும் விவாதிப்பது ஏற்புடையதாக இருக்காது. காங்கிரஸ் மக்களவை தேர்தலில் சரத் பவார் கட்சி இல்லாமல் போட்டியிடும் என்பதில் எந்த உண்மையும் இல்லை'' என்றார்.

    • எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து பாதியில் வெளியேறினர்.
    • மேற்கு வங்காளத்தில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது.

    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சியின் பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சி மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் நடந்தது. இதில் பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது:-

    பாராளுமன்றத்தில் நாம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்து, நாடு முழுவதும் எதிர்மறை கருத்துக்களை பரப்பியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து பாதியில் வெளியேறினர்.

    அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க பயந்தனர் என்பது தான் உண்மை. மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின.

    மணிப்பூர் மக்களின் வலியை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மணிப்பூரை சூறையாடி உள்ளனர்.

    மணிப்பூர் குறித்த விவகாரத்தை அவர்கள் விரும்பவில்லை. மணிப்பூரை வைத்து அரசியல் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள். பல விவகாரங்கள் குறித்து பேசும் அவர்கள் மணிப்பூரை மட்டும் பேசவில்லை. மணிப்பூர் மீது எதிர்க் கட்சிகளுக்கு அக்கறை கிடையாது.

    மேற்கு வங்க மாநில உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. பா.ஜனதா வேட்பாளர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வேட்புமனு தாக்கலை தடுத்து நிறுத்தினர்.

    மேற்கு வங்காளத்தில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ரத்தக்களரி அரசியலை பின்பற்றுகிறது. மேற்கு வங்காளத்தில் ரத்தத்தில் அரசியல் நடத்துகிறது. எந்த ஒரு பா.ஜனதா வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்பதற்காக எதையும் செய்தனர்.

    பா.ஜனதாவினரை மட்டு மல்ல வாக்காளர்களையும் மிரட்டினர். வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆட்களை ஏற்பாடு செய்தனர். இது தான் அவர்கள் மாநிலத்தில் செய்யும் அரசியலின் விதம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட நாளில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை
    • எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும்போது பிரதமர் மோடி ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றை கையில் எடுப்பார்

    மகாத்மா காந்தியால் 1942-ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதனையொட்டி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்யும் வகையில் டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிக்கப்படும் நாளில், அர்ப்பணித்த போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ், காலனித்துவம் முடிவுக்கு வர இது முக்கிய பங்காற்றியது.

    இன்று இந்தியா ஒரே வார்த்தையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது ஊழலே வெளியேறு. வாரிசு அரசியலே வெளியேறு. தங்கள் நலனுக்காக சமாதானம் செய்து கொள்ளும் முடிவே வெளியேறு என்பதுதான்.

    இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    எதிர்க்கட்சிகள் என்றாலே ஊழல், வாரிசு அரசியல், சமாதானம் என்பதுதான் என பிரதமர் மோடி அடிக்கடி குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெள்ளையனே வெளியேறு தினத்தில் எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்துள்ளார்.

    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
    • மணிப்பூர் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று 9-வது நாளாக முடங்கின.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் மணிப்பூர் கலவரம் தொடர்பான அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. 8-வது நாளாக நேற்று பாராளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இரு அவைகளிலும் பதில் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்கட்சிகள் அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர்.

    இந்தநிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை காலை 11 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகளில் பதாகையுடன் முழக்கமிட்டனர்.

    சிலர் மைய பகுதிக்கு வந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். அரியானா கலவரம் தொடர்பான பிரச்சினையை பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் கிளப்பினார்கள்.

    எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.

    மேல் சபையிலும் மணிப்பூர் விவகாரத்தால் கடும் அமளி நிலவியது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த கோரி 60 நோட்டீஸ் கொடுக்கப்பட்டன. அமளியில் சபை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    மணிப்பூர் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று 9-வது நாளாக முடங்கின.

    • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை
    • நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் வரை மற்ற அலுவல் பணிக்கு எதிர்ப்பு

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற அலுவல் பணியை முடக்கி வருகின்றன. பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த மக்களவை சபாநாயகர், சம்மதம் தெரிவித்த நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து நேரம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    ஆனால் விவாதம் நடைபெறுவதற்கு முன் எந்தவொரு அலுவல் பணியும் நடைபெறக்கூடாது என எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சி தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்.

    ×