என் மலர்
இந்தியா

எதிர்க்கட்சிகள் கடும் அமளி... மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
- பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கியது
- வருகிற 19-ந் தேதி வரை இந்த பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நடைபெறுகிறது.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று (டிசம்பர் 1) தொடங்கியது.
இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்ட நிலையில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. SIR உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் மீண்டும் முழக்கமிட்ட நிலையில் மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.
கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடை பெற்ற மழைக்கால கூட்டத் தொட ரில் பீகாா் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது.
மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மேல்-சபையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது. குளிா்கால கூட்டத்தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா் கல்வி ஆணையம் அமைப் பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச்சந்தை உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
10 மசோதாக்களில் 4 நிதித்துறை தொடர்புடையவை, 2 சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்புடையவை. கல்வி, எரிசக்தி, போக்குவரத்து துறை, உள்துறை ஆகியவை தொடர்பான தலா ஒரு மசோதாவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






