search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சடலம்"

    • தோகைமலை அருகே மரத்தடியில் சடலம் மீட்கபட்டது
    • இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்

    கரூர்:

    திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (47) கூலி தொழிலாளி. இவர் தோகைமலையில் உள்ள தனது அக்கா சந்திராவை பார்ப்பதற்காக சென்றார். இந்நிலையில் பாதிரிப்பட்டி ஒயின்ஷாப் செல்லும் சாலையில் மரத்தடியில் பெரியசாமி இறந்து கிடந்தார். இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பெரியசாமி மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    • வேலாயுதம் பாளையம் அருகே காவிரி ஆற்றில் பெண் சடலம் மிதந்துள்ளது.
    • வெள்ளைநிற சேலை அணிந்திருந்த படி மிதந்த சடலத்தை பார்த்தவர்கள், இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பகுதியை சேர்ந்த சிலர் காவிரி ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளனர்.அப்போது காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் தண்ணீரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்துள்ளது. வெள்ளைநிற சேலை அணிந்திருந்த படி மிதந்த அந்த சடலத்தை பார்த்தவர்கள், இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இறந்த பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர், குளிக்கும் போது தவறி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டாரா அல்லது எவரேனும் அவரை கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிவிட்டனரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
    • நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் பிணமாக கிடந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.

    இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மௌரானிபூரின் நீர்ப்பாசனத் துறை ஊழியரிடம் இருந்து போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சியில் உள்ள சப்ரார் அணையில் 3 பெண்களின் சடலங்கள் மிதந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அணையில் சடலங்கள் மிதப்பதாக மௌரானிபூரின் நீர்ப்பாசனத் துறை ஊழியரிடம் இருந்து போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அணையில் மிதந்து வந்த 3சடலங்களை மீட்டனர்.

    இவர்கள் 18 முதல் 20 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க பெண்களின் சடலங்கள் என்றும் மத்தியப் பிரதேசத்தின் எல்லையில் உள்ள திகாம்கர் மாவட்டத்தில் இருந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்றில் திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக மூன்று பேரும் அடித்துச் சென்றனர்.
    • அற்றில் அடித்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவவை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உமரியா மாவட்டத்தில் 6 நாட்களுக்கு முன்பு மகாநதி ஆற்றில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட மூன்று பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, ஆற்றில் ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக மூன்று பேரும் அடித்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு படையினரின் உதவியுடன் ஒருவரை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் அடித்துச் செல்லப்பட்ட இருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், போலீஸ் கான்ஸ்டபிள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    மகாநதி ஆற்றின் அருகே, 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டில் கான்ஸ்டபிளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில், சடலமாக மீட்கப்பட்ட கான்ஸ்டபிள் பெயர் ப்ரிடாம பைகா (23) எனவும், அவருடன் அற்றில் அடித்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவனை தேடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    • 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில், உள்ள குட்டையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில், அவர் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தை சேர்ந்த மருதாசலம் மனைவி கந்தேஸ்வரி (55) என்பதும் கடந்த ஜூலை 30 ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது மகள் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இருக்கும் கிணற்றில் 55 வயது கன்னியாஸ்திரி சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kerala #Nun
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் மவுண்ட் தாபோர் கான்வென்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்த சுஷான் மேத்யூ (55) என்ற கன்னியாஸ்திரி இன்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    காலை 9 மணிக்கு கிணற்றின் சுற்றுச்சுவறில் ரத்தக்கறை இருந்ததை கண்டெறிந்த பள்ளி ஊழியர்கள், கிணற்றின் உள்ளே பார்க்கும் போது சுஷான் சடலமாக மிதந்துள்ளார். அவரது சடலத்தை மீட்ட போலீசார், பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

    நேற்று, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ  மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் நேற்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
    இறுதி ஊர்வலத்துக்காக சடலத்துடன் சவப்பெட்டி வானத்தில் இணைக்கப்பட்டிருந்தது தெரியாமல், வாகனத்தை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் இருக்கும் லாகியூபாகியூ பகுதியில் உள்ள மருத்துவமனையில் 80 வயது முதியவர் மரணமடையவே அவரது சடலம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பின்னர் அருகிலுள்ள அவரது ஊருக்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தில் வைக்கப்பட்டது.

    இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 40 வயதுமிக்க நபர், சாவியுடன் வாகனம் நின்றிருந்ததை பார்த்ததும், வானத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி விட்டார். வாகனம் மற்றும் சடலத்தை காணததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    40 நிமிட தேடுதல் வேட்டைக்கு பின்னர் நெடுஞ்சாலையில் வானத்தை மடக்கிப்பிடித்த போலீசார் சடலத்தை மீட்டனர். வாகனத்தை திருடிய அந்த நபரையும் கைது செய்தனர். 
    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

    10 பேர் தூக்கியில் தொங்கிய நிலையிலும், ஒரு 75 வயது வயது பெண் தரையில் கிடந்த படியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

    அவர்கள், தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை செய்யப்பட்டார்களா? என்பது மர்மமாக இருப்பதால் அப்பகுதியில் பீதி நிலவுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் இருந்து ஊழியர் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. #RashtrapatiBhavan
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள ரைசினா ஹிஸ்ல் பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. தற்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரிபுரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

    இதனை அடுத்து, அறையின் கதவை உடைத்து பார்த்த பின்னர் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு நான்காம் நிலை ஊழியராக இருக்கும் த்ரிலோகி சாந்த் என்பவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

    இதனால், அவர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேகத்திற்குரிய மரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியான நிலையில், அவர்களது சடலத்தை பெற உறவினர்களிடம் ரூ.200 லஞ்சம் கேட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. #VaranasiFlyoverCollapse
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நேற்று புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், மேம்பாலத்தின் கீழ் காரில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது சடலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பலியானவர்களின் உறவினர்கள் சடலத்தை பெற வந்த போது, அங்கிருந்த பிணவறை துப்புரவாளர் ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

    மேம்பால விபத்து தொடர்பாக இதுவரை நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
    ×