search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்டை"

    • செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
    • சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்துள்ளார்.

    திருவாரூர்:

    திருமக்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 75).

    மணி இறந்து விட்ட நிலையில் செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் செல்லம்மாள் நேற்று இரவு அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆன்ரோஅஸ்வந்த் ஆரோக்கியராஜ் மற்றும் திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது.
    • குட்டைக்கு மழைக்காலங்களில் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

    பல்லடம் :

    பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது. இந்தக் குட்டைக்கு மழைக்காலங்களில் கோவை- திருச்சி மெயின் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

    இந்தக் குட்டையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நீரோடையில் கழிவு நீரை விட ஆரம்பித்தனர். காலப்போக்கில் நீரோடை கழிவு நீர் ஓடையாக மாறி, தற்போது குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த குட்டை அருகே, கட்டடக் கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஏற்கனவே குட்டை மாசுபட்ட நிலையில், கட்டடக்கழிவுகள் மற்றும் கழிவுகளை போட்டு குட்டையை அழிக்க வேண்டாம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • குட்டை அருகில் உறிஞ்சு குழி அமைத்து அதில் விடுவதாகவும் தகவல்கள் வருகிறது.
    • கரைப்புதூர் ஊர் குட்டை மாசு அடைந்துவிடும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தலைவர் பாரதி சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரைப்புதூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஆதித்யா கார்டன், அண்ணா நகர் பகுதியில் இருந்து வரும் கழிவு நீரை மழை நீர் வடிகால் என்ற பெயரில் கழிவு நீர் கால்வாய் அமைத்து, கரைப்புதூருக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் ஊர் குட்டையில் விடுவதாகவும், அல்லது குட்டை அருகில் உறிஞ்சு குழி அமைத்து அதில் விடுவதாகவும் தகவல்கள் வருகிறது. இதனால் கரைப்புதூர் ஊர் குட்டை மாசு அடைந்துவிடும். இந்த குட்டை நீரை நம்பி வாழும் கரைப்புதூர் மக்களுடைய நீராதாரம் பாதிக்கப்படும். உலக தண்ணீர் தினத்தின் மகிமையை மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் உணர்த்த கிராம சபை கூட்டம் நடத்தி குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சனைக ளுக்கு தீர்வு காண தமிழக அரசு வழி வகை செய்துள்ளது. கரைப்புதூர் ஊராட்சி ஊர் குட்டையில் இருந்து 500 மீட்டர் தொலை வில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பகுதிக்குள் உறிஞ்சு குழிஅமைத்து கரைப்புதூர் மக்களுடைய நீர் ஆதாரத்தை, பாதுகாத்து தரும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.
    • அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா்.

    அவினாசி :

    சேவூா் அருகே ஆலத்தூா் சங்கம்பாளையத்தை சோ்ந்த குருசாமி- ரேவதி தம்பதியின் மகன் யோகேஷ் ( வயது 12).ஆலத்தூா் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தாா். யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.

    சம்பவத்தன்று மதியம் இவரது தாய் வெளியே சென்று விட்டு, மாலை வந்து பாா்த்த போது யோகேஷ் வீட்டில் இல்லாததால் தேடியுள்ளாா். பிறகு வீட்டிற்கு அருகே உள்ள குட்டைப் பகுதிக்கு சென்று பாா்த்தபோது அங்கு யோகேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா். இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். தந்தை குருசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், மகன் யோகேஷ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது.
    • வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர்.

     பல்லடம்:

    பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக பஸ் எண் 30. இந்த பஸ் பல்லடம்- திருப்பூர் வழித்தடத்தில் சேடபாளையம், ஆறுமுத்தாம்பாளையம்ய, கரைப்புதூர், வழியாக திருப்பூர் சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததபோது ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள குட்டை அருகே செல்லும்போது எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் பஸ்சை ரோட்டின் ஓரமாக ஓட்டினார்.

    இதில், குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது. இதனால் பஸ் லேசாக சாய்ந்த நிலையில் இருந்தது.பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், விடுமுறை நாளில் இந்த விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் இல்லை. இதுவே மற்ற நாளில் நடந்திருந்தால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் நிறைய பேர் பயணம் செய்திருப்பார்கள். அவர்கள் விபத்தில் சிக்கி இருந்தால் வேறு நிலை ஏற்பட்டிருக்கும், அதிர்ஷ்டவசமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோவில் குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
    • ட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபாளையம் ராசாதாத்தா கோவில் அருகே வருவாய்துறைக்கு சொந்தமான குட்டை உள்ளது. இந்த குட்டையின் பரப்பளவு 4.82 ஏக்கராகும். கடந்த 2 மாதமாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோவில் குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் குட்டையை சுற்றி பச்சை பசேலென மரங்கள் பசுமையாக அமைந்துள்ளது. ஆனால் குட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீைமக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

    திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பெரிய அளவிலான குளம், குட்டைகள் இல்லாத நிலையில் 4 ஏக்கர் பரப்பளவிலான குட்டையை பராமரித்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய திட்டமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
    • நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வடுகபாளையம் பகுதியில் குட்டை உள்ளது .இந்தக்குட்டையை பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    குட்டை துார் வாரும் பணி நடந்து வரும் சூழலில் இங்குள்ள புறம்போக்கு இடத்தில் தனி நபர்களுக்கு புதிதாக வழித்தடம் தடம் விட்டு பணிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே குட்டையை அளவீடு செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்), சசிரேகா ரமேஷ்குமார் (பா.ஜ.க,) ஆகியோர் நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் விரைவில் அளவீடு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் குட்டையை அளவீடு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொங்கலுார் ஆர்.ஐ., கேத்தனூர் வி.ஏ.ஓ. ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சு குழி மூலம் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது.
    • குப்பை, கழிவுகளும் குளம், குட்டையில் கலப்பதால் நீர்நிலை மாசுபடுகிறது

    அவிநாசி :

    கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சு குழி மூலம் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது. பல இடங்களில் கழிவுநீர் நேரடியாக குளம், குட்டைகளில் கலக்கிறது. கழிவுநீருடன் குப்பை, கழிவுகளும் குளம், குட்டையில் கலப்பதால் நீர்நிலை மாசுபடுகிறது.இதனை குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் கட்டமைப்பில், செங்குத்து உறிஞ்சுகுழி அமைக்க ஊரக வளர்ச்சி முகமை துறையினர் ஊக்குவித்து வருகின்றனர்.

    அவ்வகையில் கால்வாய் அல்லது வடிகாலில் பொருத்தப்பட்டுள்ள சல்லடையில் தண்ணீருடன் வழிந்தோடி வரும் குப்பை, பாலிதீன் போன்ற பொருட்கள் தேங்கி நின்று தண்ணீர் மட்டும் உறிஞ்சுகுழியில் விழுந்து நிலத்தடிக்கு செல்லும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் பல இடங்களில் இத்திட்டம் உரிய பலன் தருவதில்லை என்ற புகார் உள்ளது. குறைந்த அளவு தண்ணீர் வழிந்தோடி வரும் கால்வாயில் ஏற்படுத்தப்படும் இந்த கட்டமைப்பு உரிய பலன் தருவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில், உள்ள குட்டையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில், அவர் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தை சேர்ந்த மருதாசலம் மனைவி கந்தேஸ்வரி (55) என்பதும் கடந்த ஜூலை 30 ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது மகள் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • நொய்யல் நீராதாரத்தை அடிப்படையாக கொண்ட குளங்களில், இன்னும் நீர் நிரம்பியிருக்கிறது.
    • குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டதும், நீர் சேமிப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணமாக அமைந்தது.

    உடுமலை :

    தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த மழை திருப்பூர் மாவட்டத்தில் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் மீண்டும் நிறைவதற்கும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் பயன்படும். உள்ளாட்சிகளின் குடிநீர் வினியோகத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாத நிலையையும் பாசன நீராதாரத்திற்கு குறையில்லாத சூழலையும் உருவாக்கும்.

    ஏற்கனவே வடகிழக்குப் பருவமழை சராசரியைக் காட்டிலும் மாவட்டத்தில் அதிக அளவில் பெய்துள்ளது. இதனால்கடந்த கோடைக்காலத்தை குடிநீர்த்தட்டுப்பாடு இன்றி கடக்க முடிந்தது. நொய்யல் நீராதாரத்தை அடிப்படையாக கொண்ட குளங்களில், இன்னும் நீர் நிரம்பியிருக்கிறது. ஊராட்சிகளில் உள்ள பல்வேறு குளம், குட்டைகள், மழை காரணமாக, நீர் நிரம்பியிருந்தது. குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டதும், நீர் சேமிப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணமாக அமைந்தது. சமீப காலமாக மாவட்டத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள், அரசுடன் இணைந்து நீர்நிலைப்பராமரிப்பில் அக்கறை காட்டி வருகிறது. சிறிய மாற்றம் என்றாலும்கூட, அது பெரிய பயனை அளித்திருக்கிறது.

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதும் திருப்பூர் மாவட்டத்துக்கு அதிக பயன்களை அளிக்கிறது.குறிப்பாக, பில்லூர், பி.ஏ.பி., அணைகள் நிறைந்தால் திருப்பூர் மாவட்டத்திற்குத் தடையற்ற குடிநீர் ஆதாரத்துக்கும், பாசன நீராதாரத்திற்கும் வழிவகுக்கிறது.

    தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும். பவானியாற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.பி.ஏ.பி., திட்ட முக்கிய அணைகளில் ஒன்றான சோலையாறு அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் பரம்பிக்குளம்அணைக்கு திறந்து விடப்படுகிறது. பரம்பிக்குளம், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.இது திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மழைக்காலத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மழைநீர் சேமிப்பில் அக்கறை காட்ட வேண்டும். வீடுகள்தோறும் மழைநீர் சேமிப்புக்கான அமைப்புகளைச் செம்மைப்படுத்த வேண்டியது அவசியம். சிறுதுளி பெருவெள்ளம்என்பதை உணர்த்த வேண்டும். மழைநீரை வீணாக்காமல் பயன்படுத்துவது அவசியமானது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை.நிலத்தடி நீர் உயர்வதன் மூலம், பாசனத்திற்கும், குடிநீருக்கும், பிற உபயோகங்களுக்கும் தண்ணீர் தாராளமாக கிடைக்கும்.

    ×