search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அளவீடு"

    • மழைநீர் வடிவதில் சிரமமும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருந்து வந்தது.
    • தனியார் இடம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அளவீடு செய்து ஆய்வு செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே மடவளா கம் சாலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் சிறுபாலம் கல்வெட்டு அமைக்க ப்பட்டது. இதனால் அப்பகுதியில் மழைநீர் வடிவதில் சிரமமும், போக்கு வரத்திற்கு இடையூறாகவும் இருந்து வந்தது. இதனை சீரமைத்திட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சரிசெய்து அகலப்படுத்திட மாவட்ட கலெக்டர் மகாபாரதி நெடு ஞ்சாலைத்துறை அதிகாரிக ளை நேரில் வரவழைத்து அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து கல்வெர்ட் இருக்கும் பகு தியை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், பணிதள மேற்பா ர்வையா ளர் விஜயேந்திரன் மற்றும் நகர சர்வேயர், சாலை ஆய்வாளர் உள்ளிட்டோர் அந்த பகுதியில் நெடுஞ்சா லைத்துறை, நகராட்சி, தனியார் இடம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதனை அளவீடு செய்து ஆய்வு செய்தனர். விரைவில் சீரமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் தெப்பக்குளம், விளைநிலம் அளவீடு செய்துள்ளனர். அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த பேளூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தெப்பகுளம் மற்றும் குறிச்சி கிராமத்திலுள்ள இக்கோவிலுக்குச் சொந்தமான விளைநிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்தது.

    இதனையடுத்து, கோயில் தெப்பக்குளம் மற்றும் விளைநிலத்தை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து நில அளவீடு செய்தனர். தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு இருப்பது தெரியவந்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளனர்.

    வருவாய்த்துறை அதிகாரிகளுடன், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை தனி வட்டாட்சியர் தமிழ் முல்லை, பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் கஸ்தூரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    குமாரபாளையத்தில் நீர் வழித்தட ஆக்கிரமிப்பு குறித்த அளவீடு பணிகள் தொடங்கினர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் குப்பாண்டபாளையம் ஊராட்சி, குளத்துக்காடு பகுதியில் நீர் வழித்தட ஆக்கிரமிப்பு இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, தாசில்தார் தமிழரசி உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், நில அளவையாளர்கள் நீர் வழித்தட ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு பணியை தொடங்கினர். இதில் ஆக்கிரமிப்பு செய்த பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என தெரிகிறது. 

    ×