குட்டையில் மூழ்கி மூதாட்டி பலி

செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்துள்ளார்.
குட்டையில் மூழ்கி மூதாட்டி பலி
Published on

திருவாரூர்:

திருமக்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 75).

மணி இறந்து விட்ட நிலையில் செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் செல்லம்மாள் நேற்று இரவு அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆன்ரோஅஸ்வந்த் ஆரோக்கியராஜ் மற்றும் திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com