search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிக்கை"

    • ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில் கூறியிருந்தார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மக்களுடைய கோரிக்கை கள் எல்லாம் திட்டங்களால் செயல்படுத்துவதற்காக தான் தேர்தல் வாக்குறுதி களை கொடுக்கப்படு கிறது. அதை நம்பித்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.ஆனால் அந்த அடிப்படை தத்துவத்தை இலக்கணத்தை தி.மு.க. அரசு தகர்த்தெறிந்தி ருக்கிறது.

    சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரி யர்கள் மற்றும் கூட்டு நலச் சங்கத்தினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். கணினி, தையல்பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவு பகுதி நேர ஆசிரி யர்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நிரந்தர ஆசிரி யராக ஆக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்கள்.

    இதை நிறைவேற்ற கோரி தொடர்ந்து ஆசிரி யர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். கல்விதான் எதிர்கால சந்ததியை பாதுகாக்கும். அப்படி கல்வியை போதிக் கும் ஆசிரியர்களே இன்றைக்கு உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராட்டம் நடத்து கிறார்கள்?

    இப்படி 520 தேர்தல் வாக்குறுதிகளுக்கும் போராட்டத்தை நடத்தி னால் தமிழ்நாடு போராட்ட களமாக மாறி விடும். ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிக்கும் ஒவ்வொரு பிரிவினர் போராடுகிறார் கள். தேர்தல் வாக்குறுதி களை கொடுத்து அதனை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கிற அரசாக திமுக அரசு உள்ளது.

    ஆகவே தான் இந்த 520 தேர்தல் வாக்குறுதிகளும் காகித பூவாக காட்சிய ளிக்கிறது. உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வரும் இந்த ஆசிரியர்கள் போராட் டத்தை கண்டு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கை களை செவி சாய்த்து கேட்டு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வை உருவாக்கிய தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தார்
    • அண்ணாமலையை நீக்குமாறும் இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர்

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க. அங்கம் வகித்து வந்தது. ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியுற்றது. பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் இதற்கு காரணம் என அக்கட்சியில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனாலும் கூட்டணி தொடர்ந்தது.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வினரின் சித்தாந்த தலைவர்களில் முக்கியமானவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை குறித்து கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. இது அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது.

    இது மட்டுமல்லாமல், "மத்தியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி" எனும் அ.தி.மு.க.வின் முழக்கத்தையும் அண்ணாமலை ஏற்க மறுத்தார். 

    இதை தொடர்ந்து அண்ணாமலையை பா.ஜ.க.வின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதனை தலைமை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், அக்கூட்டணி முறிந்ததாகவும் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர் கே.பி. முனுசாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க.வின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாக பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

    மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை, கடந்த 20.06.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை பற்றியும் அவதூறாக விமர்சித்து வருகிறது.

    இந்த செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், தலைமைக் கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட்கிழமை) கழகப் பொது செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சி தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையே, பா.ஜ.க.வுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என தீர்மானம் இயற்றி அ.தி.மு.க. அக்கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணங்களை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி" என்பதற்கு பதிலாக "பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி" என வாசகங்கள் இடம் பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிப்பது திராவிட இயக்கத்திற்கு செய்யும் துரோகம்.
    • பசும்பொன் பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண்டி யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது-

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக இந்திய ஒன்றியத்தின் ஐனநாய கத்தை நிலைநிறுத்திட எதிர் கட்சிகளின் இந்தியாக் கூட் டணி மக்களிடையே செல் வாக்கு பெற்று வருவதோடு நாளுக்கு நாள் வலிமையாக வருவதை சகித்துக் கொள்ள முடியாத மோடி அரசு மக்களை திசை திருப்பிடும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த போவதாக சொல்கிறது.

    மோடி அரசின் ஊழல் களை மறைப்பதற்காகவும் எதிர்க்கட்சிகளை மிரட்டு வதற்காகவும் ஒரே தேர்தல் என்ற போலி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது .இது ஆர்எஸ்எஸ்சின் 100ஆண்டு கனவு திட்டமாகும் இந்த கனவு நிச்சயமாக பலிக்கப் போவது இல்லை.

    இந்திய நாடு என்பது பல் வேறு ஒன்றியங்களின் கூட் டாச்சி என்ற தத்துவத்திற்கு இது வேட்டு வைப்பதாகும் இதனால் மாநிலங்களின் உரிமைகளை பறித்திடு வதற்கு வழிவகையாகும், ஐனநாயகத்தை சீர்குலைப் பதற்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் ஐனநாயக கட்ட மைப்புக்களை சீர்குலைத் திடும் வகையில் நாட்டை சர்வதிகாரத்திற்கு அழைத்து செல்லும் வகையில் எதே சதிகாரமாக மோடி அரசின் ஒரே தேர்தல் செயல்பாடு அமைந்துள்ளது.

    ஆகவே 2024 நாடாளு மன்ற தேர்தலுடன் தமிழகத் திற்கும் தேர்தல் வந்து விடும் என்ற நட்பாசையில் அண்ணாவின் கொள்கை களை மறந்து திராவிட இயக்க சித்தாதங்களை துறந்து மாநில உரிமை களுக்கு வேட்டு வைக்கும் ஒரே தேர்தல் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதும் பதவி பேரா சைக்காக என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதே திட்டத்தை எடப்பாடி பழனி சாமி முதலமைச்சராக இருந்த போது எதிர்த்தார். இப்போது ஆதரிப்பது பதவி பித்திற்கு என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாக உணர்த்திவிட்டார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் மோடி அரசிற்கு சேவகம் செய்யும் அடிமைக ளாக செயல்பட்டவர்களுக்கு அண்ணாவின் மாநில உரிமைகள் பற்றி தெரிய நியாயம் இல்லை புரட்சித் தலைவரும், பரட்சித்தலைவி யும் மாநில உரிமைகளுக்காக போராடியதை மறந்து பழனிசாமியும், பன்னீர் செல்வமும் போட்டி போட்டு ஒரே தேர்தல் அறிவிப்பை ஆதரிப்பது திராவிட இயக்கத்திற்கும் தலைவர்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

    இந்தியாவில் இனிமேல் தேர்தலே இல்லை சர்வதி கார அதிபர் முறை வரும் என்று மோடி அறிவித்தாலும் அதையும் ஆதரிப்பவர்களாக இவர்கள் செயல்படுவதில் ஆச்சரியம் இல்லை.திராவிட இயக்க உயிர் மூச்சுக் கொள் கையான மாநில சுயாட்சி கொள்கையை டெல்லிக்கு காவு கொடுத்து விட்டு அண்ணா பெயரில் கட்சி நடத்துவது வெட்ககேடான செயலாகும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • விருதுநகரில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    விருதுநகர்

    விருதுநகர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகரில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி கூட்டத்திற்கு வரவுள்ளதை முன்னிட்டு விருதுநகரில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், செல்வமணி ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்.

    தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட செயலாளர், நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பா ளர்கள், மாவட்ட பிரதி நிதிகள், கட்சி முன்னோடி கள் கலந்து கொள்கின்றனர்.

    கூட்டத்தில் விருதுநகரில் நடைபெற உள்ள இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை, தொண்டரில் ஒருவரான எடப்பாடியார் இன்றைக்கு வழிநடத்தி வருகிறார்.
    • சிலர் கட்சிக்கு துரோகம் செய்யும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    கோவை,

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் மேயருமான செ.ம.வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அறிஞர் அண்ணா வழியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய, புரட்சித்தலைவி ஜெயலலிதா வழி நடத்திய அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை, தொண்டரில் ஒருவரான எடப்பாடியார் இன்றைக்கு வழிநடத்தி வருகிறார்.

    அவரை பொதுக்குழுவும், தொண்டர்களும் ஏகமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அ.தி.மு.க இயக்கத்தை வழிநடத்த அங்கீகாரம் வழங்கி உள்ளது.

    சிலர் கட்சிக்கு துரோகம் செய்யும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதற்கு ஏற்ப நல்ல தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களையும், நீதி தேவதையையும் வணங்குகிறோம்.

    2¼ கோடி தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒருசிலர் மேற்கொண்டு வரும் செயல்பாட்டுக்கு நீதிமன்றம், பொதுமக்கள் தண்டனை வழங்க வேண்டும். நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையமும் கட்சி, கொடி, சின்னம் ஆகியவை எடப்பாடி தலைமையில்தான் என்று முடிவு செய்த பிறகும் சிலர் கரைவேட்டி மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

    வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் நம்மில் ஒருவர், நம்மவர் எடப்பாடியார் தலைமையில் எம்.பி தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

    மதுரை மாநாடும், பொதுமக்களும், நீதிமன்றங்களும் நல்ல தீர்ப்பு வழங்கி நாளை நமதே என்று அச்சாரம் வழங்கிய நிலையில் கண் துஞ்சாமல் கழகத்தையும், தமிழ் மக்களையும் காக்கும் எடப்பாடியாருக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மதுரையில் 9 பேர் பலியான சம்பவம் மனதுக்கு வேதனை அளிக்கிறது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது அறிக்கை தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வ தற்காக 90 க்கும் மேற்பட்டோர் கடந்த 17 தேதி யாத்திரைப் பயணிகள் ரெயில் மூலமாக தமிழ்நாட் டிற்கு வந்துள்ளனர்.

    இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.

    இவர்களின் ரெயில் பெட்டி மதுரை ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டபோது, திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தால் 9-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தீக் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கோரச்சம்பவம் மனதிற்கு வேதனை அளிக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீ விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் மரணமடைந்த பக்தர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரத்தில் நாளை நடக்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் குறித்து காதர்பாட்சா முத்துராமலி்ங்கம் எம்.எல்.ஏ. அறிக்கை விடுத்துள்ளார்.
    • தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரத்திற்கு வருகிற 17-தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இது தொடர்பாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

    முதுகுளத்தூர் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு முதுகுளத்தூரில் உள்ள சர்வ விநாயக சாய் மகாலில் நடக்கிறது. பரமக்குடி தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 11 மணிக்கு பரமக்குடி ஏபிஷா மகாலில் நடக்கிறது.

    திருவாடனை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மதியம் 2 மணியளவில் ஆர்.எஸ்.மங்கலம் குட்லு மகாலில் நடக்கிறது. ராமநாதபுரம் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மாலை 4 மணியளவில், ராமநாதபுரம் பாரதிநகர் வைஸ்ராய் மகாலில் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சர், தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள். அவரவர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் பங்கேற்கும் மண்டபம் மீனவர்கள் மாநாட்டில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என தி.மு.க. செயலாளர் அப்துல்ரகுமான் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
    • 5000 பேர் மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மண்டபம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகிற 17, 18-ந் தேதிகளில் வருகை தர உள்ளார். 17-ந்தேதி ராமநாதபுரத்தில் நடை பெறும் முகவர்கள் கூட்டத்திலும், 18-ந் தேதி மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டிலும் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    இது தொடர்பான தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மண்டபம் பேரூ ராட்சி மகாலில் நடந்தது. அவைத்தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பாருக் முன்னிலை வகித்தார்.

    பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் கூட்டத்தில் பேசியதா வது:-

    வருகிற 18-ந்தேதி முதல்-அமைச்சர் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆலோசனையின் பேரில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு கள் செய்து வருகிறோம்.

    இது தவிர மண்டபம் பகுதியில் இருந்து மீனவர் சமுதாயத்தை சேர்ந்த 5000 பேர் மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் சகுபர், முகமது மீரா சாஹிப்,வாசிம் அக்ரம், அயலக அணி துணை அமைப்பாளர் காதர் ஜான் மற்றும் அனைத்து விசைப் படகு சங்க தலைவர்கள் சார்பில் விஜயரூபன்,ஜாகிர் உசேன், பாலசுப்பிர மணியன், செல்வகுமார், சர்புதீன், தி.மு.க. உறுப்பி னர்கள் ராஜகோபால், காந்தக்குமார், குலாம், அயூப்கான், பகுருதீன், வெள்ளைச்சாமி, நிசாந்த,வேதாளை கோவிந்தன், முனியசாமி, செய்யது சுல்தான், வார்டு செயலாளர் கஜினி, ஜியாவு தீன், முனியசாமி, முத்து இருளாண்டி, முன்னாள் நகர் பொருளாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தினர் 2 ஆயிரம் பேர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பா.ஜனதா கட்சியில் இணைகிறார்கள்.
    • சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி அறிக்கை கூறியிருந்தார்.

    பரமக்குடி

    மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நிர் வாகி சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா–வது:-

    கால் நூற்றாண்டு காலம் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அப்பழுக்கற்ற சமு–தாய பணியாற்றி காலத் தின் அருமை கருதி தமிழை–யும், தமிழினத்தையும், உலக–மெங்கும் பறைசாற்றும் பிரதமர் மோடி ஜி தலை–மையில் போலி திராவிட ஆட்சிக்கும், ஊழலுக்கும் அப்பழுக்கற்ற அரசியல் செய்யும் திருவண்ணா–மலை–யார் நாமம் கொண்ட அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' யாத்திரை மூலம் மக்களுக்கு விழிப்பு–ணர்வை ஏற்படுத்தி வருகி–றார்.

    தமிழகம் முழுவதும் வரக் கூடிய யாத்திரை பயணத் தில் பரமக்குடியில் நானும், என்னுடன் இருக்க கூடிய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் இணைந்து பசும்பொன் தேவரின் ஆன்மிகம், தேசி–யத் தையும் தெய்வீ–கத்தையும் இரு கண்களாக கொண்ட சித்தர் வழியில் ஆன்மிக பணியும் அரசியல் பணியும் தொடங்குவதற்கு தயாராகி 2 ஆயிரம் பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைகி–றேன் என்பதை என்னுடன் இருப்பவர்களுக்கும் என் இன மக்களுக்கும் நண்பர்க–ளுக்கும் தெரிவித்து கொள் கிறேன்.

    இவ்வாறு அவர் தெரி–வித்துள்ளார்.

    • பொது நிதி ஒதுக்கீடு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சோலை ராஜா பேசுகையில் பேசுகை யில், முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து விளக்க வேண்டும், பொது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    உடனே மேயர் அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார். இரு தரப்பிலும் கட்சியினர் கூச்சல் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியை சார்ந்த குறைகளை தெரிவித்தனர்.

    அப்போது 26- வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சொக்காயி பேசுகையில், கவுன்சிலர்களுக்கு சம் பளத்தை உயர்த்தி அறிவித்த முதல்-அமைச்சரை பாராட்டி கல்வெட்டு வைக்க வேண்டும் என்றும், எனது வாக்குக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார். உடனே மேயர் இது ஜக்கம்மா வாக்கு என பதிலளித்தார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

    • முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும், அமைச்சருமான சாத் தூர் ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், தமி ழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தந்தையும், விருதுநகரின் தந்தையாரும் முன்னாள் அமைச்சருமான தங்க பாண்டியனின் 26-வது நினைவு தினம் வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி மல்லாங் கிணற்றில் உள்ள அவரது நினைவிடத்தில் அன்றைய தினம் தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியா தை செலுத்தப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டமன்ற உறுப் பினர்கள், தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக் குழு செயற்குழு உறுப்பி னர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் ஊர்வலமாக செல்லாமல் தனித்தனியே மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்தில் முதல்- அமைச்சர் என்ற மன நிலையை மறந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாரை வாய்க்கு வந்த வார்த்தை களால் விமர்சித்துள்ளார்.

    மணிப்பூர் சம்பவம் மிக வும் வேதனை தரத்தக்கது தான். இதற்கு அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 21-ந் தேதி எடப்பாடி யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையாக தனது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.

    ஆனால் எடப்பாடியாரின் அறிக்கை வரவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை யாக, முதல்-அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசக் கூடாது.

    எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வரு கிறது என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பேசி உள்ளார். இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக, 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் தலைவராக எடப்பாடியார் உள்ளார்

    எடப்பாடியாரை பழிப்ப தாக பேசிய பேச்சு 2 கோடி தொண்டர்களையும், 8 கோடி மக்களையும் பழிப்ப தாக உள்ளது. திருச்சி கூட்டத்தில் எடப்பாடியாரை கொத்தடிமை என்று விமர் சித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த பேச்சால் 2 கோடி தொண்டர்களின் மனம் புண்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×