search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    • திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.
    • அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியை பூர்வீகமாக கொண்டவர் மறைந்த துளசி அய்யா வாண்டையார். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் சம்பந்தி.

    இந்நிலையில், நேற்று மாலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவையாறில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் மாலையில் தஞ்சையில் தான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.

    அவருக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    பின்னர் கிருஷ்ண சாமியும், அண்ணாமலை மட்டும் தனி அறைக்கு சென்று சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீண்ட காலமாக கிருஷ்ணசாமி வாண்டையாரை பார்க்க ஆசை. சென்னையில் சந்தித்தபோது, நான் தஞ்சாவூருக்கு வரும்போது, உங்களது வீட்டுக்கு வந்து காபி அருந்துகிறேன் என கூறினேன். அதன்படி வந்துள்ளேன்.

    இவர்களது குடும்பத்தின் மீது எங்களது தலைவர்கள் எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. நான் தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். இந்த சந்திப்பை எல்லாம் அரசியல் வட்டத்துக்குள் போட்டு அடைக்க வேண்டாம். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கிருஷ்ணசாமி வாண்டையார் கூறுகையில்:-

    நான் காங்கிரஸ் கட்சியை விட்டு, பா.ஜனதாவில் இணையமாட்டேன். எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் சந்திக்க வந்துள்ளனர். இதில் வேறு ஏதும் உள்நோக்கம் கிடையாது என்றார். இந்த சந்திப்பின்போது பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் அவரது நினைவிடத்தில் தினமும் பொதுமக்களும் தே.மு.தி.க. தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விலை உயர்ந்த மாலைகளை வாங்கி வைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

    இதன் மூலம் விஜயகாந்த் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ச்சியாக பொதுமக்கள் நேரில் வந்து விஜயாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு நெகழ்ச்சியாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுதான் தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வதாக பெரியவர்கள் கூறுகிறார்கள்.
    • நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும், திருத்தேரோட்டம் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.

    சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் ரதம் பிடிக்கும் போது போலீஸ் நிலையம் சென்று அழைத்து வருவது. அதேபோல் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.

    இந்த பழக்கம் பல நீண்ட வருடங்களாக உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வாதக பெரியவர்கள் கூறுகிறார்கள். இன்னும் இந்த மரியாதை மாறாமல் தொடர்ந்தது.

    இதில் சென்னிமலை இன்ஸ்பெக்டராக புதியதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்பிரபு நான் பல இடங்களில் பணியாற்றி உள்ளேன். இங்கு இந்த நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது. மிகுந்த மன நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. கோவில் நிர்வாகத்திற்கும், தேரோட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான முருகபக்தர்களுக்கும் என்றும் நான் தொண்டு செய்ய சென்னிமலை முருகன் அருள்புரிய வேண்டும் என்றார்.

    • 25வது நாளை கொண்டாடும் வகையில் கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
    • தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம்.

    திருப்பூர்:

    நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்து வெளியான கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் 25 நாட்களாக திரையரங்கில் ஓடி வருகிறது.

    இதனை கொண்டாடும் வகையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் 25-வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சதீஷ் கலந்துகொண்டு திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

    இதனைத்தொடர்ந்து 25வது நாளை கொண்டாடும் வகையில் கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.

    தொடர்ந்து மறைந்த நடிகரும் தே.மு.தி.க., நிறுவனத்தலைவருமான விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறும்படம் ஒன்று திரையிடப்பட்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதையடுத்து நடிகர் சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம் . அந்த வகையில் கான்ஜுரிங் கண்ணப்பன் வெற்றிகரமாக ஓடி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன். மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் மரியாதை செய்வது என்பது அது நடிகர் சங்கத்திற்கு பெருமை. நடிகர் சங்கத்தின் ஒரு அடையாளமே விஜயகாந்து தான். இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
    • காங்கிரஸ் சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள அவரது சிலைக்கு தஞ்சை மாவட்ட (தெற்கு) காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமநாத துளசியய்யா வாண்டையார் மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்களை வழங்கினார்.

    முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயண சாமி, மாவட்ட ஊடகப்பிரி வுத்தலைவர் பிரபு மண்கொண்டார், மாநகர மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல், சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா.வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், கலைஇலக்கிய பிரிவுத்தலைவர் கலைச்செல்வன், ஐ.என்டி.யூ.சி. மணிவாசகம், 7-வது வார்டு செயலாளர் பாபுஜீ, வெங்கட், ராஜூ, வீணை கார்த்திக், சரவணன், மாரியம்மன் கோவில் ராமமூர்த்தி, பின்னையூர் ரவிச்சந்திரன், ரஞ்சித், ரவி, முகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் வீரமாமுனிவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
    • கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது

    திருச்சி,

    தமிழறிஞர் வீரமாமுனிவரின் 343-வது பிறந்தநாள் , கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதையொட்டி திருச்சி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் திருச்சி எடத்தெரு பழைய கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன். மத்திய மண்டல செயலாளர் அலெக்ஸ் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். பாதிரியார் தாமஸ், பாதிரியார் விஜய் பெலவேந்திரன் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

    மாநில துணை அமைப்புச் செயலாளர் பாஸ்டர் சாம்ராஜ், மாநில ஆர்.சி துணை அமைப்புச் செயலாளர் வின்சென்ட், மாவட்ட அவைத் தலைவர்கள் ஜேக்கப் ஆண்ட்ரூஸ், மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் தேவராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் பிரான்சிஸ் சேவியர் ,ஆரோக்கியராஜ் ,ஜெரால்ட், எட்வர்ட், மகளிர் அணி நிர்மலா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டத்தின் 35 ஊராட்சிகளிலும், கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
    • ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் 35 ஊராட்சிகளிலும், கிராமசபா கூட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் கல்லட்டி சமுதாய கூடத்தில் நடந்தது.

    ஊராட்சி தலைவர் டி.டி. சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் சதிஷ் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கிராமசபை கூட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஆன்லைனில் வரி செலுத்துவது, துாய்மை பாரத இயக்கம், தேசிய வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஊட்டியில் நடைபெறும் மெகா வேலைவாயப்பு முகாமில் உல்லத்தி ஊராட்சியில் இருந்து பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் கல்லட்டி சதுக்கம்- சோலடா இடையே ஆத்திக்கல் சாலை வரை நெடுஞ்சாலை பாராமரிப்பு பணிக்க ஒப்படைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • ஐ.ஜே.கே. சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு மாலை அணிவித்தார்.

    மதுரை

    முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஐ.ஜே.கே. கட்சி சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு மாலை அணிவித்தார்.

    மாநில அமைப்பு செய லாளரும், மதுரை மாநகர் மாவட்ட தலைவ ருமான அன்னை இருதய ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், மாநில போராட்டக்குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், மாநில விளம்பரப்பிரிவு செய லாளர் முத்தமிழ் செல்வன், மாநில துணை தலைவர்கள் நெல்லை ஜீவா, இளவரசி, ஆனந்த முருகன்,

    மாநில இளைஞரணி துணை தலைவர் சுரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் துரை பாண்டியன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் காசின், கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, திண்டுக் கல் கிழக்கு மாவட்ட தலை வர் ரஞ்சித்குமார், மாநில தகவல் தொழில்நுட்ப ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டி, பொரு ளாளர் முத்துராஜா, மாநில மகளிரணி துணை செயலா ளர் சகிலாபுரோஸ், மாநகர் மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான்பெனடிக், மாவட் அமைப்பு செயலாளர் அமிர்தகிருஷ்ணன், தென் மண்டல அமைப்பு செய லாளர் வினோத்குமார்,

    மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் பிரபுராஜன், மாநில இளைஞரணி இணை செயலாளர் மோகன்குமார், மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ராபின்சன், வடக்கு மாவட்ட பொருளாளர் சூசை அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • தேவர் கீதம் எனும் பெயரில் தேவர் ஜெயந்திக் கான புதிய பாடலை சே. கருணாஸ் வெளியிட்டார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் நடந்த குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சே.கருணாஸ் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்வில் தொழிலதிபர் கரிகாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுச்செயலாளர் தாமோதரன் கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் முத்து ராமலிங்கம், துணைப் பொதுச் செயலாளர் பெரு மாள், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோகுல கிருஷ்ணன்,

    மாநில மகளிர் அணி தலைவர் சத்யாகரிகாலன், தொழிற்சங்க பிரிவு செயலாளர் காமராஜ்தேவர், ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் சுந்தரபாண்டியன், ராமநாதபுரம் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ராமநாதபுரம் அமைப்பாளர் பொன்.முத்துராமலிங்கம்,

    ராமநாதபுரம் கிழக்கு ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, ராமநாதபுரம் மாவட்டத் துணைச் செயலா ளர் மேற்கு பசும்பொன் சௌந்தர், ராமநாதபுரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சிவ சங்கர்மேத்தா, ராமநாதபுரம் மாணவரணி செயலாளர் ஆகாஷ்சேதுபதி, கமுதி ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார், மாவட்டச் செயலாளர்கள் ராமு, மணி, தென்றல், தர்மா, முருகன், மணி, செல் வகுமார், மஞ்சு, வெள்ளைச் சாமி, ரமேஷ், சாமி உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள் பங்கேற் றனர். தேவர் கீதம் எனும் பெயரில் தேவர் ஜெயந்திக் கான புதிய பாடலை சே. கருணாஸ் வெளியிட்டார்.

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அன்புமணி ராமதாஸ் மரியாதை செலுத்தினார்.
    • பா.ம.க.வினர் பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு அளித்து வரவேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இந்த வருடம் முதன்முறையாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி ராமதாஸ் வருகை தந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு வருகை தந்த பாட்டாளி மக்கள் தலைவர் அன்புமணி ராம தாசுக்கு ராமநாதபுரம் எல் லையில் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமையில் பா.ம. க.வினர் பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு அளித்து வர வேற்றனர்.

    கவுரவத் தலைவர் கோ.க.மணி, சட்டமன்ற உறுப்பி னரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.மூர்த்தி, மாநில பொருளாளர் கவி ஞர் திலக பாமா, சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் வக்கீல் பாலு,

    வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி, ஊட கப் பிரிவு செயலாளர் இயக் குனர் கார்த்திக், தலைவர் நேர்முக உதவியாளர் ஜெய சீலன், சொல்லின் செல்வன் ஆகியோர் மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.கே.தேவர் ராஜா, திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் உமா நாத், பசுமைத்தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் அன்புமணி ராமதாசுடன் சென்று மரியாதை செலுத்தி னர்.

    மதுரையில் இருந்து ராம நாதபுரம் நோக்கி வரும் பொழுது நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் வந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வரவேற்புக்கு 25 வாகனங்கள் சென்றது.பசும்பொன் நோக்கி செல் லும் பொழுது நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அன்புமணி ராமதாஸ் வருகை பசும்பொன் வருகை யையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டியில் இருந்து பசும்பொன் வரை பா.ம.க. கொடிகள் மற்றும் தோரணங்கள் கிழக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகி களால் கட்டப்பட்டிருந்தது.

    ராமநாதபுரத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமையில் அமைப்புச் செயலாளர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா, திருப்புல் லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், பசுமை தாய கத்தின் மாநில துணைச்செய லாளர் பொறியாளர் கர்ண மஹாராஜா, மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக், ராமநாத புரம் நகரச் செயலாளர் பாலா,

    மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேஷ், கீழக் கரை நகர செயலாளர் லோகநாதன், திருப்புல் லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் ஐ.பி.கணேசன், நகர துணை செயலாளர் கார்த்திக், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட சிறு பான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம், மாணவர் சங்க செயலாளர் சந்தோசம்,

    மாவட்ட மாணவர் சங்க அமைப்பாளர் கபில்தேவ், கடலாடி ஒன்றிய செயலா ளர் இருளாண்டி, ராமநா தபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் முகமது ஷரீப் உட்பட ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் திரளாக கலந்து கொண்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பளித்து தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    • தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தப்பட்டது.
    • தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. சார்பில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் தன்ராஜ் பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஒன் றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், ஒன்றிய இளை ஞரணி சந்தனகருப்பு, மாணவரணி யோகேஷ், பொறியாளர் அணி ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி தலைமையில் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், ஒன்றிய செய லாளர் கண்ணதாசன், ஒன்றிய தலைவர் திருப்பதி, கல்லணை மூக்கையா, பொருளாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் சுப்பா ராயலு தலைமையில் செயற் குழு உறுப்பினர் ஜெயமணி, முன்னாள் வட்டார தலை வர் மலைக்கனி ஆகி யோர் முன்னிலையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்ப்பில் மண்டல் தலை வர்கள் சுபாஷ், தங்கதுரை தலைமையில் மாவட்ட பொது செயலாளர் கோவிந்த மூர்த்தி, முன்னி லையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    காளையார்கோவில்

    மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், கொள்கை பரப்பு செய லாளர் மருது அழகுராஜ், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன், கே வி. சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ண குமார் வே.ஆரோக்கியசாமி, சிவகங்கை நகர்கழக செயலாளர் துரைஆனந்த் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ். மாங்குடி எம்.எல்.ஏ. மாவட்ட காங்கிரஸ் தலை வர் சஞ்சய் காந்தி, பொதுக் குழு உறுப்பினர் ஜெய சிம்மன், கணேசன், சன்னாசி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல். ஏ. ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சார்லஸ் , பா.ஜ.க. மேப்பல் சக்தி, மாவட்டத்தலைவர் பில்லப்பன், வழக்கறிஞர் சொக்கலிங்கம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    ×