search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர் நினைவிடத்தில்  கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை
    X

    பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திபாலாஜி மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    தேவர் நினைவிடத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை

    • தேவர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
    • நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டு தோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து வருதல், மொட்டையடிப்பது வழக்கம். இங்கு கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஜெயந்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திபாலாஜி கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி.

    சிவகாசி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு பகுதி செயலாளர் சரவணகுமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன்.

    ராஜபாளையம் நகர செயலாளர் பரமசிவம், விருதுநகர் நகர செயலாளர் முகமது நெய்னார், விருதுநகர் கிழக்கு ஒன்றியசெயலாளர் தர்மலி ங்கம், விருதுநகர்மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராசா, அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல்பாண்டியன்.

    அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாள கருபப்சாமிபாண்டியன், திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×