search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udankudi"

    • தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
    • அனைத்து சாதி மதத்தினரை அரவணைத்து அமைதியான தமிழகம் ஆக மாற்றிஆட்சி செய்து வருகிறார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம் ஏற்பாட்டில் ஏரல் பேரூராட்சி 4 -வது வார்டு அ.ம.மு.க. பெரியசாமி என்ற ஆனந்த் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் விக்னேஷ், சுரேஷ், சுரேஷ் குமார், சதீஷ், மணிகண்டன், மாரியப்பன், அற்புதராஜ் உள்பட பலர் அக்கட்சியில்இருந்து விலகி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து பொன்னாடை அணிவித்து தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

    அப்போது அமைச்சர் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்தி.மு.க. ஆட்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எந்த குறைபாடும் சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து சாதி மதத்தினரை அரவணைத்து அமைதியான தமிழகம் ஆக மாற்றிஆட்சி செய்து வருகிறார்.இவரது திறமையை பார்த்து மாற்று கட்சியினர் கூட்டம் கூட்டமாக தி.மு.க.வில் இணைந்து கொண்டே இருக்கின்றனர்.

    இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணிவண்ணன், ஊராட்சி துணைத்தலைவர் ஜான் உட்பட தி.மு.க.வினர் பலர் உடனிருந்தனர்.


    • போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறான மாடுகளை பிடிக்கும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் வீடு மற்றும் தோட்டங்களில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறான மாடுகளை பிடிக்கும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பிடித்த ஒரு மாட்டை குலசேகரன்பட்டினத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைப்பதற்காக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இப்பணி தொடர்ந்து நடைபெறும். அதனால் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் வீடு மற்றும் தோட்டங்களில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும் அல்லது அடைத்து வைத்து வளர்க்க வேண்டும் என்று உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாபு தெரிவித்தார்.

    • உடன்குடி அருகே அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
    • கடந்த 22-ந்தேதி மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து வாகவிளை செல்லும் மெயின் ரோட்டில் காமராஜர் நகர், ஆண்டி விளை பகுதியில் அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

    இதுபற்றி கடந்த 22-ந்தேதி மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதைப்பார்த்த மின்சார துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை மாற்றினர். இப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன, துணைத்தலைவர் செல்வகுமார், இப்பகுதி மக்கள் ஆகியோர் இதற்கு காரணமான மாலை மலர் நாளிதழ் மற்றும் மின்சார துறைஅதிகாரிகள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆலயப் பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
    • வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முழுமையான வெற்றியைப் பெறும்.

    உடன்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சாதனை விளக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பரமன்குறிச்சி பஜாரில் நடந்தது.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலர் இளங்கோ தலைமை தாங்கினார்.

    தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெசிபொன்ராணி, முன்னாள் எம்.ஏல். ஏ. டேவிட்செல்வின், ஒன்றிய அவைத் தலைவர் ஷேக் முகம்மது, உடன்குடி நகர செயலர் மால்ராஜேஷ், உடன்குடி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    இந்தியாவின் மற்ற மாநிலங்களில்மதவாத அரசியலில் ஈடுபட்டது போல் தமிழகத்திலும் பா.ஜ.க.முயற்சி செய்கிறது.தமிழகத்தில் அக்கட்சியின் மதவாதம் வெற்றிபெறாது. தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம், திருப்பணிகள், தேரோட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.கோவில் பூசாரிகள், பணியாளர்கள் என அனைவருக்கும் பல்வேறு சலுகைகள், ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் அறநிலைய துறை சார்பில் மாதந்தோறும் திருவிளக்கு பூஜை நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.முதல்-அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் சீரிய நடவடிக்கைகளால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆலயப் பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இதனால் மதவாத அரசியலில் ஈடுபட நினைத்த பா.ஜ.க.வின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முழுமையான வெற்றியைப் பெறும்.மக்கள் விரோத நடவடிக்கைகளை செயல்படுத்தும் பா.ஜ.க அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் சரத்பாலா, செந்தூர் பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைசெயலர்கள் மகராஜன், இந்திரா, வழக்கறிஞர் சாத்ராக், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ராமஜெயம், அலாவுதீன், கிருஷ்ணகுமார், ஒன்றிய பொருளாளர் பாலகணேசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ், பரமன்குறிச்சி கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பூங்குமார், புரோஸ்கான், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராமலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாகமாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ் வரவேற்றார். வட்டன்விளை கிளை செயலர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • மணல்திட்டால் படகுகளை தள்ளமுடியாமல் மீனவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • அனைத்திற்கும் ஒரே தீர்வு தூண்டில் வளைவு மட்டுமே.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரை கிராமத்தில் மீனவ மக்கள் அதி கமாக வசித்து வருகின்றனர். இங்கு உள்ள 90 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். சுமார் 500 குடும்பத்தினர் இத்தொழிலை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மீனவர்கள் நாட்டுபடகுகள், கட்டுமரம் வைத்து தான் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    கடற்கரையில் தொடர்ந்து ஏற்படும் மணல் திட்டுகளால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி தான்மீன்பிடிக்க செல்கின்றனர். படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் திண்டாடுகின்றனர். மேலும் கடலில் பிடித்த மீன்களை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தலையில் சுமந்து கொண்டு வருவது மிக மிக வேதனையாக உள்ளது.

    மணல்திட்டால் படகுகளை தள்ளமுடியாமல் மீனவர்கள் கடும் அவதி படுகின்றனர். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு தூண்டில் வளைவு மட்டுமே. எனவே உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் விரும்புகின்றனர்.

    • ஒரு மாடு எதிரே வந்ததால் சுடலைமணி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
    • மற்றொரு மாடு சாலையில் கிடந்த சுடலைமணியை கொம்புகளால் முட்டியது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஸ்டாலின்நகரை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 55). பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சூர்யகலா. இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்நிலையில் சுடலைமணி நேற்று இரவு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் உடன்குடி பஜாருக்கு சென்றார். பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினார்.

    அவர் சந்தையடி ரோடு பகுதியில் வந்தபோது சாலையில் ஏராளமான மாடுகள் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு மாடு எதிரே வந்ததால் சுடலைமணி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அந்தநேரத்தில் மற்றொரு மாடு சாலையில் கிடந்த சுடலைமணியை கொம்புகளால் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குலசேகரன்பட்டினம் போலீசார் பலியான சுடலைமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, உடன்குடி பஜார் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சாலையில் மாடுகள் அமர்ந்து கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

    பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து சென்றாலும் தொடர்ந்து அதே நிலை நடந்து கொண்டு இருக்கிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். 

    • உடன்குடியில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
    • குளிர்பானங்களை குறைந்த விலையில் விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில்கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாகவே உள்ளது. கோடையை மிஞ்சும் அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    காலை 10 மணிக்குமேல்மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியேவர மக்கள் தயங்குகின்றனர்.அவசர தேவைக்கு மட்டுமே வெளியில் வருகின்றனர். குளிர்பான கடைகளில் கரும்புசாறு, பழச்சாறு, எலுமிச்சை சாறு என பல வகையான சாறுகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    குளிர்பானங்களை குறைந்த விலையில்விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை இதனால் வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    • உடன்குடியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 20 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
    • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 20 நாள் பண்புப் பயிற்சி முகாம் நடந்தது.தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.

    முகாமில் கராத்தே, சிலம்பம், யோகா, ஒழுக்கம், கட்டுப்பாடு, இந்து ஒற்றுமை, பாரத நாட்டின் பழம்பெருமைகள் ஆகியவை கற்றுத்தரப்பட்டது.முகாமின் நிறைவு விழாவிற்கு ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ராஜா தலைமை தாங்கினார்.

    முகாமின் வரவேற்புக்குழு தலைவர் மாணிக்கவாசகம் வரவேற்றார்.ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கொம்பையா, தொழிலதிபர்கள் வேம்பு, சிவபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்.எஸ்.எஸ். மாநில பொருளாளர் கணபதி சுப்பிரமணியன் பேசும்போது, அனுமார் சஞ்சீவி மலை கொண்டு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது போல கொரோனா கால கட்டத்தில் உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உலகையே காப்பாற்றிய பெருமை நமது நாட்டுக்கு உள்ளது.

    இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட துறைகளில் ஆர்.எஸ்.எஸ். திறம்பட பணியாற்றி வருகிறது.40 நாடுகளில் ஆர்.எஸ்.எஸ். பல்வேறு பெயர்களில் சேவைப் பணியாற்றுகிறது.

    இயற்கை, செயற்கை பேரிடர் காலங்களில் நாட்டிற்கு சேவையாற்ற முதலில் களமிறங்குவது ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் எனக் குறிப்பிட்டார். இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார்,

    பா.ஜ.க. மாநில வர்த்தக அணி தலைவர் ராஜக்கண்ணன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலர் சிவமுருகன் ஆதித்தன், சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம், ஆர்.எஸ்.எஸ் மாவட்ட செயலர் லிங்கபாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 25 கிராமங்களில் 10 நாட்கள் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு விழா குருநாதபுரத்தில் நடைபெற்றது.
    • இந்து ஒற்றுமை, பாரத நாட்டின்பழம்பெருமை ஆகியவை குறித்து வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணிகள் சார்பில் ஒன்றிய பகுதியில்25 கிராமங்களில் 10 நாட்கள் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு விழா குருநாதபுரத்தில் நடைபெற்றது.

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலர் கேசவன் தலைமை தாங்கி பண்பாட்டு வகுப்பில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள், ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    பண்பாட்டு வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், திருவாசகம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், இந்து ஒற்றுமை, பாரத நாட்டின்பழம்பெருமை ஆகியவை குறித்து வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்து அன்னையர் முன்னணியின் மாவட்ட தலைவி சந்தனக்கனி, மாவட்ட செயலர் சொர்ணசுந்தரி, ஒன்றிய செயலர் ஜெயசித்ரா, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் ரதீஸ்வரி, மல்லிகா, சக்திக்கனி, செல்வலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இந்து அன்னையர் முன்னணி கிளை பொறு ப்பாளர்கள் செல்வகுமாரி, சிங்காரக்கனி, கலைராணி, ரதிதேவி, பரிதா, வனசுந்தரி, மாசானபேச்சி, வினிதா, பத்மா, மணிகண்டேஸ்வரி, தமிழ்செல்வி, காயாமொழி இந்து முன்னணி தலைவர் திருமால், பாஸ்கரன், அபிராஜன், அருண் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • உடன்குடி புதுமனையில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலையின் இரு புறமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டன.
    • உடனடி நடவடிக்கைக்கு பயணிகளும் பாராட்டு தெரிவித்தனர்

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட உடன்குடி புதுமனையில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலையின் இருபக்கமும் உடை மரங்கள் வளர்ந்து இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனங்களும் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் இடையூறாக இருந்தது.

    இதுபற்றி இப்பகுதி மக்கள் பேரூராட்சியில் புகார் செய்தனர். தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் அலி வேண்டுகோள்படி பேரூராட்சி செயல் அதுவலர் பாபு, பேரூராட்சி ஊழியர்கள் ஆகியோர் ஜே.சி.பி. எந்திரத்துடன் சென்று சாலையின் இருபக்கமும் உள்ள உடைமரங்களை வெட்டி அப்புறப்படுத்தி சீர்செய்தனர்.

    இப்பகுதியில் உள்ள பொதுமக்களும், இவ்வழியாக செல்லும் பயணிகளும் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த வார்டு உறுப்பினர் சபானா தமீம் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார்.

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வருகிற 14-ந்தேதி மகா மண்டபம் கட்டும் பணி தொடங்குகிறது.
    • இதனை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். இக்கோவிலில் பக்தர்கள்சாமிதரிசனம் செய்வதற்காக முன் முகப்புமண்டபம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தண்டுபத்து சண்முக நாடார்- பிச்சைமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் இவர்களது மகன் ராமசாமி என்பவர் நன்கொடையாக மண்டபம் கட்டி கொடுக்கமுடிவு செய்துள்ளார். இதை யொட்டி மண்டபம் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத்துறையை சேர்ந்த இணை ஆணையர் அன்புமணி, நகைசரிபார்க்கும் துணை ஆணையர் வெங்கடேஷ், ஆய்வாளர் பகவதி மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் ஆகியோர் மண்டபம் உருவாகும் இடங்களை சுற்றிப்பார்த்து ஆய்வு செய்தனர். பின்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளகளிடம் கூறியதாவது:-

    மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முன் மண்டபம் கட்டும் பணியை மண்டபத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் அவரது பெற்றோர்களின் அறக்கட்டளை சார்பில் கட்டிகொடுக்க முடிவு செய்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த மண்டபம் கட்டும் தொடக்க விழா வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இக்கோவிலில் வைத்து நடைபெறுகிறது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நட்டி, முன்மண்டபம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார்.

    வருகிற தசரா திருவிழாவிற்கு முன்பு இந்த மண்டபத்தை கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. மண்டபம் கட்டுவதற்கு பக்தர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சுவாமி தரிசனம் செய்த அமைச்சரை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன் காடு கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து கோவில் சார்பில்பூரணகும்ப மரியாதையுடன் அமைச்சரை வரவேற்றனர். அவருடன் ஏராளமான தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக வந்திருந்தனர்.

    ×