search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில்  ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    உடன்குடியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்

    • உடன்குடியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 20 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
    • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 20 நாள் பண்புப் பயிற்சி முகாம் நடந்தது.தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.

    முகாமில் கராத்தே, சிலம்பம், யோகா, ஒழுக்கம், கட்டுப்பாடு, இந்து ஒற்றுமை, பாரத நாட்டின் பழம்பெருமைகள் ஆகியவை கற்றுத்தரப்பட்டது.முகாமின் நிறைவு விழாவிற்கு ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ராஜா தலைமை தாங்கினார்.

    முகாமின் வரவேற்புக்குழு தலைவர் மாணிக்கவாசகம் வரவேற்றார்.ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கொம்பையா, தொழிலதிபர்கள் வேம்பு, சிவபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்.எஸ்.எஸ். மாநில பொருளாளர் கணபதி சுப்பிரமணியன் பேசும்போது, அனுமார் சஞ்சீவி மலை கொண்டு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது போல கொரோனா கால கட்டத்தில் உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உலகையே காப்பாற்றிய பெருமை நமது நாட்டுக்கு உள்ளது.

    இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட துறைகளில் ஆர்.எஸ்.எஸ். திறம்பட பணியாற்றி வருகிறது.40 நாடுகளில் ஆர்.எஸ்.எஸ். பல்வேறு பெயர்களில் சேவைப் பணியாற்றுகிறது.

    இயற்கை, செயற்கை பேரிடர் காலங்களில் நாட்டிற்கு சேவையாற்ற முதலில் களமிறங்குவது ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் எனக் குறிப்பிட்டார். இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார்,

    பா.ஜ.க. மாநில வர்த்தக அணி தலைவர் ராஜக்கண்ணன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலர் சிவமுருகன் ஆதித்தன், சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம், ஆர்.எஸ்.எஸ் மாவட்ட செயலர் லிங்கபாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×