search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி குருநாதபுரத்தில் இந்துசமய பண்பாடு வகுப்பு நிறைவு விழா
    X

     இந்துசமய பண்பாட்டு வகுப்பு நிறைவு விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 

    உடன்குடி குருநாதபுரத்தில் இந்துசமய பண்பாடு வகுப்பு நிறைவு விழா

    • 25 கிராமங்களில் 10 நாட்கள் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு விழா குருநாதபுரத்தில் நடைபெற்றது.
    • இந்து ஒற்றுமை, பாரத நாட்டின்பழம்பெருமை ஆகியவை குறித்து வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணிகள் சார்பில் ஒன்றிய பகுதியில்25 கிராமங்களில் 10 நாட்கள் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு விழா குருநாதபுரத்தில் நடைபெற்றது.

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலர் கேசவன் தலைமை தாங்கி பண்பாட்டு வகுப்பில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள், ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    பண்பாட்டு வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், திருவாசகம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், இந்து ஒற்றுமை, பாரத நாட்டின்பழம்பெருமை ஆகியவை குறித்து வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்து அன்னையர் முன்னணியின் மாவட்ட தலைவி சந்தனக்கனி, மாவட்ட செயலர் சொர்ணசுந்தரி, ஒன்றிய செயலர் ஜெயசித்ரா, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் ரதீஸ்வரி, மல்லிகா, சக்திக்கனி, செல்வலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இந்து அன்னையர் முன்னணி கிளை பொறு ப்பாளர்கள் செல்வகுமாரி, சிங்காரக்கனி, கலைராணி, ரதிதேவி, பரிதா, வனசுந்தரி, மாசானபேச்சி, வினிதா, பத்மா, மணிகண்டேஸ்வரி, தமிழ்செல்வி, காயாமொழி இந்து முன்னணி தலைவர் திருமால், பாஸ்கரன், அபிராஜன், அருண் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×