search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udankudi"

    • தொடர்ந்து சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், பீல்டர், சிறந்த நன்னடத்தை அணிக்கான பரிசு, தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.
    • முன்னதாக இளையோருக்கான போட்டியில் ஆர்எஸ்புரம் அணியினர் முதல்பரிசும், மருதூர்கரை அணியினர் 2-ம் பரிசினை பெற்றனர். பார்வையாளர்களுக்கான குலுக்கல் போட்டியில் முதல் பரிசு சைக்கிள், 2-ம் பரிசு டிரஸ்ஸிங் டேபிள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள சடையநேரி மைதானத்தில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் வாழத்தூர், எம்.எம்.ஸ்போர்ட்ஸ் கிளப், மரியம்மாள்புரம், மெய்யூர், ரைசிங் லெவன், சன்லயன்ஸ் சந்தையடியூர், குலசை ஹசானியா, பரமன்குறிச்சி ராயல்புல்ஸ், ராயல்கிளப் புதுவை, ஆர்எஸ்புரம், திசையன்விளை 11 லெஜன்ட்ஸ், மற்றும் தோரணை தோழர்கள் அணியினர் கலந்து கொண்டு 3 நாட்கள் விளையாடினர்.

    இதில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ராயல்கிளப் புதுவை அணியினருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பையை மெஞ்ஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருபாராஜாபிரபு வழங்கினார். 2-ம் இடம்பிடித்த தோரணை தோழர்கள் அணியிணருக்கு ரூ.15ஆயிரம் வெற்றிக்கோப்பையை உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் பாலசிங் வழங்கினார்.

    3-ம் இடம் பிடித்த ஆர்.எஸ்.புரம் அணியினருக்கு ரூ.7ஆயிரத்தை மருதூர்கரை மனோஜ், 4-ம் இடம் பிடித்த எம்.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு ரூ.4ஆயிரத்தை மெக்கானிக் பாண்டி வழங்கினார்.

    தொடர்ந்து சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், பீல்டர், சிறந்த நன்னடத்தை அணிக்கான பரிசு, தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

    முன்னதாக இளையோருக்கான போட்டியில் ஆர்எஸ்புரம் அணியினர் முதல்பரிசும், மருதூர்கரை அணியினர் 2-ம் பரிசினை பெற்றனர். பார்வையாளர்களுக்கான குலுக்கல் போட்டியில் முதல் பரிசு சைக்கிள், 2-ம் பரிசு டிரஸ்ஸிங் டேபிள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஏற்பாடுகளை தோரணை தோழர்கள் அணியினர் செய்திருந்தனர்.

    • உடன்குடி சிவலூர் காலனியில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவி லில் வளைகாப்புவிழா நடை பெற்றது.
    • பெண்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி சிவலூர் காலனியில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவிலில் வளைகாப்புவிழா நடை பெற்றது.

    பெண்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

    இதனை அடுத்து அம்மனுக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு 7 வகை பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஊர் தலைவர் பாலமுருகன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    இதில் ரகு, அஜித், மாதேஷ், மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை மற்றும் நாளை மறுநாள் விழாவில் சுற்றுபுற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • 3-ந்தேதி காலை 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு சிறப்பு மகுட நிகழ்ச்சி, 11 மணிக்கு கும்பம் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    உடன்குடி:

    குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை விழா ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆடிக் கொடை விழா இன்றுஇரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு வில்லிசை, நாளை (2-ந்தேதி) காலை 7 மணி, காலை 8.30 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 10 மணிக்கு கும்பம் தெரு வீதி வருதல், வில்லிசை மகுட இசை, மதியம் 12 மணிக்கு அன்னதானம்,

    இரவு 8 மணிக்கு வில்லிசை, மகுட இசை இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி வருதல் மற்றும் இரவு முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.3-ந்தேதி காலை 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு சிறப்பு மகுட நிகழ்ச்சி, 11 மணிக்கு கும்பம் வீதி உலா, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கிறது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் விழாவில் சுற்றுபுற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கொடை விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தரிசாகஉள்ள தங்களதுநிலங்களை சீர்படுத்திவிவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
    • சொட்டுநீர்பாசனம் அமைக்க ஓரு விவசாயிக்கு அதிக பட்சம் 12.5ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.

    உடன்குடி:

    உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில்தரிசு நிலங்களை விளை நிலமாக்கும் திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100சதவீதமானியம் வழங்கப்படும் என வேளாண்மைஉதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர், உடன்குடிவட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்தரிசு நிலங்களை விளை நிலமாக்கும்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது.

    கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தரிசாகஉள்ள தங்களதுநிலங்களை சீர்படுத்திவிவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இத்திட்டத்தில்சொந்த நிலம் உள்ள ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 5ஏக்கர் வரை மானியம்வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்தேர்வு செய்யப்பட்ட பள்ளிப்பத்து, மூலக்கரை, வீரமாணிக்கம், பிச்சிவிளை, வெங்கட்ராமானுஜபுரம், சிறுநாடார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, சீர்காட்சி மற்றும் மணப்பாடு கிராம பஞ்சாயத்தில்உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    இதர கிராம விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மேலும் தரிசுகளை சீர்படுத்தி சாகுபடி செய்யப்படும் பயிருக்கு ஏற்பபிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100சத மானியம், இதர விவசாயிகளுக்கு 75சதவீதம் மானியமும் மற்றும் துணைநிலை நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் புதியதாக ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், மற்றும் நீர்சேமிக்கும் தொட்டி அமைக்க மானியமும் விதிமுறைக்குஏற்ப வழங்கப்படுகிறது.

    சொட்டுநீர்பாசனம் அமைக்க ஓரு விவசாயிக்கு அதிக பட்சம் 12.5ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் ஆதார்கார்டுநகல், ஸ்மார்ட்கார்டு நகல், வங்கி கணக்கு புத்தகநகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும்தரிசு அடங்கல், கணிணி பட்டாஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறவும்என அறிக்கையில் கூறியுள்ளார்.

    • உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து கிராம ரோடுகளும் விரைவில் மரமாத்து செய்யப்படும்.
    • மறைந்த அப்துல் கலாம் படத்திற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கத்தில் நடந்தது.யூனியன் தலைவர்பாலசிங் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மீராசிராசுதீன், ஆணையாளர்கள் ஜான்சிராணி, சசிகுமார், மேலாளாளர் வாவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லோ போரின், முருகேஸ்வரி ராஜதுரை, ஜெயகமலா, தங்க லெட்சுமி, மெல்சி ஷாலினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பொது கழிப்பிடம்

    கூட்டத்தில் வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டம் 2022- 23-ம் ஆண்டு 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் மூலம் செட்டியா பத்து ஊராட்சி அருணாச்சலபுரம் - செட்டியாபத்து பெருமாள் கோவில் வரை தார் ரோடு, குதிரை மொழி ஊராட்சி சுந்தராச்சியம்மன் கோவில் அருகேயும், பரமன்குறிச்சி ஊராட்சி வீரப்ப நாடார்குடியிருப்பு அம்மன் கோவில் அருகேயும், செம்மறிகுளம் ஊராட்சி செம்மறிகுளம் அம்மன் கோவில் அருகே என மூன்று இடங்களில் பொது கழிப்பிடம் கட்ட, லெட்சுமிபுரம் ஊராட் பூலோகபாண்டி விளையில் 60 ஆயிரம் சிலிட்டர் ஒஹச்டி அமைத்து பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல் என மொத்தம் ரூ.57 லட்சத்து 16 ஆயிரத்து 680 நிதியில் பணி தேர்வு செய்யப்பட்டது.

    குடிநீர் தொட்டி

    மேலும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து குதிரை மொழி ஊராட்சி சேலை குடியிருப்பில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ரூ.12 லட்சத்து 89 ஆயிரம், மெஞ்ஞானபுரம் ஊராட்சி அஸ்ரியா நகரில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட ரூ.15 லட்சத்து 21 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    யூனியனில் உள்ள பள்ளிகளின் பழுதான கட்டிடம் கட்ட, கழிப்பறை கட்டுதல் உட்பட 9 பணிகளுக்கு ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் ஒதுக்கீடு மற்றும் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    பின்னர் விவாதம் நடந்தது. அப்பேது, முருங்கை மகாராஜா (அ.தி.மு.க., கவுன்சிலர்) பேசுகையில்,

    உடன்குடி யூனியனில் கிராம பகுதிகளில் உள்ள பல ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதை உடனடியாக மரமாத்து செய்ய வேண்டும் என்றார்.

    முருகேஸ்வரி ராஜா துரை (அ.தி.மு.க.,) பேசுகையில்,

    இந்தியாவில் தசரா திருவிழாவில் 2- வது இடம் வகிக்கும் குலசேகரன் பட்டினம் தசரா திருவிழாவில் கலந்து கொள்ள சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவலினால் தசரா திரு விழாவில் பக்தர்கள் அனுமதியில்லை.

    இதனால் குலசை நகரின் உட்கட்டமைப்பு பணிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக தசரா பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் முத்தாரம்மன் கோவில் கீழ தெரு முதல் கடற்கரைக்கு செல்லும் தார் ரோடு, கோவில் கீழ்புறம் தும்பு மில்லில் இருந்து கடற்கரை செல்லும் ரோடு, வடக்கூரில் இருந்து கடற்கரைக்கு செல்லும் தார் ரோடு ஆகிய மூன்று ரோடுகளும் பக்தர்கள் பயன்படுத்தும் மிக முக்கிய ரோடுகள்.

    தற்சமயம் இந்த ரோடுகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் உள்கட்டமைப்பு பணியாக யாதவர் தெரு, கல்லா மொழி வடக்கு தெரு, தெற்கு தெருவில் சிமெண்ட் ரோடும், குலசை அண்ணா சிலை அம்மன் கோயில் அருகில் பேவர் பிளாக் அமைக்க வேண்டும் குறிப்பாக தசரா திருவிழாவிற்கு முன்பாக ரோடு, குடிநீர், பைப் லைன், கழிவறை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை இன்று முதல் நிர்வாகம் தொடங்க வேண்டும் என பேசினார்.

    இதற்கு பதிலளித்து பாலசிங் பேசியதாவது:-

    உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து கிராம ரோடுகளும் விரைவில் மரமாத்து செய்யப்படும். இந்த ஆண்டு தசரா திருவிழாவில் அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி தற்போது இருந்து விரிவான திட்டம் வகுத்து பணிகள் தொடங்கப்படவுள்ளது என பேசினார்.

    முன்னதாக மறைந்த அப்துல் கலாம் படத்திற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    • மின்சார கம்பிகளுக்கு இடையூறான மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மின் வாரிய ஊழியர்களின் பணியை பொதுமக்கள் பாராட்டினர்.

    உடன்குடி:

    உடன்குடி நகரப் பகுதியில் அவ்வபோது பலத்த காற்று வீசும் போது, மின்சார கம்பிகளுக்கு இடையே செல்லும் மரக்கிளைகள் மின்சார கம்பியில் தேய்த்து அடிக்கடி பழுதாகி மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மின்சார கம்பிகளுக்கு இடையூறான மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று உடன்குடி பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அப்புறபடுத்தும் பணியில் மின்சார துறையினர் செயல்பட்டனர். ஒவ்வொரு டிரான்ஸ்பார்மாக மின்சாரத்தை நிறுத்தி இடையூறான மரக்கிளைகளை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்களது பணியை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • மணலை எந்த சூழ்நிலையம் எடுத்து வெளியே கொண்டு செல்லக்கூடாது.
    • தண்ணீர் வரும் கால்வாய்களை பராமரிப்பு செய்ய வேண்டும்.

    உடன்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச் சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உடன்குடி வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட சடையனேரிகுளம், தாங்கை குளம், தருவைகுளம் மற்றும் ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய குளங்கள், குட்டைகள் ஆகியவற்றை மழை காலங்களுக்கு முன்பு முழுமையாக பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.

    இவைகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களையும் பராமரிப்பு செய்ய வேண்டும். இங்கே எடுக்கப் படும் மணலை கரையில் வைத்து கரையை உயர்த்த வேண்டும். அங்குள்ள மணலை எந்த சூழ்நிலையம் எடுத்து வெளியே கொண்டு செல்லக்கூடாது. இப்பகுதியில் உள்ள மண் வளம் மற்றும் மணல் பாதுகாக்க பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • கடற்கரையில் தொடர்ந்து ஏற்படும் மணல் திட்டுகளால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி தான்மீன்பிடிக்க செல்கின்றனர்.
    • எனவே தூண்டில் வளைவு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் விரும்புகின்றனர்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் உடன்குடி ஒன்றியம் மணப்பாடு கடற்கரை கிராமம் பெரும்பாலான மீனவ மக்கள் வசிக்கும் கிராமம் ஆகும்.

    மலை திட்டுகள்

    இங்குஉள்ள 90சதவீதம் மக்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்கின்றனர். சுமார் 500 குடும்பத்தினர் இத்தொழிலை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மீனவர்கள் நாட்டுப்படகுகள், கட்டுமரம் வைத்து தான் மீன்பிடி தொழில் செய்கின்றனர். கடற்கரையில் தொடர்ந்து ஏற்படும் மணல் திட்டுகளால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி தான்மீன்பிடிக்க செல்கின்றனர். படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் திண்டாடுகின்றனர்.

    அவதி

    மணல்திட்டால் படகுகளை தள்ளமுடியாமல் மீனவர்கள் கடும் அவதிபடுகின்றனர் ஒருபுறம், மறுபுறம்மீன்களை சுமந்து செல்லும் நிலை‌யில் தவிக்கின்றனர். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு தூண்டில் வளைவு மட்டுமே. எனவே தூண்டில் வளைவு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் விரும்புகின்றனர். கடலில் உருவாகும் மணல் திட்டுகளை ராட்சச எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி கடற்கரையில் குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர்.

    • தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை தாங்கினார்.
    • சமுதாய நலசெவிலியர் பாக்கியவதி, கிராம சுகாதார செவிலியர் மாலதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் வளரும் பருவத்தினருக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை தாங்கினார்.

    மேலும் அவர், பள்ளி மாணவ- மாணவிகள், வளரும் பருவத்தினருக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள், அதனை எப்படி தவிர்த்தல், புகார் செய்யும் விதம், வீடுகள், சுற்றுப்புறங்கள், சாலைகளில் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்க நெறிகள் குறித்து விரிவாக பேசினார். கலந்துரையாடல், செய்முறைப் பயிற்சிகள் நடைபெற்றது.சமுதாய நலசெவிலியர் பாக்கியவதி, கிராம சுகாதார செவிலியர் மாலதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • உடன்குடி துணைமின்நிலை யத்திலிருந்து மின்விநியோகம் தொடங்கும் போது வீடுகளுக்குத் தனியாகவும், விவசாய மின்மோட்டார்களுக்குத் தனியாகவும் மின்விநியோகம் செய்ய முடியும்.
    • மேலும் மின்சாரத்தை மலிவு விலையிலும் வழங்கமுடியும்.

    உடன்குடி:

    உடன்குடி தேரியூர் துணை மின்நிலைய வளாகத்தில் ரூ.4.22 கோடி மதிப்பில் கூடுதல் துணை மின் நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவிற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார்.

    செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், மின்சார மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர் ரெமோனா, திருச்செந்தூர் செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உடன்குடி உதவி செயற்பொறியாளர் ராம்மோகன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் சந்தைடியூர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரூ.4.22கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    மறு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மான துறைக்கான திட்டம் என்பது விவசாயம் தவிர்த்த ஏனைய மின் இணைப்புகளுக்கும், விவசாய பணிகளுக்கும் தடையற்ற மின்சாரத்தை தனித்தனி வழித்தடம் மூலம் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சீரான வகையில் வழங்குவதை உறுதிசெய்யும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது வீடுகளுக்கு 24மணி நேரமும் மின்சார விநியோகத்தை உறுதி செய்ய முடியும், அதே போல் விவசாயத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மின்விநியோகம் தடையின்றி கிடைக்கும்.

    மேலும் மின்சாரத்தை மலிவு விலையிலும் வழங்கமுடியும். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் மின்பாதைகள் பிரிக்கப்பட்டு புதிய விநியோக மின்மாற்றிகளுடன் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடற்பாடுகளை தாங்கி நிற்கும் வகையில் புதிய மின்வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளது.

    இத்திட்டம் முழுமை அடைந்து உடன்குடி துணைமின்நிலை யத்திலிருந்து மின்விநியோகம் தொடங்கும் போது வீடுகளுக்குத் தனியாகவும், விவசாய மின்மோட்டார்களுக்குத் தனியாகவும் மின்விநியோகம் செய்ய முடியும்.

    மாவட்டத்திலேயே உடன்குடி துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் 11கேவி பரமன்குறிச்சி மின்பாதையில் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது செட்டியாபத்து, வாத்தியார்குடியிருப்பு தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, குருநாதபுரம், சீருடையார்புரம் கிராமங்களைச் சேர்ந்த 4300 பயனீட்டார்களும், 760 விவசாயிகளும் பயனடைவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் நாசரேத் முத்துகிருஷ்ணன், ஆறுமுகநேரி ஜெயக்குமார், சாத்தான்குளம் ரவிந்திரகுமார், ஆறுமுகநேரி முத்துகணேசன், தூத்துக்குடி வேலாயுதம், உதவி பொறியாளர்கள் மகாலிங்கம், ராஜேஷ், வேலாயுதம், இம்மானுவேல், நிர்வாக அலுவலர் கலைக்கண்ணன், திருச்செந்துர் நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஆவின் சேர்மன் சுரேஷ், தி.மு.க. மாவட்ட மகளிரணி ஜெஸிபொன்ராணி,

    இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட துணைஅமைப்பாளர்கள் விவசாயஅணி சக்திவேல், வர்த்தகஅணி சந்தையடியூர் ரவிராஜா, மாணவரணி அலாவூதீன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாபிரபு, மகேஸ்வரன், ஜெயபிரகாஷ், ஹீபர், தாண்டவன்காடு தன்ராஜ், பேரூராட்சி நியமனக்குழு ஜான்பாஸ்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பேரூராட்சி துணைச்செயலாளர் தங்கம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், நகர இளைஞரணி செயலாளர் அஜய், ஒன்றிய பிரதிநிதி ஷேக்முகமது, முருகன், ராஜேஸ்வரி, கோமதி நாயகம், தினகர், எள்ளுவிளை கிளை செயலாளர் மோகன், ஒன்றிய தகவல்தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சேதமடைந்த கம்பிகளை சீரமைத்தல் பணி நடைபெற உள்ளது.
    • நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

    உடன்குடி:

    திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், பெரியதாழை நாசரேத் உடன்குடி பகுதிகளில் சீரான மின்சாரவிநியோகம் செய்வதற்காக முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்வழித்தடங்களில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்த கம்பிகளை சீரமைத்தல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணாநகர், குறிஞ்சிநகர், திருச்செந்தூர், காயல்பட்டணம் மெயின் ரோடு, வன்னியங்காடு, பள்ளத்தூர் மணக்காடு, வன்னிமாநகரம், குடியிருப்புவிளை, கீழபள்ளிபத்து, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், நா.முத்தையாபுரம், பிச்சிவிளை,

    நாலுமூலைக்கிணறு, காட்டுமொகுதூம்பள்ளி, எஸ்.எஸ்.கோவில்தெரு, அங்கமங்கலம், சுந்தர்ராஜபுரம், கோட்டார்விளை, விஜயராம புரம், சிறப்பூர், பண்டாரபுரம், கட்டாரிமங்கலம், அறிவான்மொழி, தேரிப்பனை, வைத்தியலிங்கபுரம், ஆதிநாபுரம், செம்பூர், லெட்சுமிபுரம், மெஞ்ஞானபுரம், நங்கைமொழி, இலங்கநாதபுரம், அனைத்தலை, அடைக்கலாபுரம் (மெஞ்ஞா னபுரம்), குமாரசாமிபுரம், மருதூர்கரை, உடன்குடி புதுத்தெரு, களம்புதுத்தெரு சந்தைகடைதெரு, கூளத்தெரு மேற்கு, மெய்யூர், கடாட்சபுரம், உசரத்துகுடியிருப்பு, தோப்புவிளை, பெரியதாழை, செட்டிவிளை மற்றும் தச்சன்விளை ஆகிய பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் விநியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் கூறியுள்ளார்.

    • குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் 1908, விழிப்புணர்வு பதாகைகள் ஆகியவை குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் பேசினார்.
    • பேரூராட்சி, மஸ்தூர் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சியில் குழுந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் ஆலுவலர் பாபு முன்னிலை வகித்தார். குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது, உறவினர்கள், பக்கத்து வீட்டார், பள்ளி வாகனம் ஓட்டுபவர்கள் உள்ளிட்டவர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள், அதனைத் தவிர்க்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் 1908,விழிப்புணர்வு பதாகைகள் ஆகியவை குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் பேசினார்.இதில் பேரூராட்சி, மஸ்தூர் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×